skip to main |
skip to sidebar
என் முன்னோடி
ப.ரத்தினம்
மறைந்தார் ...!
அஞ்சலிகள் !!!
1962ம் ஆண்டு வாக்கில் "தாமரை " இதழில் என் முதல்சிறுகதை வெளிவந்ததிலிருந்து ரத்தினம் அவர்கள் பரிச்சியம். கட்சி ஒன்றாயிருந்த காலம்.
நவபாரதி ,முப்பால் மணி , காஸ்யபன், ப.இரத்தினம் என்று ஒரு ஜமா சேர்ந்திருப்போம். கலை ,இலக்கிய பெறு மன்றம் தான் எங்கள் புகலிடம்.
காலம் மாறியது. 1969ம் ஆண்டு செம்மலர் பத்திரிகையை கு.சின்னப்ப பாரதி ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக உள்ள ஆசிரியர் குழுவில் என்னை சேர்த்துவிட்டார் தோழர் ப.ரத்தினம்.
நெருக்கம் அதிகமானது. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டிற்காக அவர் எழுதிய நாடகம் "நெஞ்சில் ஒரு கனல் "பீப்பிள்ஸ் தியேட்டரின் சார்பாக அரங்கேற்றப்பட்டது. வையை செழியன் என்ற பெயரில் எழுதி இருந்தார். இயக்கியவர் காஸ்யபன்,
செம்மலரில் ப.ரத்தினம் என்ற பெயரில் எழுதிவந்தார். சில சமயங்களில் மதிச்சியம் கணேசன் என்ற பெயரிலும் எழுதி உள்ளார்.
1974ம் ஆண்டு செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் மதுரை பெரியார் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தில் சந்தித்தோம்.தமிழகம் பூராவிலும் இருந்து வந்திருந்தவர்கள் 16 பேர்.
நமக்கு என்று ஒரு எழுத்தாளர்சங்கம் ஆரம்பிக்க முடிவாகியது. 1975ம் ஆண்டு சங்கம் உதயமாகியது. மதுர மாவட்ட செயலாளராக ரத்தினம் அவர்கள்பணியாற்றினார்கள். என்னையும்மாவட்ட செயலாளராக ஆக் கி அழகு பார்த்தார்கள்.
அப்போது மார்க்சிஸ்க்காட்ச்சியின் மாநிலக்குழு மதுரையில்செயல்பட்டு வந்தது. கடசியின் முது கெலும்பாக பணியாற்றினார். தன்னை எப்போதுமே முன் நிறுத்திக்கொள்ளாத மனம் கொண்டவர்.இளைஞர்களை ஆதரித்தது செயல்படுவார்.
அற்புதமான அந்த தோழரின் மறைவு கட்சிக்கும் தனிப்பட்டமுறையில் எனக்கும் பெரும் இழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலிகள்!!!
0 comments:
Post a Comment