Friday, September 25, 2015

"குறும்பட விமரிசனம் "ஒரே ஒரு வார்த்தை 
 அந்த வீட்டின் வாசலில் நாற்காலியில் பெரியவர் அமர்ந்து இருக்கிறார். அவருக்கு மிக அருகில் மற்றொரு நாற்காலி இருக்கிறது .பெரியவர் அன்றைய செய்தித்தாளை  பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வீட்டிற்குள்ளீருந்து அவர் மகன் சந்துரு வருகிறான். பெரியவர் வாய் பிளந்து அவனைப் பார்க்கிறார். பேசுவான் என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது.

அவனிடம் பேப்பரை கொடுக்கிறார். அவன் பேப்பரை வாங்கிக்கொண்டு நாற்காலியை பத்தடி தள்ளி போட்டுக்கொண்டு உட்காரு கிறான். மவுனமாக இருந்த பெரியவர் " திக்கா டிகாக்ஷன் இருக்கு .ஒரு காப்பி போட்டுகொண்டு வரட்டுமா?' என்று பேச்சை துவக்குகிறார் .  

அவனிடமிருந்து பதில்  இல்லை .மீண்டும் மவுனம் .

"நேத்திக்கு பண்ணின இட்லி இருக்கு.அதை கிள்ளி  போட்டு உப்புமா பண்ணிதரட்டுமா ?"

"சும்மா தொணதொணன்னு சும்மா இருங்கப்பா "என்கிறான் மகன். 

விட்டிற்குள் தொலை பேசி அடிக்கிறது. அதிலாவது யாருடனாவது பேசலாமே . என்று அவசரமாக  பெரியவர் எழுகிறார். "நீங்க இருங்க" என்று கூறி ய மகன் வீடிற்குள் சென்று போனில் பேசுகிறான்.....சரி... ம்ம் ... நான் பாத்துக்கறேன் ...என்ற மகனின் வார்த்தைகள் பெரியவர் காதில் விழுகிறது.

அவன் வருகிறான் அவன் வார்த்தைக்காக வாய் பிளந்து நிற்கிறார் . அவன் உட்காருகிறான்.

"யாரு? ஜெயாவா? புறப்படும் போதே தலைவலின்னா ? இப்போ எப்படி இருக்காம்? ரயில்  டயத்துக்கு போயிடுச்சா ? யார் ஸ்டேஷனுக்கு வந்தாளாம் ? " பெரியவர் .

"அவ என்ன சின்ன கொழந்தையா ? அவா அவாளுக்கு அவாஅவாள  பாத்துக்க தெரியும் " என்று எரிந்து விழுகிறான்.


குடும்பத்தில் வயதானவர்கள் தன்னோடு மற்றவர்கள்  ஒரு வார்த்தையாவது பேசமாட்டார்களா என்ற ஏக்கத்தை பிரதிபலிக்கும் இந்த காட்சியோடு ஆரம்பமாகும் இநத குறும்படம் ராஜிவ் மேனன் நடத்தும் திரைப்பட பள்ளி மாணவர்  ஒருவரின் பட்ட தேர்வுக்குகான படமாகும்.

ஆரம்பத்திலிருந்து கடைசி காட்சிவரை என்ன அற்புதமான screen presence ! "வே பாட்டையா  ! சொன்னா   சண்டைக்கு வரு வாணுக. சிவாஜி ! சிவாஜி ம் பானுக!  இப்படி ஒரு ஆளுமையை உம்மட்டதான் வே பாக்கேன் "

மகன் ரொம்ப நேரமா காத்திருக்கான்னு  பதறும் போது அத melodramaa வாக்காம body language ல காட்ட உம்மாலதா வே முடியும்.

உலகப்புகழ் பெற்ற ஸ்டானிஸ்லாவ்ஸ்கி " acting theory " உருவாக்க  அத நடிப்ப பள்ளிகளில் பாட நூலா வச்சிருக்காங்க. நீர்  practice நு புத்தகம் போடும் 1

படம் முழுக்க செயற்கையான ஒளி அமைப்பு இல்லாம இயற்கை வெளிச்சத்துல எடுத்திருப்பது இந்த குறும்படத்தின் சிறப்புகளி ல் ஒன்று .

பாரதி மணிக்கு support கொடுத்து சந்துருவா நடிச்சவர் செய்திருக்கார்.பெரியவர் கதவை சாத்தும் பொது கதவு கிரிச்சிடுவது கொஞ்சம் அதிகம். புது  ரெட்டை கதவு. இம்பிட்டு சத்தம்  வராதே.வயதானவர்கள் உதாசினபடுவதும் . அதனால் ஏற்படும் வலியும் அதனை தன்  நடிப்பால்   பாரதி மணி அவர்கள் வெளிப்படுத்தி இருப்பதும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. 


பாரதி மணிக்கு வாழ்த்துக்கள்.

( பாட்டையாவின் சிஷ்ய கோடிகள் தவறாமல் பார்க்க வேண்டிய குறும்படம் )    


0 comments: