Tuesday, July 12, 2016






"தவறு என்று தெரியாமலேயே 

தவறு செய்து கொண்டிருக்கிறோம் ...."






1920ம் ஆண்டு வாக்கில் தான்  சமூக நீதி பற்றிய விழிப்பு உருவாக ஆரம்பித்தது. அது ஒரு இயக்கமாக நிதிகடசியாக பரிணமித்தது. பிரிட்டிஷாரின் ஆட்சியில்  கல்வி பொதுவாக்கப்பட்டது.பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்க வாய்ப்பு வந்தது. கற்ற பிராமணரல்லாதோருக்கும் வேலை வாய்ப்பு வேண்டி கோரிக்கைகள் வந்தன.     

பிராமணர் -பிராமணர் அல்லாதோர் என்று பிரிவும் அதனால் ஏற்பட்டது.இதன் காரணமாக ஒன்று  பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கமும் உருவானது. என் சிறு வயதில் bramin -nonbramin ( b - nb ) என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிராமணர் அல்லாதோரின்    முன்னேற்றத்திற்கான  பல முடிவுகள் வந்தன.இதனை சாதித்ததில் திராவிட இயக்கத்திற்கு பங்கு உண்டு 

அன்று  b -nB என்று இருந்த நிலை திராவிட இயக்கம் 1967ம் ஆண்டு அரசு கட்டிலில் ஏறியதும் மாறியது.

அப்போது நான் எல்.ஐ சி யில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் . நணபர் ஒருவர் மிகவும் சோகமாக அலுவலகம்வந்தார் .விசாரித்தேன்."இன்று மாலை ஒரு அஞ்சலி கூட்டம். அதற்கான "போஸ்டர் " களை  அடிக்க வேண்டும். பிழை திருத்தவேண்டும் " என்றார் . அதனை வாங்கி பார்த்தேன் .

                                            கண்ணீர் அஞ்சலி 
                         
                             கர்நாடக நடிகர் ராஜ்குமார்  மறைவு !!!

                                            இப்படிக்கு 
                                நாடார் சங்கம் ,மதுரை 

எனக்கு அதுவரை ராஜ்குமார் நாடார் என்பது தெரியாது .

பஞ்சாபில் குருத்வாரா அங்கீகரித்தால் தான் மத சடங்குகளை ஒருவர் செய்துவைக்க முடியும்.எந்த வித்தியாசமும் இன்றி அதற்கான பயிற்சியை குருத்வாரா செய்து கொடுக்கும். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு "ஞ்னி " என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு மதச்சடங்குகளை செய்விக்கும் உரிமையை கொடுப்பார்கள். அப்படி பட்டம்வாங்கியவரி ஒருவர் தான் "ஞ்னி " ஜெயில் சிங்  

அவர் குடிஅரசு தலைவரானார். மதுரை நகர சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டான

         நன்றி.              நன்றி          நன்றி 
அன்னை இந்திரா விற்கு . நன்றி .ஜெயில் சிங் அவர்களை குடியரசுதலை வராக ஆக்கிய அன்னைக்கு நன்றி .
இப்படிக்கு 
தங்க நகை ஆசாரிகள் சங்கம் மதுரை .


சாதி வித்தியாசாம்பார்க்காமல்  மத சடங்குகளை  செய்விக்கலாம்  என்கிற  சீக்கிய மதம்   பட்ட பாடு .

நான் வசிக்கும் அடுக்ககம் மிகவும் பெரியது மூன்று ஷிப்ட் களி ல் செக்கியூரிட்டி உண்டு.புதிதாக வந்திருந்த செக்யுரிட்டியிடம் பெயர் கேட்டேன். "திலீப் ,பிராமின் "என்றான். இங்கு யாரிடம் பெயர்  கேட்டாலும் "நான் தேஷ்முக் ஆசாரி " நான் பாண்டே - பட யி " என்கிறார்கள்.

இப்படி  இல்லாதிருந்த தமிழகத்தில் இது  விட்டது.

எங்கே தவறு என்று தெரியாமலேயே   

நாம் தவறு செய்ய ஆரம்பித்துவிட்டோம் !!!




 




















2 comments:

தருமி said...

நான் ( ஏதாவது ஒரு சாதியைச் சேர்த்துக் கொள்ளவும்) முதன் முறையாக G.M Balasubramaniam பதிவு மூலமாக உங்கள் பதிவுக்கு வந்தேன்!!

kashyapan said...

நன்றி தருமி அவர்களே ! தொடர்பை தொடருவோம் ---காஸ்யபன்.