Monday, November 23, 2015

( கடினமான விஷயங்களை தவிர்த்து எளிமையான விஷயங்களை எழுத மாட்டீர்களா ? என்று அன்பர் ஒருவர் கேட்டிருந்தார் )




"உறக்கமும் குறட்டையும் "




பொதுவாக நன் குறட்டை விடுவதில்லை. எங்கள் குடும்ப பாரம்பரியம் அப்படி. 
என் மாமனார் குடும்பத்தில் குறட்டை விடவில்லை என்றால் அவர்களை அந்த குடும்ப உறுப்பினராக ஏற்றுக்க்கொள்ள மாட்டார்கள்.

என் மாமனார் உட்பட மைத்துனர்கள்   மைத்துனிகள்  குறட்டை விடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.

சமிபத்தில் என் மைத்துனி ஒருவர் வந்திருந்தார். மிகவும் விசேஷமாக குறட்டை விடுவார். ஆச்சரியமாக இருக்கும்.

எல்லாரும் தூங்க ஆரம்பித்த பிறகு குறட்டை விடுவார்கள். இவர் குறட்டையை ஆரம்பித்து விட்டு தூங்க ஆரம்பிப்பார். "இப்படி தூங்குகிறாரெ ,ரயில் டிக்கெட்டை எல்லாம் பத்திரப்படுத்தி இருக்கணுமே "என்று நினைத்தேன். 

என் mind voice கேட்டது போன்று குறட்டையை நிறுத்திவிட்டு " மாமா ! டிக்கெட்டை  கை பைல பத்திரமா வச்சிருக்கேன்"நு " சொல்லிட்டு குறட்டைய ஆரம்பித்தார்.

சார் ! என் மைத்துனர் குறட்டை கொஞ்சம் விசேஷமானது. நீங்கள் இங்கிலீஷ் படம் பாப்பிங்களா? அதுவும் warfilm ? அதுல பீரங்கிகுண்டு எரியற காட்சி பாத்திரிக்கீங்களா ? குண்டு பாயும் பொது மெலிதாக ஒரு "விசில் " சத்தம் கேட்கும் " அது மாதிரி குறட்டை விடுவார். குண்டு போய் எதிரிகட்டடத்தை தூளாக்கும் இல்லையா ? அப்பம் பூகம்பம் மாதிரி சத்தம்கேட்கும் ! என்மைத்துனரும் அதேமாதிரி அச்சு அசலா விடுவார் சார் !"

என் உயிரே போனாலும் அவரை ரயில்ல அனுப்ப மாட்டேன். 

என்ன செய்ய ? 
 ஒரு தரம் பாண்டியன்ல போகவேண்டிய தாயிட்டுது.ராத்திரி பூறாம் தூங்கவிடாம பேசிக்கிட்டு,சீட்டாடிகிட்டு சமாளிச்சேன். விருத்தாசலம் வந்ததும் எனக்கு கொஞ்சம் கிறங்கிடுச்சு.லேசா சாஞ்சுட்டேன்.

மைத்துனரும்தூங்கி இருக்காரு. விசில்சத்தம் வந்திருக்கு.நாந்தன் தூங்கிட்டெனே  ! 
 குண்டு போட்டுட்டாரு..
முன்றாவது கோச்சுல இருந்த TTE பதறிப்போயி செயின பிடிச்சு இழுக்க வண்டி நிக்க ,மறுநாள் என் போட்டொவோட என் மைத்துனர் சிரிசுக்கிட்டு  பெருமையா நிக்கிற படம் தமிழக பத்திரிகைகள்ல வந்திருந்தது சார்.!

என் மாமனார் வீட்டுக்கு போனா ஹால்ல தான்  எல்லாரும் படுப்பம்.பத்துபத்தரைமணீ ஆனா மிருகக்காட்சி சாலை மாதிரி சிங்கம் கர்ஜிக்கும்.புலி உறுமும்..நரி ஊளையிடும் .நாய் குறைக்கும் .

நான் எட்டு மணிக்கே படுக்கற மாதிரி பாவ்லா காட்டுவேன். 9 மணிக்கு நைசா எழுந்து ஏதாவது சினிமா கொட்டகைக்கு போயிடுவேன்.

இந்திபடம்தானே . நமக்கு ஒருமண்ணும்புரியாது. கண்ணை மூடிக்கிட்டு தூங்கிடுவேன் .

ஒருநாள் நான் கிளம்பறத பாத்து என் மாத்துனரும் வரேன்னரு. ஆன மட்டும் தவிர்க்க பாத்தேன்.முடியல. நல்ல ரிக்ளைன் நாற்காலி. நல்ல தூங்கிட்டென். 

மைத்துனர் குண்டு போட்டுட்டார். சினிமாக்காரன் சிலைடு  போட்டு F 21, f 22
 பார்வையாளர்கள் வெளியெ வரவும் நுபோட்டு எங்கள மரியாதையா அனுப்பிட்டான். ஆனா மறுநாள்  வடநாட்டு இங்கிலீஷ் பத்திரிகள்ள வந்திட்டு சார் !

நீங்க கேட்குது புரியுது சார். என் துணைவியார் குறட்டை விடுவாங்களான்னு கெக்கறீங்க  ?

கலயானமாகி 53 வருசம் ஆகுது. 
குடும்ப அமைதியை கெடுத்துடாதீங்க  சார்வாள் !!!





0 comments: