Tuesday, May 01, 2018





டாக்டர்.அசோக் மித்ராவுக்கு 

அஞ்சலி......!!!









மார்க்சிஸ்ட்கட்ச்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மேற்குவங்க நிதி அமைச்சராக இருந்தவரு ம் ஆன  டாக்டர் அசோக் மித்ரா இன்று காலை மரணமடைந்தார் என்ற செய்தி வந்துள்ளது.

1967 ம் ஆண்டுகளில் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் டாக்டர் மித்ரா. வங்கிகளை நாட்டுடமையாக்கம் யோசனையவ் முன்மொழிந்து அதனை நடைமுறைப்படுத்தியவர் அவர்.

மதுரையில் மாநில சுயஆட்ச்சி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவரை அ ழைத்து வரும் பொறுப்புப்பினை எனக்கும் தீக்கதிர் நாராயணன் அவர்களுக்கும் கொடுத்திருந்தார்கள் .நாங்கள் விருந்தினர் விடுதிக்கு சென்றோம். 

விமானம் வரதமதமானதால் விடுதியில் காத்திருந்தோம். மத்திய நேரம். பசி. நான் கொண்டுவந்திருந்த "பரோட்டாவை "  அந்த அறையில் அமர்ந்து நானும் நாராயணனும் உண்டோம். சிறிது நேரத்தில் ரிசப்ஷன் தாசில்தார் வந்தார்.  நாங்கள் தங்கி இருந்த அறைக்கு அருகில் ஒரே சத்தம். தாசில்தாரிடம் கேட்டேன். அமைசர் கிருஷ்ணசாமி வந்திருப்பதாக சொன்னார். "என்ன சத்தம் ?"

"அதை ஏன் கேக்கறீங்க சார். ! அமைச்சருக்காக விருது நகரிலிருந்து வான்கோழி பிரியாணி கொண்டு வந்திருக்கோம். இருபது பிளேட் ஆர்ட ர் செய்தொம்."  

"அவர் ஒருத்தர்தானே "

"பாக்க கடசிகாரங்க வருவங்கதானே "கூட்டம் கொஞ்ச்ம அதிகம் அதனால தன சத்தம் அதிகமா இருக்கு "

 எஸ்காட் போலீஸோட அமைச்சர் அசோக் மித்ரா வந்தார்.

அறைக்குள் சென்றார் . நாங்கள் வெளியில் நின்று கொண்டோம். சிலநிமிடங்களில் அறைக்கதவு திறந்தது. Hey ! why you stamd in the hot sun ? comeon !come inside " என்றார் அமைசர். தயங்கிய படியே உள்ளே சென்றோம்.

தசிலாதார் இருப்புக்கொள்ளாமல் தவித்தார்." சார் ! உணவுக்கு ஏற்பாடு பண்ணனும். கேட்டு சொல்லுங்க சார்" என்றார்  .

"they gave some thing in the flight ! that is enough ! " for the night you halfcup of  pepper rasam and two bananaas !"



தாசில் தார் என்னையே பார்த்தார் "அவங்க மிளகாப்பழம் சாப்பிட மாட்டாங்க சார்  "என்றேன்.

வங்காளிகள் நல்ல "நீர்மீன்" கேட்பார்கள் ! அதற்காக மேட்டூர் அணையிலிருந்து மீனுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார் தாசில்தார்..பாவம்  அவர்முகத்தில் தான் எவ்வளவு ஏமாற்றம் !

உலகம் போற்றும் பொருளாதார நிபுணர்.எவ்வளவு எளிமையான வாழ்க்கை !

"லால் சலாம் ! டாக்டர் மித்ரா !!

0 comments: