Tuesday, December 06, 2016

தங்க மகளன்றோ ,

தண்ணீர் சுமந்திருந்தார் ...!!!

அப்போது நா ன் ஹைதிராபாத்தில் பணியாற்றி   வந்தேன்.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் -ஜனவரியில்சென்னை வந்து விடுவேன் . சபாநாடகங்களொன்றுவிடாமல்  பார்த்து விடுவேன் . என் சகோதரர் திருவல்லி கேணியில் வசித்து  வந்தார் . NKT மண்டபத்தில்  நாடகங்கள் நடக்கும். 

1957-62 ம் ஆண்டுகள். பேபி டாக்சி என்று உண்டு."மொறிஸ் மைனர்" கார் டாக்சியாக வரும். குறைந்த பட்ச கட்டணம் 8அணா . அம்மா அண்ணன் குடும்பத்தோடு போவோம். 

சோவின் விவேக் பைன் ஆர்ட்ஸ் அப்போது நாடகம் போட்டுவந்தது. அதில் சநதியா அம்மையார்    நடித்து வந்தார் அவரோடு அவரது மகள் ஜெயலலிதா வருவார்.

ஒன்பஅல்லது பத்து வயது இருக்கலாம். சந்தியா அம்மையார் மகளை  கண் போல வளர்த்து வந்தார். அவருடைய தங்கை வித்யாவதி  விமான பணிபெண்ணாக இருந்தார். தன அக்காவின் மகள்  மீது  பிரியத்தோடு இருப்பார்.பின்னாளில் வித்யாவதியும் திரைப்படங்களில் நடித்ததுண்டு.

சிறு வயதில் ஜெயலலிதா  இளவரசி போல்வாழ்ந்தார் .பின்னாளில் திரை வாழ்க்கையிலும்  கை  நிறைய சம்பாதித்தார் .       

அவர் சமபாதித்த பணமே குடும்பம் என்று இல்லாத  அவருக்கு போதுமானது. அவருடைய தாயார் சந்தியா மறைந்ததும்  கொஞ்ச்ம தனிமை அவரை சிரமப்படுத்தியது. அனால் அவரூடைய  குருவான எம்.ஜி.ஆர்   பாதுகாப்பு மிகுந்த ஆறுதலளித்தது.

அரசியலில் புகுந்தார். எந்த  சமயத்திலும் பணத்திற்காக அவர் எவர் தயவையும் நாட வேண்டியதில்லை என்ற நிலைதான் இருந்தது. 

அவருடைய அரசியலெதிரிகள் அவர் சொத்து  சேர்த்தார் என்று வழ்க்காடிய போதும் அதனை தைரியமாக சந்திக்கவே செய்தார்.

இன்றும் கேடிக்கணக்கான் ஏழை  எளிய மக்கள் அவரை    நம்புகிறார்கள். குடும்பம்,குழந்தை  என்று இல்லாதவர் அவர் யாருக்காக சொத்து சேர்க்கவேண்டும்   என்று அந்த மக்கள்  கேட்கத்தான் செய்கின்றனர் . அவரை சுற்றி இருப்பவர்கள் கொள்ளை ய டித்த பாவத்தை பாவம் எங்கள்   தலைவி சுமக்கிறார் என்றே மக்கள்கருதுகின்றனர் .

அவர் பின்னால் ஆதரித்து நிற்கின்றனர்.

இமாலய வெற்றியை அவருக்கு அளித்துமகிழ்ந்தனர் .

அந்த தீரமிக்க பெண் மணிக்கு இவ்வளவு சீக்கிரம் முடிவு வரும் என்று அவருடைய எதிரிகள்கூட நினைக்கவில்லை .

செங்கீரன் எழுதிய கவிதை வரிகள் தான் நினைவு தட்டுகிறது 


யாரோ ஒரு வீட்டில் ,
               எவரோ தீ  வைக்க ,
தங்க மக(ன) ளன்றோ , 
                தண்ணீர் சுமக்கின்றார்!!


 போதும் தாயே ! நீ சுமந்து போதும் !!

என்று இயற்கையே அவருக்கு  விடுதலை அளித்துவிட்டது !!!



4 comments:

Packirisamy N said...

தேவையிருக்கிறவன்தான் திருடுவான்; அறிவுள்ளவன் தப்பு பண்ணமாட்டான்; சேப்பாயிருக்கிறவன் பொய் சொல்லமாட்டான். நீங்களுமா?

சரவணன் said...

சொத்து குவிப்பதற்கெல்லாம் வக்காலத்து! என்ன கம்யூனிஸ்டோ! தா.பாண்டியன் வழி நடக்கிறீர்கள் போல. அப்ப அடுத்து சின்னம்மா புகழ்பாடி ஒரு பதிவு எதிர்பார்க்கலாம். சரி சரி என்னவோ பண்ணுங்க எனக்கெதுக்கு..

kashyapan said...

மறைந்த முதலமைச்சர் அவர் உடுத்தியிருந்த பச்சை பட்டு சேலை,வாட்சு, வைர டாலர் பதித்த அட்டிகை ஆகமூன் றையும் அணிந்து கொள்ள புதைக்கப்பட்டார். அறிவார்ந்த அவருக்கு தன்
னோடு தான் குவித்த சோத்துக்கள் வராது என்பதை தெரிந்து கொள்ளாமலிருக்க சாத்தியமில்லை. அவருடைய சுய சம்பாத்தியத்தில் வாங்கிய தோட்டம் வீடுகூட அவருக்கோ அவருடைய உறவினர்களூக்கோ போய் சேரவில்லை. அதன் காரணமாகவே மக்கள் அவரை மிகுதியாக நம்புகிறார்கள். சரவணன் அவர்களே நீங்களோ நானோ நினப்பது பொல மக்கள் நினைப்பது இல்லை . இது தான் என் கட்டுரையின் நோக்கம். வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

Packirisamy N said...

சின்னம்மா புகழ் பாடுவதும் ஒரு சாரார் நம்பிக்கைதானே!