Thursday, February 19, 2015

"  666  "
" 666 " ! இந்த எண் இந்துத்வா  காரர்களுக்கு பிடிக்காததாகும் ! 1192ம் ஆண்டிலிருந்து `1858ம் ஆண்டுவரை சுமார் 666 வருடங்கள் டில்லியில் ஏதாவது ஒரு சுல்தான் ஆட்சி புரந்து வந்த காலம் அது !

இந்த காலத்தில் தான் சிவன் கோவிலை இடித்து "தாஜ்மகாலை " கட்டினார்கள் !

ராமர் பிறந்த இடத்தை கைப்பற்றி மசூதியைக் கட்டினார்கள் ! இவற்றை போன்று எண்ணற்ற அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்காதவரை அவர்களுக்கு நிம்மதி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் !

--------------------------------------------------------------------------------------------------------------------------

நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது சரித்திரம்,பூகோளம் என்று இரண்டு வகுப்புகள் உண்டு ! பின்னர் தான் அதன சோசியல் ஸ்டடீஸ்  என்று மாற்றினார்கள் ! மௌரிய சாம்ராஜ்யம்,குப்த சாம்ராஜ்யம், மொகலாய சாம்ராஜ்யம் என்று இந்திய வரை படம் பொட்டு காட்டுவார்கள் ! அசோகனின் காலத்தில் அது "மதுரை " வரை நீண்டிருந்தது என்று பச்சை நிறத்தில் அடைத்து காட்டி இருப்பர்கள் ! அசோகன் காலத்தில் புத்தமதம் தான் இந்தியாமுழுவதும் இருந்ததாம் ! இன்று இந்தியாவில் ஊறுகாயாக அந்தமதம் ஆகிவிட்டது ! அப்படி ஆக்கியவர்கள் யார் ?

--------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்க் கடவுள் முருகன் ! அவனுடைய "அறுபடை  வீடுகளில் " ஒன்று  திருப்பரம் குன்றம் ! அது ஒரு குடவரைக் கோவில் ! சமணர்களுடையது !கழுகுமலையில் வெட்டியான் கோவில் உள்ளது ! முழுமலையை அறுத்து கொவில்கட்டியுள்ளார்கள் !சமணர்கள் கட்டியது ! மதச்சண்டை காரணமாக பாதியில்  நின்றுவிட்டது ! அதற்கு மேல் சிவன் கோவில் கட்டி வழிபாடு நடக்கிறது !  

-------------------------------------------------------------------------------------------------------------------------

அணிசேரா நாடுகளின் மாநாடு "பாண்டுங் "  நகரில் நடந்தது ! சீனப் பிரதமர் சூ-என்-லாய்  முதன் முறையாக கலந்துகொள்கிறார் ! அவரை மற்ற நாட்டு தலைவர்களுக்கு அறிமுகப்படுத்த நேருவை அழைக்கிறார்கள் ! பின்னர் நேருவும் சூ அவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ! " உங்கள் நாட்டில் நாகார்ஜுனபுரி என்ற ஊர்  உள்ளது ! அதில் உள்ள மலையில் புத்தபிரானின்  கோவில் உள்ளது  அதனை நான் பார்க்க முடியுமா ? " என்று கேட்டுள்ளார் ! 

இந்தியா வந்த நேரு இது பற்றி விசாரிக்கையில்  தொல்பொருள்  இலாகா தேட ஆரம்பித்தது ! " நாககர்ஜுன புரி என்பது தான்  நாகர்கோவில் என்றும் அந்த மாவட்டத்தின் நடுவில் இருக்கும் மலைபகுதியில் புத்தர் கோவில் இருப்பதையும் கண்டு பிடித்தார்கள் ! தற்போது அது அரசு பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது !

முருகன் என்றால் திருப்புகழ் தான் நினைவுத்தட்டும் ! திருப்புகழ் பாடிய "அருணகிரி நாதர் " ஒரிஜினல் சைவரா ?

சமயக் குறவர்களில் சமணராக இருந்து அடிபட்டு மிதிபட்டு சைவராக மாறியவர்கள் உண்டா ?

--------------------------------------------------------------------------------------------------------------------------

இதனை ஏன் குறிப்பிட்டேன் ! 

தெரியவில்லை !

அண்ணன் மோடி காலத்திலாவது மத மாச்சரியங்கள் இல்லாமல் வாழலாமே என்ற ஆதங்கம்தான் !!!
2 comments:

பரிவை சே.குமார் said...

நல்ல செய்திகள்... அறியாத செய்திகள்..

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவரை அறியாத செய்திகள் ஐயா
நன்றி