Monday, May 03, 2010

my teacher......

இந்தியா சுதந்திரமடையும்போது எனக்கு பதினொரு வயது முடிவடையவில்லை.ப ள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளீ,நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி என்றுதானிருக்கும்.காலையில் இறைவணக்கம் உண்டு. "God save our king"என்று பாடிவிட்டுத்தான் "பொன்னார் மேனியனே" பாடவேண்டும் வாரத்தில் மூன்றுவகுப்புகள் ஓவியம்,கைவினை,நல்லொழுக்கம் என்று உண்டு. அழகேசன் சார் தான் மூன்று வகுப்புகளையும் நடத்துவார்.நீராவி,மேகம்,மழை பற்றி விளக்குவார் ஏழாம் வகுப்பில் பல நாவல்களை படித்துக்காட்டுவார்.".le miserable" என்ற பிரஞ்சு நவலின் மொழிபெயர்ப்பை ப்படித்துக்காட்டுவா.ர்.சிலசமையம் அவர் குரல் தழுதழுக்கும்.கண்ணீர்முட்டும்."uncle Toms cabin" ஐ கதையாகச்சொல்லும்போது எங்களுக்கு அழுகை வரும்.எட்டாவது படிக்கும் போது சிறு புத்தகங்களை கொடுத்து மவுனமாக படிக் கச்சொல்வார்..ஐரோப்பிய தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் அவை.அப்படித்தான் ரூ சோ,சமுதாய ஒப்பந்தம்,வால்டயர்,கரிபால்டி,மாஜினி,கிராம்வெல்.என்று படித்துதெரிந்தோம்." வீட்டிற்கு கொண்டுபொகாதே.வகுப்பிலேயே படி என்று கூறி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.கருநீல அட்டையில் தாடி வைத்த ஒரு படம் இருந்தது."காரல்மார்க்ஸ்" என்றும் எழுதியிருந்தது.அது 48-49ம் ஆண்டாக இருக்கலாம். .இன்றய என் புரிதலோடு பார்க்கும்போது அழகேசன் சார் பிரும்மாண்டமாகத்தெரிகிறார்.கதரில் ,,குட்டையாய்,கருப்பாய்,தங்கநிற மூக்குக்கண்ணாடியோடு,அந்த அழகேசன் சாரை இனி பார்க்க முடியாது. ஆனாலும் மார்க்ஸையும், அழகேசன் சாரையும் என்னால் மறக்க முடியாது.

8 comments:

Raju said...

Dear Kashyapan sir
Your reminiscences on Azhagesan teacher were moving. I may make use of it in Puthiya Aasiriyan.
Continue the journey.
K. Raju

venu's pathivukal said...

அய்யா...
அருமை காஷ்யபன் அய்யா

ஆசிரியரை மறக்காத சமூகம் முன்னோக்கிச் செல்லும்

ஆசிரியரைக் கொண்டாடும் மனது கோடி பெறும்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கண்ணுக்குத் தெரியாத நுட்பமான
ஒளிச் சேர்க்கை மாற்றங்களைச் செய்திருப்பது அழகேசன் போன்ற
அற்புத - தன்னலமற்ற - கனவுகளைக் கண்களுக்குள் தேக்கி வைத்திருக்கிற
அற்புத ஆசிரியர்கள் தான்..

உமது ஆசிரியரை நீர் வியந்து எழுதியிருப்பதைப் படிப்போர்
அவரவர் ஆசிரியரை நினைத்து கண்கள் பணிக்க நிற்பர்...

அழகேசன் சாரை இனி நானும் மறக்க முடியாது...

வாழ்த்துக்கள்

எஸ் வி வி

ராம்ஜி_யாஹூ said...

Thanks for sharing sir. inspirational post.

vimalavidya said...

Those days have gone with the wind...Still i am remembering and meeting my teachers..you have turned my thoughts.Past is always best..

charliecharlie2007 said...
This comment has been removed by the author.
charliecharlie2007 said...

உண்மைதான். நமது பள்ளி, கல்லூரி கல்வி மார்க்கு வாங்கவும் வாங்கிய மார்க்கை காட்டி வேலை வாங்கவும் ஆன கல்விதானே தவிர வேறில்லை. இன்றைய கல்வி வாழ்க்கைக்கான கல்வியும் இல்லை, வாழ்க்கையை சொல்லித்தரும் கல்வியும் இல்லை. புத்தகங்களுக்கு வெளியேதான் வாழ்க்கை உள்ளது என்பதை அழகேசன் போன்ற வெகுசில ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு சொல்கின்றார்கள். எனக்கு ஒரு வடிவேல் வாத்தியார் வாய்த்ததுபோல்... இப்படியான வாத்தியார்கள் வைக்கப் பெற்றவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்... அழகேசன் வடிவேல்....இன்னபிற வழிகாட்டிகள் வாழ்க... அது சரி, தோழர் காஷ்யபன், அன்றைக்கு God save our King... அது பிரிட்டிஷ் அரசரை கடவுள் காப்பாற்ற... இன்றைக்கு இந்தியாவை எந்த கடவுள் வந்து காப்பாற்றுவான்? மாநிலங்கள் அவையை பார்த்தீர்களா? கோடீ...சுவரர்களும் கிரிமினல் பேர்வழிகளும் நிறைந்து கிடக்கும் இந்த 'மூத்தோர்' அவை தெருவில் கிடக்கும் சாமானிய இந்தியனுக்கு என்ன செய்துவிடப் போகின்றது? நாமும்தான் ஓட்டுப் போடுவதைத் தவிர (அல்லது ஐ.பி.எல்.பார்ப்பதை தவிர) என்னதான் செய்துவிடப் போகின்றோம்? இதோ, தமிழகத்தை மட்டுமின்றி மத்திய மந்திரிசபையையும் தனது குடும்ப சொத்தாக மாற்றிவரும் மு.கருணாநிதி, அடங்க மறுக்கும் தனது அசிங்கமான குடும்பசண்டையை தீர்க்க தமிழகத்திலும் மேலவையை உண்டாக்க போகின்றாராம்... வேட்டி மில்காரர்களே! உங்கள் பாடு ஜாலிதான்! வேட்டி விற்பனை அமோகமாக நடக்கும்! ம் ம் ம் ...வெளுத்துக்கட்டுங்க! எங்கள் திராவிடப் பொன்னாடு....
இக்பால்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் மீண்டும் வருவேன் .

Dr.Rudhran said...

ஆடம்பரமில்லாத வார்த்தைகளோடு வாழ்வின் பக்கங்களைப் புரட்டியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவங்களை இன்னும் எழுதினால் அடுத்த தலைமுறைக்கும் சிறிது வெளிச்சம் கிடைக்கும்.பாராட்டுக்கள்.