Sunday, August 13, 2017





-----------------------------------------

Do not impose Hindi


Down with  Hindi Imperialism 


-----------------------------------------






அஞ்சல் அட்டையைவாங்கி அதில்முகவரி எழுதும் பகுதிக்கு எதிர்புறம் உள்ள பகுதியில்  தலைப்பில் உள்ள ஆங்கில வார்த்தைகளை கட்டம் கட்டி அச்சடித்து  விற்பார்கள். அதனை வாங்கித்தான் நாங்கள் பயன்படுத்தினோம்.


மொழி பிரச்சினை நம் நாட்டில் அவ்வப்போது தலை  எடுக்கத்தான் செய்கிறது. அரசியல் நிர்ணய சபையில் இது பற்றிய விவாதம் வரலாற்றின் இண்டு  இடுக்குகளில் சிக்கி நிற்கிறது .


உத்தர பிரதேசமும்,அன்றய மத்திய மாகாணமும் எதோ தங்கள் தான் இந்தியா என்று மார்தட்டிக்கொண்டிருந்த காலம் அது .இன்று அதனை பசு பிரதேசமாக வர்ணிக்கிறார்கள்.அன்றைய காங்கிரஸ் காரர்கள் நாசுக்காக கையாண்டிருந்தால் நிலைமை மாறி இருக்கலாம்ஆனால் அவர்களுடைய "அவசர குடுக்கைத்தனம்" நிலைமையை மோசமாக்கியது.


கோவிந்த் வல்லபபந்த் ,பி.டி தாண்டன்,,மற்றும் செட் கோவிந்த தாஸ்  மூவரும் முந்திரிக்கொட்டையாக நின்றதால் அரசியல் நிர்ணய சபை திணறியது .


நிர்ணய சபையில் மேற்கு வங்கத்திலிருந்து வந்த உறுப்பினர் சியாமா பிரசாத் முகர்ஜி இது பற்றி கூறினார்> இவர்தான் பின்னாளில் ஜனசங் கட்ச்சியை ஆரம்பித்தவர்.


"இந்த மூவரும்பொத்திக்கொண்டு இருந்திருந்தால் இவர்கள் கேட்டதற்கு மேலேயே கிடைத்திருக்கும்  .என்னசெய்ய ! அவசரப்பட்டு காரியத்தைக்கெடுத்துவிட்டார்கள் " என்று குறிப்பிட்டார்.


இன்று நாட்டின் குரலாக ஒலிக்கும் அளவுக்கு இந்தி வளர்ந்துள்ளதா என்ற கேள்வி பதில் இல்லாமல் தவிக்கிறது .பஞ்சாபி, வங்கமொழி ,தெலுங்கு ,தமிழ் ஆகியவைமிகசிறந்த வளம் கொண்டவை .


மொழி மக்களின் உணர்வை பிரதி பலிப்பவை.தங்கள் குறுகிய  நோக்கத்திற்காக தெலுங்கு பேசும் மக்களை ஆந்திரா, தெலுங்கானா என்று பிரித்தா காங்கிரஸ் திணறிக்கொண்டு நிற்கிறது.


உத்தித பிரதேசத்தில் இந்தி மட்டுமல்லாது உருது மொழியும் சேர்ந்து பயன்படுத்தவேண்டும் என்று 50 ஆண்டுகளில் எழுந்த கோரிக்கை நேரு போன்றவர்களால் ஆதரிக்கப்பட்டது. உருது மொழியை இஸ்லாத்தோடு இணைத்து பிரசாரம் செய்து வந்த இந்துத்வா செல்வாக்கு பெற்று வருவதை கண்டு நேரு அந்த முயற்சியை கைவிட்டார்.


வருங்காலத்தில் மொழிக்கான சுதந்திர கோரிக்கை பலமாக எழத்தான் போகிறது. கர்நாடக தனி  கோடி வேண்டும் என்கிறது. தனி முத்திரை வேண்டும் என்று தமிழ் நாடு கேட்கிறது .


நடப்பது 2017 ம் ஆண்டு. 1950 ஆண்டு அல்ல. மக்களின் அனுபவம்,அரசின் பயன்பாடு , நல்வாழ்வு அவர்களுக்கு பல புதிய செய்திகளையும், சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறது.


கிராமப்புற ஏழ்மை,வேலையின்மை,ஆகியவை ஆந்திரா ,தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவ்ற்றின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது. இந்த கொள்ளையில் மொழிபிரச்சினையை உருவாக்குவது எரியும் விறகால் தலையை  சொரிந்து கொளவதாகவே இருக்கும்.     


0 comments: