Wednesday, August 24, 2016

அழுகும் மனுநீதி , 

அழிவது ,

உறுதி !!! 

திங்கள் கிழமை அன்று அந்த திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமகள் மலேசியாவில் பணியாற்றுகிறார். மணமகன் அமெரிக்காவில். 

மணமகளின் தந்தை மராட்டிய  மாநிலம் . மகாராஷ்டிராவில் செட்டிலாகிய தமிழ் குடும்பத்து.பெண்ணை காதலித்து திருமணம். என்ன தான்  சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொண்டாலும் மகள்  செல்லும் புகுந்தவீடு எதிர்காலம் பற்றி பாசமுள்ள தந்தைக்கு கரிசனமிருக்கும் அல்லவா !

மணமகனின் தாயும் தந்தையும் கனடா நாட்டில் செட்டில் ஆனவர்கள்.மணமகன் முதன்முதலாகஇந்தியா வருகிறான்.தமிழ் அந்த குடும்பத்திற்கு பேச தெரியும். எழுத படிக்க தெரியாது. மணமகளும் தமிழ் பேசுவார்.எழுத படிக்க தெரியாது .மண  மகனின் தாயார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். தந்தை தொம்பரை என்ற கிராமத்தை சேர்ந்தவர். 

நெல்லை மாவட்டத்தில் உள்ள "தென் திரு பேரை "என்று யூகித்து தோழர் கிருஷி அவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க சொன்னேன்.

"ஸார்வாள் !தென்திரு பேரைக்கும் தோம்பறை க்கும் சம்மந்தம் கிடையாது."தென்பரை யிலிருந்து வெண்மணி வரை " என்று அப்பண்ணா சாமி நூல் எழுதி இருக்கிறார் . அவரை தொடர்பு கொள்ளுங்கள் " என்கிறார் கிருஷி .  அப்பண்ணா சாமியை தொடர்பு கொண்டேன்.

" வாடா " என்றால் "போடா " என்று சொல் ; அடித்தால் திருப்பி அடி " என்று முதல் முதல் சீனிவாசராவ் அவர்கள் அறிவித்த  ஊர் தென்பரை மன்னார் குடிக்கு அருகில் உள்ள கிராமம் .வைணவ பிராமணர்கள் நிறைந்த ஊர் என்று தெரிந்து கொண்டேன். திருமண  விழாவில்        எல்லாரையும் சந்திக்கமுடிந்தது.

நான் வாழும் அடுக்ககத்தில் நாற்பது குடும்பங்கள் வாழ்கின்றன .

வெவ்வேறு மொழி. மாநிலம்.பழக்க  வழக்கங்கள்  .கல்லூரியில் பள்ளிகளில்  படிக்கு மாணவ மாணவிகள் பழகும் அழகு , ஒவ்வொருவரும் தங்கள் எல்லை  எது என்பதை புரிந்து செயல்படுவது பார்க்க பரவசமாக உள்ளது. அவர்களுக்குள் உள்ள புரிதல்  சிறப்பானது.

திருமணம் என்று வந்தால் மட்டும் கண்ணுக்குத்தெரியாத ஒருவனை கொண்டு வந்து நிறுத்துகிறோம் . காரணம் சாதி .அதன் இறுக்கம் .

"உங்கள் தமிழ் நாட்டில் எப்படி இருக்கிறது ?" என்று  நண்பர்கேட்டார் 

"என் சிறு வயதில் பிராமணர் -பிராமணர் அல்லாதார் என்று தான் இருந்தது.அந்த காலத்தில் B   X   N B  என்பார்கள். அன்றய தலைவர்கள் பிராமணர் அல்லாதவர்களை ஒன்றுபடுத்தினார்கள். அதன் மூலம் பல உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள்பெற்றுத்தந்தார்கள்."

"இன்று முகநூலில் பார்ப்பன எதிர்ப்பு கொடிகட்டி பறக்கிறது . ரெட்டியார் ரெட்டியார் விட்டு பெண்ணை மணந்து கொண்டு "மனுநீதிய ஒழிக்க " வருகிறார். பிள்ளை வீட்டில் மனம் புரிந்த பிள்ளைவாள் பார்ப்பனியத்தைஒழிக்க முண்டி அடிக்கிறார். என்ன செய்ய ?"

"தன்  மகளை 21 வயது ஆவதற்கு முன்பே தன உறவினருக்கு கட்டிவைக்கும் திருமணங்களை நடத்தி விட்டு புரட்ச்சி பேசுவதும்நடக்கிறது"  

"இந்தப்  போலிகளின் வாரிசுகள் சாதி சமயத்தை மீறி வருவது ஆறுதலளிக்கிறது." 

மநு நீதி அழுகி நாற்றமெடுக்க ஆரம்பித்து விட்டது.

இந்த  போலிகளையும் தாண்டி அழியத்தான் போகிறது.!!!


இது உறுதி !!!4 comments:

சிவகுமாரன் said...

பெருநகரங்களில் அழிந்து கொண்டும் , கிராமங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறது அய்யா

kashyapan said...

பயப்பட வேண்டாம் தோழா ! புது பனக்கரன் மன நிலை இது. கிராமத்து பரம்பரை பண்ணையாரை விட கோவிலுக்கு ஒரு ரூ அதிகம்கொடுப்பான் புது பணக்கரன் . தன் சாதிக்காக அதன் முன்னேற்றத்திற்காக உயிரை கொடுப்பதாக பாவ்லா பண்ணுவான். அவன் விட்டெரியும் காசுக்கு அவனுக்கு பின்னால் போகும் கூட்டம் நிரந்தரமானதல்ல. முன்னேற்றம் என்பது .கானல் நீர் என்பதை எல்லரும் உணரத்தான் போகீறார்கள். தெளிவும் பெருவார்கள்.---காஸ்யபன்.

V Mawley said...

பகுத்தறிவு பரவலாக வேண்டும் என்பத ற்காக ஒரு சமூக இயக்கமே
நடத்தப்பட்ட தமிழ் நாட்டில் , இப்போது "பகுத்தறிவு " ஒரு நடிகனின்
cut -out -டிற்கு பாலபிக்ஷேகமும் , கற்பூரம் கட்டுதலும் விமரிசையாக
இளைஞர்களால் நடத்தப்படும் நிலையில் இருப்பது தங்களை பாதிக்கவில்லையா ..?

மாலி

பரிவை சே.குமார் said...

உணமை ஐயா...
முகநூலில் சாதி(வெறி) தலை விரித்து ஆடுகிறது...