Monday, March 28, 2016

பி.ஆர். என்ற அந்த

தீர்க்க தரிசி......!!! 


1967ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசின் கை பலவீனமாக ஆரம்பித்தது.இதனை மாற்றி அமைக்க காங்கிரசுக்குள் உட்கட்சி போராட்டம் ஆரம்பமாகியது.

1969ம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தலில் நீலம் சஞ்சீவி ரெட்டியை காங்கிரஸ் நிறுத்தியது. இதன் பின்னால்  உள்ள சதியை உணர்ந்த இந்திராகாந்தி அம்மையார் சுயேட்சையாக வி.வி கிரி அவர்களை நிறுத்தி மனசாட்சிப்படி வாக்களிக்க கேட்டுக் கொண்டார் .

வி.வி கிரி வெற்றிபெற்றார்.

வங்கிகள் தேசீய மயமாகாக்ப்பட்டதும் இப்போதுதான். காங்கிரஸ் கட்சி இண்டிகேட்,சிண்டிகேட் ஆனதும் இப்போது தான்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ராமமுர்த்தி தமிழகம் வந்திருந்தார்.பத்திரிகையாளர்கள் அவரை வளைத்து வளைத்து கேள்விகளால் துளைத்து விட்டனர். 

" வங்கிகளை தேசஉ டமையாக்கியது நியாயமா ?" 

"டாடாவுக்கு பாங்க ஆப் இந்தியாவும் சென்றல் வங்கியும் உள்ளது.பில்லாவுக்கு இந்தோகமர்சியல்வங்கி, உள்ளது.நாம் ஊர் செட்டியாருக்குஇந்தியன் வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுமுள்ளது. இவற்றில் செமிக்கும்மக்கள்பனத்தை  இந்த பெரு முதலாளிகள் சூரையாடுகிறார்கள்.அதன் மக்கள்நல திட்டங்களுக்கு ,மருத்துவம்,கல்வி,போக்குவரத்து ஆகியவற்றிற்கு பயன்படுத்த இது வழிவகுக்கும் " என்றார். 

"அப்படியானால் ல்நீங்கள் இந்திராகாந்தி அம்மையாரை இது விஷயத்தில் ஆதரிக்கிறீர்களா ?"

"ஆம் !ஆதரிக்கிறோம் !"

"சோவியத் யூனியனைப் போல இந்தியாவும் ..."

இடைமறித்த பீ ஆர் " அவசரப்படாதீர்கள்  . nationalaisation for whom , by whom and for what என்ற கேள்விக்கான பதிலையும் அது சார்ந்திருக்கிறது."  என்றார் அந்த தீர்க்கதரிசி.  



( சரஸ்வதிபிராமண   வகுப்பில் பிறந்த மல்லையாவிற்கு அப்போது 14 வயதுதான் )

Sunday, March 27, 2016

தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ,

விடுதலை சிறுத்தைகளும் ,

இட்டு நிரப்புவார்கள் .....!!!




இரண்டு நாட்களுக்குமுன்பு மதுரையில் உள்ளமூத்த பத்திரிகையாளறோடு தொடர்புகொண்டேன்.

ஜோதி பாசுவிளிருந்து ,மதுரை நெடுமாறன் வரை  நேர்காணல் கண்டவர். விஜயகாந்தின்தலைமையில்உள்ள தே .மு.தி.கஅணியும் ,மக்கள் நல  கூட்டணியும் தொகுதி உடன்பாடு கோண்டுள்ளது பற்றி  கேட்டேன். 

"நல்ல ஏற்பாடு தான் " 

"விளைவு எப்படி இருக்கும் ?"

"அண்ணா திமுக தவிர அம்புட்டு பேரும் அலறுதாங்க "திமுக கலகலத்து போயிருக்கு "அநியாயத்துக்கு அதிமுகவை வசை  பாடுறாங்க ! அதுவே அவங்களுக்கு எதிரா போகுது"

"அம்மா வுக்கு தண்டணை கொடுத்தபோது முன்று மாணவிகளை எரித்தர்களே ன்று குற்றம் சுமத்தினால் மதுரை தினகரன் ஆபிசுல முன்று பேர உயிரோடு எரிச்சயெ  நு இசை பாட்டுபாடுதான் ."

"குமாரசாமி தற்கொலை நா , தா.கிருஷ்ணன் படுகொலை ங்கான் . மாணவர்கள் மீது போலிஸ் தாக்குதல் நா டாக்டர் பட்டம்வாங்க அண்ணாமலைக்கு போகும்போது மாண வன அடிச்சு கொன்னு குளத்துல வீசினவன் தான நீ ! அவன் அப்பனுக்கு பணம் கொடுத்து இது என் மவனே இல்லனு சொல்ல வச்சவன் தானே நீ '

"லாவணிதன் நடக்குது."

"தி.மு.க கை இறங்கித்தான் இருக்கு "

"அவங்க பிரச்சாரம் நகர்புறங்கள்ளஎடுக்கர அளவுக்கு கிராமங்கள்ள எடுபடல. அப்பாவி ஜனங்களுக்கு அம்மா மேல அவ்வளவு இறுக்கம்.

"என் அப்படி ? "

" குழந்தைகுட்டி,குடும்பம் நு எதுவும் இல்லாதவங்க. திரை உலகில் சம்பாதித்ததே அவங்களுக்கு போதும் . அவங்க லஞ்சம் வாங்கினானு சொல்றதையே அவங்க  நமபதயாராயில்ல ".

" அவங்கள சுத்தி இருக்கவங்க வாங்கினா அவங்களா பொறுப்பு . ஒ.பி,எஸ் ,நத்தம் நு 30000கோடி புடுங்கிட்டாங்க " இதுக்கும்மேலஎன்ன செய்ய " 

"தி.மு.கவால்இதுக்குபதில் சொல்லமுடியவில்லை.தயாநிதி,கலாநிதி,கனிமொழி யை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லும்குற்றச்சாட்டு எடுபடாமல் போகிறது."

"அ தி.மு.கவின் செல்வாக்கு கிராமப்புறங்களில் கணிசமாக உள்ளது.இதனை அடிக்க  பா.ம.க,காங்கிரஸ் ஆகியவற்றால்முடியாது." 

."அ .தி.மு.க வந்து விடுமா ?" 

"வாய்ப்பு அதிகம் "

"என்னண்ணெ "

"வாய்ப்பு தானே "

"கிராமப்புறங்களில் கடுமையாக வேலை  செய்தால் ""

'மக்கள் நல கூட்டணியால் முடியுமா ?" 

முடிய வேண்டும் ! தீண்டாமை ஒழிப்பு முண்ணணி இதில் கணிசமாக பணீயாற்ற் முடியும்> அவ்ர்கள் கிராமப்புற தலித்துகளின் பாடுகளை முன்னேடுத் து போராடங்கள நடத்துகிறார்கள். நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இது அந்த அப்பாவி மக்களிடையே ஒரு உந்து சக்தியாகமாரி வருகிறது." 

" தவிர படித்த தலித் இளைஞர்களை வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் வெற்றிபெற வகுப்புகளை நடத்துகிறார்கள். இதில் தலித் அல்லாதவர்களின் பங்கு மிகச்சிறப்பாக  உள்ளது.சாதி வெறியர்கள் இது கண்டு அரண்டு நிற்கிறார்கள்."

"எந்த கிரமமாக இருந்தாலும் தலித்துகளில்லாமலில்லை. அங்கு விடுதலை சிறுத்தகளுமில்லாமல் இல்லை ." தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்,விடுதல சிறுத்தைகளும் முண்டாசு கட்டிக்கொள்ளும் தருணம் இது .அவர்கள் இட்டு நிரப்புவார்கள் "

"நிலைமைதான் என்ன அண்ணே ?"

விஜகாந்தும்ம் மக்கள்  நல கூட்டணீயும் தி .மு.கவை  மூன்றாவது இடத்துக்கு தள்ளி விட்டது..


முதலும் இரண்டாவதும் அ தி .மு.க வா  விஜகாந்த் ம ந கூ வா இரண்டிற்குள் எது  என்பது இன்னும் சிலவாரங்களில் தெரிந்து விடும்.







Thursday, March 24, 2016

"தி.மு.க ; அதிமுக" தொலைய வேண்டும் ....!!

தொழில் முனைவர்கள்  விருப்பம் !



அவர் சாத்தூரில் இருக்கிறார். நண்பரும் கூட . ரோடு போடுவதிலிருந்து , அரசுக்கு வாடகைக்கார் சப்ளை  செய்வது வரை அவர்தான். தென் மாவட்டங்களில் கொடிகட்டி பறந்தார் . 

அடிக்கடி பேசிக்கொள்வோம். 

"அரசியல் நிலைமை எப்படி இருக்கு ?" 

"அண்ணே ! ஏதாவது பிரளயம் வந்து இவம்களை கொண்டு போயிடாதன்னு இருக்குன்னே ! '

"ஏன் ? இவ்வளவு சலிப்பு ? "

"தொழில் பண்ணமுடியல அண்ணெ . நாங்க லாபத்துக்கு தான் வேல பாக்குறோம் 1  காண்ட்ராக் நா கமிஷன்  உண்டு . அது தெரிஞ்சுதான் வாரம்.ரோடு போட 10 லட்சம் நா நாங்க ஒரு 5000 அல்லது 10000 தனியா வச்சுடுவம். "

"இப்பம் 4லட்சம் வையிங்கான்  அண்ணெ ! அப்பம் ரோ"டு மயிரா நிக்கும் "போஸ்டல் , கஸ்டம்ஸ், பாங்கு நு சிவில் ஒர்க் எடுப்போம் ! குறிப்பா ஆந்திரா,கர்நாடகா  மாநிலங்கள்ல ! "

"தமிழ்நாட்டு கான்றாக்டர்னா டெண்டர்லயெ வேண்டாம் நு சொல்லுதான். கேட்டா வேல ஸ்டாண்டர்டு மோசம் நுபெராயிடுச்சு. "  

"ஆட்சி மாறினா சரிதானவே "

"மாறினா ! ஆரம்பிச்சு வச்சதே அவங்கதானவே ! வீராணம் காண்ட்ராக்டு மறந்துருவமா? சத்யநாராயணா சாகத்தான செஞ்சாரு !"

"என்னதான் செய்யணும்கெரு "

"போதும் ணெ ! இவங்க ரெண்டு பெரும் கிழிச்சது ! மாறனும் னே ! அதுதான் அண்ணெ நாங்க தொழில் பண்றவங்க நினைக்கிறோம் "


மாற்றுவோமா ! 

 மாற்றமுடியுமா ?

Tuesday, March 22, 2016

ஆயிரம் நாட்களுக்கு மேல் ஓடிய 

திரைப்படம் "ஹரிதாஸ் "...!!!



நான் சிறு வயதில் டூரிங்க் கொட்டகையில் படம் பார்த்திருக்கிறேன். இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 11 மணி வாக்கில் முடியும். இரண்டாம் ஆட்டம் 11.30 அர்மபித்து 3.30 மணிக்கு முடியும்.படத்தின் பெயர் "ஆயிரம் தலை வாங்கி  அபூர்வ சிந்தாமணி " .முன்னாள்   முதலமைச்சர் வி.என்.ஜானகியும் ,பி.எஸ் கோவிந்தனும் நடித்தது.

தமிழகத்தில் மின்சாரம் பரவலாக்கப்பட்டதின் பயனில் ஒன்று திரை அரங்குகள் அதிகமாக தோன்றியதாகும். எம்.ஜி ஆர் ,சிவாஜி, ஜெமினி என்று மூவரும் கொடிகட்டி பரந்த காலம் உண்டு.

அப்பொதும்  கிராமங்களில் .டூரிங்க் கொட்டைககள்  இருந்தன.நடிகர்கள் பெருக பெருக கிராமத்துபெருசுகள் நடிகர்களுக்கு அவர்களாக பெயர் வைத்து அழைப்பார்கள். அப்போது ரஜனி,கமல் வந்த நேரம்.
" யார் ஆக்ட்  கொடுக்கா தாத்தா ? !  என்று கேட்டால்  
"அதுதான் அப்பு ! அந்த டப்பாமுஞ்சிகாரன் " என்பார்கள் . ரஜனியைத்தான் அப்படி சொல்வார்கள்..

இன்று ரஜனி சூப்பர் ஸ்டார். இப்போது சுப்றீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் , பவர் ஸ்டார் என்று வந்து விட்டார்கள். சிவா கார்த்தி கேயனை "மைல்டு சூப்பர்  ஸ்டார்" என்கிறார்களாம்.
எம்.ஜி.ஆர் ,சிவாஜி,ஜெமினி காலத்தில் நூறு  நாட்கள்  ஓடிய படங்கள் நிறைய உண்டு.ரசிகர்கள் விழா  எடுப்பார்கள். இன்று நூறு காட்சிகளூக்கு விழா . எடுக்கிறார்கள் .

தமிழ் திரை  உலகில் ஸ்டூடியோ சிஸ்டம் உடைந்து ஸ்டார் சிஸ்டம் வந்த பொது அதன் முடி சூடா மன்னாக இருந்தவர் மறந்த எம்கே.தியாகராஜ பாகவதர் 

1934 ம் ஆண்டு "பவளக்கொடி " யில் ஆரம்பித்தவர் முடிசூடா மன்னனாகவே திகழ்ந்தார். 

1944ம் ஆண்டு அவர் நடித்த "ஹரிதாஸ் " மூன்று  தீபாவளிக்கு ஓடியது ,1000 நாட்களுக்கு மேல்  ஒரே திரை  அரங்கில் ஓடியது . திரைப்பட உலகம் கண்டிராத சாதனை யாகும்  இது .

இதில் மிகவும் வியப்பிற்குரிய விஷயம் எம்கேடி 1934ம்  ஆண்டிலிருந்து 1959 வரை   14 படங்களில்மட்டுமே  நடித்தார்.

தமிழ் திரை உலகின் உண்மையான சூபர் ஸ்டார் எம்.கே. டி 
 என்றால் அது மிகை அல்ல .





 

Sunday, March 20, 2016

"ஆயிரம் படம் தந்த 

அபூர்வ மனிதர் "





1976ம் ஆண்டு "அன்னக்கிளி " என்று ஒரு படம் வந்தது.   அதற்கு "பண்ணைபுரம் " என்ற பட்டிக்காட்டிலிருந்து  வந்த ராசய்யா என்ற இளைஞன் இசை அமைத்தான்.
இது 2016ம் ஆண்டு .நாற்பது ஆண்டுகள் ஒடி விட்டான. ராசய்யா இளைய ராஜாவாகி இன்று 1000 படங்களுக்கு இசை     அமைத்து சாதனையாளனாக திகழ்கிறார்.
40 ஆண்டுகளில் 1000 படம்.  ஆண்டுக்கு 25 படம் .மாதம் இரண்டு படத்துக்கும்மேல் .
படத்திற்கு  ஐந்து பாடல்கள் எனறால்  5000 பாடல்கள். 
உலகம் பூராவும் தேடினாலும் இப்படி ஒரு ராட்சததனமான சாதனையை செய்தவர் இவரைத்தவிர வேறொருவர் இல்லை.

ஸ்வரங்களில் வித்தியாசம். ஸ்ருதியில் வித்தியாசம். தாளத்தில் வித்தியாசம். வெவ்வேறுபட்ட ராக விந்நியாசம் 5000 பாடல்கள் . அது மட்டுமல்ல .பின்னணியாக இசைக் கோர்வை .

திருவையாறில் தியாகய்யர் இருந்தார் தினம் தெருவில"பிக்ஷை " எடுத்து  உண்பார்.
"பள்ளன் நந்தனை " பாடியதால் அகிரஹாரம் தள்ளிவைக்க கோபாலகிருஷ்ண பாரதியாரும் தெருவில். இருவரும் சமகாலத்தவர்.தெருமுக்கில் சந்தித்து பேசிக்கொள்வார்களாம் .
"இன்னிக்கு என்ன உருப்படி ?"
"நந்தன் வயக்காட்டுல விதைக்கப்பொறான் !"
 "நீங்க ? "
"ஆபோகி வர்ணம் "
ஆச்சரியப்பட்டிருக்கிறேன். லட்சக்கணக்கில் ராகங்களை உருவாக்க ஒரு மனிதனால் முடியுமா ?
இளைய ராஜா முடியும் என்று சாதித்துள்ளார்.
தியாகய்யரும் செய்திருக்கலாம்.
"இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை "
ஒரு வினாடிக்கு 178 முறை அதிர்ந்தால்  வரும் ஓசை தான் "ஸ " என்ற ஸ்வரம்..
356 முறை அதிர்ந்தால்  "ப " என்ற ஸ்வரம்.
712 முறை அதிர்ந்தாள்" மேல் ஸ " என்ற ஸ்வரம்.

சர் சி.வி ராமன் "ஒளி "பற்றி ஆராய்வதற்கு முன்னால் "ஒலி "
பற்றி ஆராய வீணை கற்றாராம் .

மார்க்ஸ் கூறுவார்.இசை  என்றகலைவடிவத்தை ரசிக்க காதுகள் வோண்டும்.
Not only ear but a musical ear என்றார்.
காது இருப்பவன் எல்லாம் இசையை  ரசிப்பதில்லை ..

இந்தப்பின்னணியில் பார்க்கும் பொது 

ஆயிரம் படங்களை தந்த அபூர்வ மனிதர் 

 இளையராஜா !!!

 
 
 
 







   
 

"6-3-1967அன்று "




1967ம் ஆண்டு.மார்ச்மாதமஆறாம்  தேதியை தமிழக மக்களால் மறக்க முடியாது.
"இந்து" அலுவலக கட்டிடத்திற்கு முன்பு மவுண்ட் சாலையில் மக்கள் ஆயிரக்கணக்கில் பத்தாயிரக்கணக்கில் கூடி இருந்தார்கள். 
தேர்தலில் காங்கிரசை தோற்கடித்து திமுக வெற்றி பெற்ற நேரம். 
முதலமைச்சராக c .n அண்ணாத்துரை அவர்கள் பதவி ஏற்கப்போகிறார்.

"பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில்   வேண்டாம் .மக்கள் மத்தியில் நடை பெறவேண்டும் " என்று அண்ணாத்துரை அவர்கள் அறிவித்து விட்டார்கள்.

ராஜாஜி ஹாலில் ஏற்பாடுகள் நடந்தன. கவர்னர் உஜ்ஜால் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டின் நகரங்கள்,நகராட்சிகள்,சிற்றூர் பேருர், என்று மக்கள் கொண்டாட்டம்.
ரிக்ஷா இழுப்பவன்,அத்தக் கூலி, களைபிடுங்கும் பெண், உழுபவன், கதிர் அறுப்பவன்,அரசு உழியன் ,வங்கி அதிகாரி என்று அத்துணை பெரும் அண்ணாதுரை முதலமைச்சர் பதவி ஏற்றதாக நினக்கவில்லை .

தாங்களே முதலமைச்சராக் ஆன மாதிரி சொல்லி சொல்லி மகிழ்ந்தார்கள்.

மக்களின் முழு ஆதரவையும் பெற்ற தி .மு.க  ஆட்சி அரங்கேறியது .

அத்தகைய ஆதரவை இன்று இழந்து அனாதையாக நிற்கிறதே ஏன் ?

 அண்ணாதுரை அவர்கள்  நோய்வாய்பட்டு 1969ல்  மறைந்தார் 

 கருணாநிதி முதல்வரானார்.

அன்று ஆரம்பித்தது   தமிழகத்தின் வேதனை !

அந்த வேதனையை துடைக்க வந்தவர்கள் தான் 

"மக்கள் நல கூட்டணி "



Saturday, March 12, 2016



"ஜோதிஷ்ன மாதவராஜ் "

கதை- திரைக்கதை எழுதுகிறார்.






சாத்தூரிலிருந்து மாதவராஜ் டெல்லி போவதாக தகவல் வந்தது .ரயிலடியில் சந்திக்கலாம் என்றிருந்தேன். அவருடைய மகள் குழந்தை ஜோதிஷ்ணாவுக்கு dress metrial வாங்கி இருந்தேன். திடீரென்று அவர் பயணம் ரத்தாகி சிறுகதை எழுத்தாளரும்,வங்கி அதிகாரியுமான காமராஜ் வருவதாக தகவல்வந்தது.

ரயிலடியில் (நாகபுரி ) காமராஜை சந்தித்தேன். குத்தாலத்தில் த.மு.எ.ச நடத்திய சிறுகதை முகாமையும் அதில் நான் வகுப்பு எடுத்ததையும் நினவு கூர்ந்தார் கிளம்பும் போது அவருக்குகொஞசம் பழங்களை வாங்கி கொடுத்தேன். dress meterial மாதவராஜ் அவர்களிடம்கொடுத்து விடும்படிகேட்டுக்கொண்டேன்.

வருடங்களோடிவிட்டன. அந்தக்குழந்தை +2 படித்து லயோலா கால்லூரியில் viscom முடித்து விகடன் விச்டாசில்பணியாற்றுகிறார்.

சண் டிவியில் புதிய தொடர் ஆரம்பித்துள்ளார்கள். "Emi தவணைமுறை வாழ்க்கை "என்று பெயர். விகடன் குழுமம் தயாரிப்பு. இனியன் தினேஷ் இயக்குகிறார். முதல் நாள் முதல் episode வித்தியாசமான அனுபவத்தை தந்தது 

IT கம்பெனிகளில் பணியாற்றும் இளைஞர்களின் பாடுகளை சித்தரிப்பதாக இருந்தது. நிரந்தரமற்ற வேலை சூழல் . கைநிறைய சம்பளம். அதேசமயம் குடும்ப சுமை இதில் மெலிதான காதல் - வேலை இழப்பு என்று நிமிர்ந்து நிற்கச் செய்தது நிகழ்வுகள்.

Title song ஐ மிண்டும் போட்டேன். கதை,திரைக்கதை ஜோஷ்ணுவா மா. என்றிருந்தது.மாதவராசுக்கு போன் சய்து உறுதி செய்து கொண்டேன்.

செம்மலர் சிறுகதை போட்டியில் முதல்பரிசு பெற்றவர் மாதவராஜ். அவருடைய மகள் .கேட்கவா வேண்டும். 

அது மட்டுமல்ல . ஜோஷ்னுவா வின் தாத்தா யார் தெரியுமா? 

50லிருந்து 80வரை  தமிழ் நவீன எழுத்துலகி புரட்டிபோட்ட அந்த எழுத்துலக  "ராட்சசன்" ஜெயகாந்தன் அவர்கள் தான். 

ஜெயகாந்தன் அவர்களின்" உன்னைப்போல் ஓருவன் " படத்தை வெளியிட முடியாமல் திரை உலகம் தடுத்துக் கொண்டிருந்த போது மதுரை எல்.ஐ சி உழியர்கள் நகரத்து சென்ட்ரல் திரை  அரங்கில் வெளியிட்டார்கள். அவர்களோடு சேர்ந்து நின்றவன் நான்.

பின்னர் மத்திய அரசு விருது அளித்து அவரை கௌரவித்தது.

" ஜோஷ்னா ! எனக்கு வயதாகி வருகிறது.நீயும் படம் எடுக்க வேண்டும். தத்தா மாதிரி விருது வாங்க வேண்டும்.நான் அதனை கன்டு மகிழ வேண்டும் .
சீக்கிரம் ---சீக்கிரம் !!!

Tuesday, March 08, 2016



"மது விலக்கு"




நெல்லை நகராட்சி ஆரம்பபள்ளியில் அப்போதுநான் படித்துக் கொண்டிருந்தேன். எங்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.பெரிய மைதானம் அங்கு வைக்கப்போரில் ஒரு பெரிய பொம்மை இருந்தது. 

பெரியவர்கள் எல்லாம் பேசினார்கள்.பின்னர் அந்த பொம்மைக்கு தீ வைத்தார்கள்.மது அரக்கன் ஒழிந்தான் என்று எல்லாரும் கத்தினார்கள்.

நெல்லை டவுண் பக்கத்தில் தான் "பாட்டப்பத்து "கிராமம். எங்கள் வீ ட்டிற்கு அடுத்து மாரி நாடார் தோப்பு. தோப்புஎன்பதை விட" பனங்கொல்லை " என்றுதான் சொல்வோம் 50-60 பனைமரமிருக்கும். பனை ஏறிகள் மார்பில் தோலால் ஆனா உறை அணிந்து மரமெறுவார்கள்.சிறு குடுவையில் கள்ளை இறக்குவார்கள். அவர்கள்விட்டு பெண்கள் வாய் குறுகிய 'சால் " களில் அவற்றை விடுவார்கள் .வெள்ளை வெளேரென்று  நுரையாக இருக்கும். நான்கு நாள் புளித்த மோர் வாசம் வரும்.

என் சிறுவயதில் குடி பற்றிய அனுபவம் வள்ளிசாக இல்லை என்றே கூறலாம்
எங்கள் தெருவில் ராமய்யர் என்று ஒருவர் இருந்தார். அவர் கல்யாணவீடுகளூக்கு சமையல் செய்ய போவார். சில சமயம் அவர்வீட்டி வாசல் தின்னையி மதிய நேரத்தில் கத்திக் கொண்டு இருப்பார்அவர்வீடு பக்கத்து எதிர்வீடுகளீல் கதவை அடைத்துக் கொ ண்டு உள்ளே இருப்பார்கள்.

"ராமன் கள்ளு குடிச்சுட்டு வந்து கத்தறான் .அங்கபோகாத அம்பி " என்று பாட்டி எச்சரிப்பாள். திண்ணையிலிருந்து எட்டி பார்த்துவிட்டு பயந்துஓடி
விடுவேன்.
ஆரம்பப்பள்ளி,நடுநிலைப்பள்ளி ,உயர்நிலைப்பள்ளி, கல்லுரி என்று முடித்து வரும் வரை மது பற்றி அதிகம் தெரியாதவனாகவே இருந்து விட்டேன்.

நான் எல்.ஐசி யில் வேல கிடைத்து ஹைதிராபாத்தில் சேர்ந்தேன் . "கிங்க்ஸ் வே" " அபிட்ஸ் " ஆகிய பஜர்களில் பத்து கடைக்கு ஒன்று "ஒயின் ஷாப் " என்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..கண்ணாடி அலமாரிகளில் பாட் டில் களை வைத்திருப்பார்கள். பலர் கூச்ச நாச்சமின்றி வாங்கிச் செல்வார்கள். நிஜாம் ஆட்சியில் இருந்ததால் இங்கு மதுவிலக்கு அமலில் இல்லை என்றார்கள்.

அறை  நண்பர்கள்  இரவு நேரங்களில் குடிப்பார்கள். என்னையும் குடிக்க கேட்பார்கள்.நான் மறுத்து விடுவேன்.

என் ஆபத் நண்பன் ராகவனுக்கு திருமணம். அவன் குமபகோனத்து ஐயங்கார். கல்யாணம் கும்பகோணத்தில் எங்களுக்கு விருந்து வைத்தான்.
நண்பர்கள் பாட்டில்களை உடைத்தார்கள். என்னையும் நண் பனை வாழ்த்த குடிக்கச்ச்சொன்னார்கள். மறுத்தேன்.பின்னர் ராகவனுக்காக கொஞ்சுண்டு குடிக்க சம்மதித்தேன். கொடுத்தார்கள். ஆறுமுகம் பிள்ளை நாகர்கொவில் 
காரன்."இது dm பிராந்தி வே .எறும்பு கடிச்மாதிரி இருக்கும்" என்றான்.குடித்தேன்

அன்று இரவு முழுவதும் தூக்கம்வரவில்லை என் அம்மாவின் முகம   அ டிக்கடி வந்தது.ஒரே துவர்ப்பு. அழுகியபழ்வாடை ஏப்பமாக வந்தது.
இரவு எப்போதுடா விடியும் என்று காத்திருந்தேன் ,ஆறு மணிக்கு எழுந்துகுளித்து ஆறுமுகம் பிறையில் வத்திருந்த்முருகன் படத்தினடியிலிருந்த  விபூதிய பூசிக்கொண்ட பிறகு தான் ஓரளவு மனம் சமாதானமாகியது.1962 வரை ஹைதிராபாத்தில் இருந்தேன். சாதாரணமாக குடிக்க பழகிவிட்டேன்.
" நான் habitual drunkard இல்லை. ஆனாலும் குடிப்பேன் "

மதுரைக்கு மாற்றலாகி வந்து விட்டேன். இங்கு குடிக்க temtation  இல்லை..
1967ம் ஆண்டு தேர்தல் வந்தது. காங்கிரசை எதிர்த்து ஏழு கட்சி கூட்டணீ அமைந்தது.தேர்தல் பணியிலீடுபட்டேன். cn அண்ணாதுரை முதலமைசரானார் நல்லமனிதர் தமிழக மக்கள் தாங்களே முதல்வரானது மாதிரி மகிழ்ந்தார்கள். 

அப்பாவி மனிதர் நோய்வாய்பட்டு 1969ல் மறந்தார் அவருக்கு பிறகு கருணாநிதி முதல்வரானார்.

1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் தேதி கருணாநிதி  மதுவிலக்கை ரத்து செய்தார்.

தமிழகத்து தெருக்களில் சாராயமும் மதுவும் ஓட ஆரம்பித்தது.சமீபத்தில் என்மாமா வீட்டுக்கு சென்றிருந்தான் தாகமாக இருந்தது.fridge ஐ திறந்தேன்.
கழுகு மூக்கு போன்ற பாட்டிலிருந்தது . " அத்தான் ! அது ஷீவாள்ரேகல்.சிங்கபூர் சரக்கு. ரண்டு மடக்கு உள்ள தள்ளரெளா  "என்றான் மாமாவின் மகன்.

"சாமா ! முன்னல்லாம் காதுகுத்து,பிறந்தநாள்,சடங்கு என்றால்முந்துன  நாள் வீட்டை மொழுகி மாக்கோலம் போட்டு அழகு படுத்துவார்கள்> இப்பம் முந்தின நாள் இரண்டுமுன்று full வாங்கி fridge ல வச்சுடுவானுங்க " என்றான் ஆறுமுகம் பிள்ளை .
என்னுடைய 80 பிறந்த நாள் . என்மகன் ,பேரன்,மைத்துனன், சகலர் என்று ஸ்டார் ஹோட்டலில் கொண்டாட்டாம் கேக் வெட்டுவதற்கு முன்னால் விஸ்கி பாட்டில் உடைபட்டது.அருகில் இருந்த்முத்துமிணாட்சி என்னை குடிக்க விடவில்லை.பின்னர் என் மைத்துன னின் சிபாரிசில் இரண்டு மடக்கு  பீர் அருந்த அனுமதித்தார்..


இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மதுவை காணாத தமிழ்நாட்டில் மதுவை மீண்டும் அறிமுகப்படுத்தியவர்  கருணாநிதி.

இன்று மீண்டும் மதுவிலக்கை கொண்டுவருவேன் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து வாக்கு கேட்கிறார்.

என்ன தைரியம் ???



Sunday, March 06, 2016

கொஞ்சம் "மொழி "இயல் 

பார்ப்போமா !!!.





1972-74 ம்  ஆண்டுகள் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு சவாலான ஆண்டுகள். ஒருபக்கம் சிலர் சங்கத்தை துண்டாடிக்கொண்டிருந்தனர்  மற்றொருபக்கம் இதனை காரணமாக வைத்துக் கொண்டு சங்கத்தை தோற்கடிக்க நிர்வாகம் முயற்சித்து வந்தது.

சங்கத்தை கட்டிக்காத்து ஊழியர்களின் ஒற்றுமையை அடிநாதமாகக் கொண்டு சங்கம் வெற்றியை ஈட்டித்தர அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தது.

மும்பையில் ஊதிய உயர்வுக்கான பேசுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. மும்பை ஊழியர்களீடையே மதிய இடை வேளையின் பொது தமிழ்கத்தை சேர்ந்த அந்த வளர்ந்து வரும் தலைவர் பேசினார்..

ஆற்றோட்டம் போன்ற அற்புதமான ஆங்கில உரை .ஊழியர்களின் ஒற்றுமையும் சங்கத்தின் ஒன்றுபட்ட செயல்பாடும் அவருடைய பேச்சின் அடிநாதமாக இருந்தது. உழியர்கள் மெய்மறந்து அந்த பேச்சில் சொக்கிபோய் நின்றனர .

தமிழ்கத்தை சேர்ந்த வைத்தியநாதன் என்ற தொண்டர்  தலைவர்களை மதிய உணவிற்கு அழைத்துசென்று விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் பொறுப்பை கவனித்து கொண்டார்.

உணவிற்குப்பின் சங்கத்தலைவர்கள் நடந்தது பற்றி பரி சீலித்து அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஓய்வாக விவாதிப்பார்கள்.

உத்திர பிரதேசத்தை சார்ந்த தோஈழர் திவாரி ஆங்கிலத்திலும்,இந்தியிலும் அற்புதமாக பேசக்கூடியவர்.
தோழர் ! இன்று உங்கள் பேச்சு அருமையாக இருந்தது.காரண காரியங்களை நீங்கள் எடுத்து அடுக்கியது சிறப்பாக இருந்தது.சங்கத்தை கட்டிக்காக்கவும், ஒன்றுபட்டு போராடவும் நீங்கள்  சொன்னது உணர்ச்சிகரமாகவும் அறி வார்ந்தும் இருந்தது. என்றார் .
"தவறாக எதுவும் பேசிவிடவில்லையே ?" என்றார் ..
"நிச்சயமாக இல்லை " என்று கூறிய திவாரி  "இந்த மதறாசிகளுக்கு ஆங்கில உச்சரிப்பு ஏன் தப்பு தப்பாக வருகிறது என்பது தான் எனக்கு புரிய மாட்டேன் என்கிறது 'என்றார்.
"எது தோழர் ? "
"it is not ஸ்பிளிட் com ! it is  இஸ்பிளிட்  " என்றார் 
இந்தியில் வார்த்தையின் முதல் எழுத்து உயிரெழுத்தில் இருக்க வேண்டும். அதனால் ஸ்பிளிட் என்பதை "இ" சேர்த்து "இஸ்ப்ளிட்" என்பார்கள்.ஸ்கூல் என்பதை இஸ்கூல் என்பார்கள்.

இதனை சாய்ந்து படுத்துக் கொண்டிருந்து கேட்டுக் கொண்டிருந்த பஞ்சாசாபிக்காரரான மன்சண்டா படக் கென்று எழுந்தார். "தோழர்  அருமையாக பேசினிர்கள். திவாரி சொன்னதைனான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 
அவர் கடைசியாக சொன்னதை தயவு செய்து ஒப்புக்கொள்ளாதீர்கள். !  அது "ஸ்பிளிட்" அல்ல. "இஸ்பிளிட்" அல்ல"
"எது தான் சரி  தோழர்>?"
"சபிளிட்"என்பதுதான் சரியான உச்சரிப்பு என்றார .
பஞ்சாபி" குருமுகி"யில்  "ஸ் "என்ற எழுத்துக்கு பின்னால்  "அ " என்ற உயிரெழுத்தை சேர்த்து "சபிளிட் " என்கிறார்கள்.

இதனைக் கவனித்துக்கொண்டிருந்த மேற்கு வங்க தோழர் " பைத்திய நாத் ! கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார்.

வாங்க மொழியில் "வ" எழுத்து கிடையாது> அதனால்" விஸ்வநாதன் " பிஸ்வனாதன் ஆகிறான். "வைகாசி" "பைகாசி"  ஆகிறது.வைத்தியநாதன் பாவம் பைத்தியனாதன் ஆனான்.



(இதனை முழுக்க முழுக்க தலைவர்களின் சம்பாஷணையின் போது கேள்விப்பட்டது .)



Saturday, March 05, 2016



பி.கே நாயரும் ,

"ஊமை படங்களும் "






மும்பையின் பஞ்சாலைகள இருக்கும் பகுதி> ஆலவாயிலில் கூலிதோழிலாளர்கள்  காத்திருக்கிறார்கள். வாயிற்காப்போன் ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருக்கிறான். வயதான தொழிலாளி ஒருவனை உள்ளெ விட மறுக்கிறான்.நான் நேற்றும் வேலை  பார்த்தேன் என்கிறான் தொர்ழிலாளி..உனக்கு வயதாகிவிட்டது.அதனால் உன்னை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்கள் என்கிறான் வாயிற்காப்போன். இருவருக்கும் தள்ளு முள்ளு . மோதலில் தொழிலாளி கிழே விழுகிறான். அவன்தலை படியில் மோத அவன் மயங்கி விழுகிறான்.

காட்சி மாறுகிறது. புனே நகரத்து வயல் வெளியில் விவசாயி வயலுக்கு நீர் பாய்ச்சிக் ஒண்டு இருக்கிறான். அவன் மாணவி அவனுக்கு கஞ்சி கொண்டுவருகிறாள். அவளோடு அவ்ர்களின் ஐந்து வயது மகன் வந்து தந்தையிடும் கொஞ்சி விளையாடுகிறான்.

நல்ல விளைச்சலில் இருக்கிறது அறுவடை முடிந்ததும் கடனை அடைத்து விடலாம் என்று மனைவியிடம் கூறுகிறான்.

அப்போது அங்கு வந்த சௌகார் (வட்டிக்காரன் ) விவசாயியை விரட்டிவிட்டு மகசூலயும் வயலையும் எடுத்துக் கொள்கிறான்.

காட்சி மாறுகிறது.

மயங்கி விழுந்த தொழிலாளியின் மகன் ஒடி வருகிறான் வாலிபனான மகன்  தந்தையின் தலையை தன மடியில் போட்டுக் கொள்கிறான் . "  மகனே !எந்த சமயத்திலும் நீ சௌவகாரிடம் வட்டிக்கு கடன் வாங்காதே "என்று கூறி சாய்கிறான்!

"சௌகாரிகி பாஷ் "(வட்டிக்காரன் வலை ") என்ற இந்த படத்தில் விவசாயியாக நடித்தவர் பாபுராவ் பெயிண்டர் என்ற நடிகர் இயக்குனர் அவர் இளம் மகனாக நடித்தவர் வி.சாந்தாராம்.

அற்புதமான இந்த ஊமைப்படம் இப்பொது இல்லை ஆனால் அதன் சில strip 
அதாவது   50 அடி,100 அடி துண்டுகள் கல்கத்தாவில் உள்ள காயலான் கடையில் இருப்பதாக கேள்விப்பட்ட பி.கே நாயர் ஓடிச்சென்று அதன பாது காத்து ஆவ\ண பாதுகாப்பகத்தில் வைத்துள்ளார்.

1979ம் ஆண்டு நெல்லூரில் நடந்த திரைப்பட ரசனை  முகாமில் நாயரையும்,சதீஷ் பகதூரையும் சந்தித்து பழகும் வாய்ப்பு கிடத்தது பின்னர் மதுரையில், நாயர்,சதீஷ் பகதூர்,தியோடர் பாஸ்கரன் ஆகியோரோடு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பி.கே நாயர் திரைப்படத்தை கலை  வடிவமாக மட்டுமல்லாமல் அறிவியல்ரீதியாகவும் வளர்த்தெடுத்தவர்.


("சௌகார் கி பாஷ் " படம்  பற்றிய குறிப்பு சித்தார்த் காக்  ஆசிரியராக இருந்த "cinima " என்ற பத்திரிகையிலிருந்து கண்டெடுத்தது)

Thursday, March 03, 2016

பேராசிரியர் கதிரேசன்  (என்ற )

அருணன் ....!





1969 70 ஆண்டாக இருக்கலாம். தீக்கதிர், மாநிலக்குழு அலுவலகம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் கேந்திரமான இடம் மதுரை ஒண்ணாம் நம்பர் சந்தில் செயல்பட்டு வந்தது.ஒரு  நாள் நானும் ஞானபரதியும் பணியாற்றிக் கொண்டிருந்த பொது முத்தையா அவர்கள் இரண்டு மாணவர்களை அறிமுகப்படுத்தினார்கள் .இருவரும் அண்ணாமலை பலகலைகழக மாணவர் சங்க தோழர்கள்.கோடை விடுமுறையின் பொது கட்சி ப்பணி யாற்ற  வந்தவர்கள்.

ஒருவர் தற்போது செயற்குழு உறுப்பினராகவும் மார்க்சிச்கட்சி எம்.எல் எ விமான பாலகிருஷ்ணன் அவர்கள்.

மற்றொருவர் பேராசிரியர் கதிரேசன்  என்ற  நாம் அழைக்கும் தோழர் அருணன்.

உடல்வாகு என்று பார்த்தால் இன்றைய அருணனுக்கும் அன்றய அருணனுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. முதுமை சில கோடுகளை விளைவித்திருக்கிறது என்பதை தவிர.
மதுரைக்காறர். தினமும் காலையும்,மாலையும் "ஜிம் " போவார்முட்டை பால் மட்டுமே அருந்துவார்.

படிப்பு முடிந்ததும் மதுரை பலகலையில் விரிவுரையாளராக சேர்ந்தார்.அன்றிலிருந்து அவர் வளர்ச்சியை பிரமிப்போடு பார்த்து மகிழ்ந்து வந்தவன் நான். அலுவலக மேசையில் இருப்பார்.இல்லையென்றால் பலகலைகழக நூலகத்திலிருப்பார .படிப்பு-படிப்பு-படிப்பு அதுதான் அவரை  ஒரு மிகப்பலம் வாய்ந்த மார்க்சீய அறிஞராக நமக்கு தந்திருக்கிறது.

மிகச்சிறந்த எழுத்தாளர். அவர் "கசடு"என்ற பெயரில் எழுதி விகடனில் வந்த சிறுகதை இன்றும் என் நினைவில் ஓடுகிறது.

படப்பிலக்கியத்திளிருந்து ஒதுங்கி விமரிசனத்தில் தன முத்திரையை  பதிப்பித்தவர்.
பின்னர் தத்துவார்த்த விஷயங்களில் கவனம் செலுத்தினார். ஏராளமான நுல்களை அளித்தார்.
1975ம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்தபோது அதன் முக்கிய ஆளுமையாக வளர்ந்து அதனை ஆலவிருட்சமாக வளர்த்தார்>

சென்ற ஆண்டு என்னுடைய வலைபதிவில் "வசமான கை "என்று அவரைப்பற்றி எழுதி இருந்தேன்.

தொலைக்காட்சி விவாதங்களில் அவர்  ஆற்றும் பங்கினை  போற்றி புகழ்ந்து எழுதி இருந்தேன்..தற்போது தந்தி தொலைக்காட்சியில் நடந்தது மனதை வருந்தச் செய்கிறது. இதிலிருந்து தோழர் அருணன் விரைவில் விடுபட வேண்டும்  மீண்டும் அவருடைய கணீர் குரல் தொலைகாட்சிகளில் கம்பிரமாக ஒலிக்கவேண்டும் .