Sunday, August 16, 2015

அந்த மூன்று கம்யுனிஸ்டுகள் ஏற்றிய தேசீயக் கொடி.

இறக்கப்படுவதே   இல்லை.........!!! 

57ம் ஆண்டுகளி லிருந்து நான் ஹைதிராபாத் நகரத்தில் இருந்தேன். பிரும்மாண்டமான நாகார்ஜுன சாகர் அணை கட்ட ஆரம்பித்திருந்தார்கள். அடிக்கடி நண்ப ர்களௌ அங்கு செல்வேன். கிருஷனானதியின் நீர்வீழ்ச்சியில் குளித்திருக்கிறென். அணையின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்த குன்றும் அதில் இருந்த சிற்பங்களும் நாகர்ஜுன பல் கலை கழகத்தின்பெருமைகளை பறை சாற்றிக்கொண்டிருந்தன. .

அந்த காட்டுப்பகுதியிலுள்ள "லமபாடி"மக்களோடு நனபர்களின்  உதவியோடு பேசி மகிழ்ந்திருக்கிறேன்.தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்புரட்சியில்பங்கு கொண்ட முதியவர்களையும் சந்தித்திருக்கிறேன்.  அந்த வீரர்களூக்கு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆந்திர,தமிழகப்பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும் ,உணவுப்பெருட்களையும் காடுவழியில்கொண்டுசெல்ல இந்த லமபாடி வனகுடி மக்கள் செய்த சாகசங்கள் இதிகாசதன்மை வாய்தவை .

( "கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து "என்ற என் நாவலில் இதனை விவரமாக எழிதி இருக்கிறேன் )

இ ந்த சம்யத்தில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த விவாசாய வீ ரர்கள் ஆடிப்பாடிமகிழ்ந்தனர்.இந்திவின் சுதந்திர கொடியை ஏற்றி விழா நடத்தக் கூடாது என்றி அன்றய நிஜாம் அரசர் உத்திரவிட்டர். அவருடைய தளபதியாக இருந்தவன் சௌதி நாட்டைச்செர்ந்த காஜிம் ரஜ்வி. அவனுடைய தனிப்படையின் பெயர்"ரஜாக்கர்" கள். ஹைதிராபாத் ராஜ்யத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுவதை  தடுக்க படையை ஏவினான்.

இந்த விவசயப்புரட்சிக்கு தலமைதாங்கியவர்கள் கம்யுணீஸ்டுகள்.

நல்கோண்டா மாவட்டத்தில், ராஜாபேட்டை என்ற கிராமம் உள்ளது அதில் உள்ள குக்கிறாமாம் 

பேகம்பேட்டை. .அங்கு மூண்ரூ கம்யூணீஸ்ட் இலைஞர்கள் -ஜிட்டா ராமசந்திர ரெட்டி, சிம்குலா மல்லையா, பத்தம் நரசிம்க ரெட்டி,என்ற முவரும் கிராமத்தின் மையப்பகுதியில் கோடியை ஏற்றிவிழா எடுத்தனர்..

நிஜாமும் ,ரஜாக்கர்களும் கொடியை இறக்க தங்கள் பலத்தை பயன்படுத்தினர். அந்த கிராமத்துமக்கள் எதிர்த்து ரஜக்கர்களை விரட்டியடித்தனர்>நிஜாமிடமிருந்து விடுதலை ஆகும்வரை இறக்கவிட மாட்டோமென்று நின்றனர்.

இன்றுவரை அந்த கோடியை  அவர்கள்  இறக்க அனுமதிப்பதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டுபதினைந்தாம் தேதி அன்று  புதுகொடியை எற்றமட்டுமிறக்குவார்கள்.அதெபோல்கிராமத்தில்னடக்கும் தசரா" விழாவின் போதும்கொடியை மாற்றி புது கொடியாய் எற்றுவார்கள் .    

0 comments: