Sunday, June 03, 2018





புதுச்சேரிக்கு 

பயணச் சீட்டு ,

வாங்கிவிட்டேன் !!!




முதுமையும் இயலாமையும் சமாளிக்க வேணும்.. நண்பர்களுக்கு தொந்திரவாக இருக்கும் பயணம் வேண்டாம் என்று உறவுகளும் நட்புகளும் கூறினர்.  சரி  என்றே பட்டது.

கவலை வேண்டாம். உங்களை பத்திரமாக வரவேற்று அனுப்பும் பொறுப்பு என்னுடையது என்று எல்.ஐ.சி  தோழர் புதுவை ராம்ஜி அபயமளித்தார்> அவ்ர   மீ து பாரத்தை போட்டுக்கொண்டு முத்து மீ னாட சியின்  துணையோடு வர உத்தேசித்து விட்டேன் .

முதல் மாநாட்டில் பங்கெடுத்தவன். 14வது மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.

முத்த எழுத்தாளகள்   குசிபா,  சிகரம் செந்தில்நாதன், இளம்தாரிகள் சுப்பாராவ்,குமரேசன், மற்றும் நுற்றுக்கணக்கான புதிய பாரத புத்திரர்கள் ஆகியோரை சந்திப்பதே ஒரு முக்கிய காரணமாகும்.

முதல் மாநாடு நெஞ்சில் நிழலாடுகிறது. இரண்டுநாள் மாநாடு. இரண்டாம் நாள் கலை நிகழ்ச்சியாக நாடகம்> மதுர பீப்பிள்ஸ் தியேட்டர்குழு அரங்கேற்றினார்கள் .கே.எம்.எழுதிய நாடகம். "புதிய தலைமுறை ".இயக்கம் காஸ்யபன். இசை ராஜகுண சேகர் .

சாஸ்திரிகள் ஒருவர் .அவருடைய மகனை பரந்தாமனை வேதம் மற்றும் மந்திரங்களை சொல்லிக்கொடுத்து புரோகிதனாக்குகிறார். பரந்தாமன் பின்னாளில் பக்கத்து வீ ட்டு விதவை பெண்ணை காதலித்து சென்னை செல்கிறான்> அங்கு தொழிற்சாலையில் பணியாற்றி தொழிற்சங்க தலைவனாகிறான்.

சாஸ்திரிகள் பாத்திரத்தை காஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திரர் மாதிரி கே.எம் அமைத்திருப்பார்.மதுரை மில் தொழிலாளி துரைராஜ் அற்புதமாக நடித்தார் .பரந்தாமனாக நான் நடித்தேன். அது ஒரு காமெடி கலந்த சோக பாத்திரமாக கே.எம்.அமைத்திருந்தார் . அந்த காலத்தில் டி .ஆர் .ராமசந்திரன் என்றொரு நடிகர் இருந்தார் .அவர் பாணியில் காமெடியும் சோகமும் கலந்து நடித்தேன்.

தமிழகம் முழுவதும் போட்டோம்.கோவையில் முதல் நாள். நாமக்கல்லில் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் சேலத்தில். சேலத்தில் திராவிடர்கழக தோசர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு காட்சி ஓரே நாளில் போட்டோம்.

இந்தநாடகத்தைப்பார்த்த தோழர் குசிபா  அவர்களும் இயக்குனர் செல்வராஜ் அவர்களும் "புதிய அடிமைகள் "திரைப்படத்தில் நடிக்க அழை த்தது  தனி கதை   !!!

0 comments: