Thursday, March 03, 2016

பேராசிரியர் கதிரேசன்  (என்ற )

அருணன் ....!





1969 70 ஆண்டாக இருக்கலாம். தீக்கதிர், மாநிலக்குழு அலுவலகம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் கேந்திரமான இடம் மதுரை ஒண்ணாம் நம்பர் சந்தில் செயல்பட்டு வந்தது.ஒரு  நாள் நானும் ஞானபரதியும் பணியாற்றிக் கொண்டிருந்த பொது முத்தையா அவர்கள் இரண்டு மாணவர்களை அறிமுகப்படுத்தினார்கள் .இருவரும் அண்ணாமலை பலகலைகழக மாணவர் சங்க தோழர்கள்.கோடை விடுமுறையின் பொது கட்சி ப்பணி யாற்ற  வந்தவர்கள்.

ஒருவர் தற்போது செயற்குழு உறுப்பினராகவும் மார்க்சிச்கட்சி எம்.எல் எ விமான பாலகிருஷ்ணன் அவர்கள்.

மற்றொருவர் பேராசிரியர் கதிரேசன்  என்ற  நாம் அழைக்கும் தோழர் அருணன்.

உடல்வாகு என்று பார்த்தால் இன்றைய அருணனுக்கும் அன்றய அருணனுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. முதுமை சில கோடுகளை விளைவித்திருக்கிறது என்பதை தவிர.
மதுரைக்காறர். தினமும் காலையும்,மாலையும் "ஜிம் " போவார்முட்டை பால் மட்டுமே அருந்துவார்.

படிப்பு முடிந்ததும் மதுரை பலகலையில் விரிவுரையாளராக சேர்ந்தார்.அன்றிலிருந்து அவர் வளர்ச்சியை பிரமிப்போடு பார்த்து மகிழ்ந்து வந்தவன் நான். அலுவலக மேசையில் இருப்பார்.இல்லையென்றால் பலகலைகழக நூலகத்திலிருப்பார .படிப்பு-படிப்பு-படிப்பு அதுதான் அவரை  ஒரு மிகப்பலம் வாய்ந்த மார்க்சீய அறிஞராக நமக்கு தந்திருக்கிறது.

மிகச்சிறந்த எழுத்தாளர். அவர் "கசடு"என்ற பெயரில் எழுதி விகடனில் வந்த சிறுகதை இன்றும் என் நினைவில் ஓடுகிறது.

படப்பிலக்கியத்திளிருந்து ஒதுங்கி விமரிசனத்தில் தன முத்திரையை  பதிப்பித்தவர்.
பின்னர் தத்துவார்த்த விஷயங்களில் கவனம் செலுத்தினார். ஏராளமான நுல்களை அளித்தார்.
1975ம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்தபோது அதன் முக்கிய ஆளுமையாக வளர்ந்து அதனை ஆலவிருட்சமாக வளர்த்தார்>

சென்ற ஆண்டு என்னுடைய வலைபதிவில் "வசமான கை "என்று அவரைப்பற்றி எழுதி இருந்தேன்.

தொலைக்காட்சி விவாதங்களில் அவர்  ஆற்றும் பங்கினை  போற்றி புகழ்ந்து எழுதி இருந்தேன்..தற்போது தந்தி தொலைக்காட்சியில் நடந்தது மனதை வருந்தச் செய்கிறது. இதிலிருந்து தோழர் அருணன் விரைவில் விடுபட வேண்டும்  மீண்டும் அவருடைய கணீர் குரல் தொலைகாட்சிகளில் கம்பிரமாக ஒலிக்கவேண்டும் .






  

0 comments: