Wednesday, May 05, 2010

semmalar.....

அப்பொது நான் மதுரை பாரத் கட்டிடத்தில் இருந்த இன்சூரன்சு அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.எழுத்தாளர்கள் வையைச் செழியனும்(ப.ரத்தினம்) கு.சின்னப்பபாரதியும் வந்தார்கள்.அது மார்ச்சு மாதம்."செம்மலர்" என்ற மாதப்பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் மாலை தீக்கதிர் அலுவலகத்திற்கு வரும்படியும் கூறினார்கள்.கு.சி.பா முழுக்க முழுக்க அவருடைய பொறுப்பில் .சொந்த நிதி ஆதாரத்தில் பத்திரிகை யை நடத்துவது என்று முடிவாகியிருந்தது .ஞானபாரதி,வையைச்செழியன்,தி.வரதராசன்,த.சா.ராசாமணி,காஸ்யபன் ஆகியோர் ஆசிரியர் குசிபா வுக்கு உதவ வேண்டும்.மதுரை 1ம்சந்தில் அப்போது இயங்கிவந்த தீக்கதிர் அலுவலகத்திலேயே செம்மலரும் இயங்கும் என்று உறுதியா யிற்று. வந்த கதைகள், கட்டுரைகள், எல்லாவற்றையும் வாங்கி பத்திரப்படுத்தி திவ வைப்பார்.தீக்கதிர் அலுவலகத்திலேயே ஒரு ஜாதிக்காய் பெட்டியில் போட்டு வைப்பார்.அது தான் செம்மலர் அலுவலகம்.வையைச் செழியன்,த.ச.ரா,ஞானபாரதி,காஸ்யபன் ஆகியோர் படித்து பரிசீலித்து கு.சி.பாவின் பர்வைக்கு வைப்பார்கள்.மாதம் பதினைந்து நாள் மதுரை வந்து பிரசுரத்திற்கு உகந்த தை அவர் முடிவு செய்வார்.செம்மலர் முத ல்இதழ் அப்போதிருந்த டிரடில் மிஷினில் மெகானிக் பாலன் அவர்களால் அச்சடிகப்பட்டு வெளியில் விழ நாங்கள் பூரித்துப்போனோம். செம்மலர் நாற்பது ஆண்டுகள் முடிந்து நாற்பத்தியோன்றாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது.தற்போது தி.வரதராசன் மட்டுமே செம்மலரோடு பழய நண்பர்களில் தொடர்ந்து பணியாற்றிகொண்டிருக்கிறார் கு.சிபா,வையைச் செழியன்,ஞானபாரதி ஆகியோர் சார்பிலும்,என் சார்பிலும்செம்மலர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

7 comments:

ganesh said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க காம்ரேட்... அற்புதமான எண்ணங்கள். பாருங்களேன்.. ஒரு மேட்டரப் போட்டுட்டு இதோ புதிய இடுகை என்று எஸ்.எம்.எஸ். அனுப்புனா, அடுத்த நிமிடம் உலகமே பாத்துடலாம். தொடருங்கள்.. நாங்களும் உங்களைத் தொடர்கிறோம்... நன்றி...

venu's pathivukal said...

அன்பு காஷ்யபன் அவர்களுக்கு

என்ன ஒற்றுமை...

உங்களது பதிவைப் படித்த மறுநாள் செம்மலர் இதழ் 41 வது ஆண்டில் எடுத்து வைக்கும் செய்தி கிடைக்கப் பெற்றேன்....

12 05 2010 அன்று மதுரையில் நடக்க இருக்கும் விழாவில் உங்களைப் போன்ற எண்ணற்ற முன்வரிசை உழைப்பாளிகளின் பங்களிப்பு பதிவு செய்யப்படும் என்று நினைக்கையில் பெருமிதமாக உள்ளது.
மூத்த தோழர் முத்தையாவின் நினைவுகளோடு....

நீண்ட நாள் வாசகனான எனது படைப்புகளும் செம்மலரில் இடம் பெற்றது என்னளவில் நானும் கொஞ்சம் பெருமை சூடிக் கொள்ள உதவுகிறது.......

எஸ் வி வி

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நானும் செம்மலர் வாசகன் தான்

vimalavidya said...

Kindly while writing NAMES Please write the full Names...The blogs are being read by varieties of readers who do not know many names you are mentioning.Kindly take my points into consideration.

harmony said...

The beauty of your blog is that it comes straight from the heart and thus makes an interesting reading. I look forward to reading more and more of your experiences with people who matter. I have the pleasure of reading many of your short stories. I enjoyed your narration and the technique of leaving the reader to draw the simple but vital message you intend to communicate.

harmony said...

The beauty of your blog is that it comes straight from the heart and thus makes an interesting reading. I look forward to reading more and more of your experiences with people who matter. I have the pleasure of reading many of your short stories. I enjoyed your narration and the technique of leaving the reader to draw the simple but vital message you intend to communicate.

May 20, 2010 11:30 AM

தமிழ்பாலா said...

முற்போக்குப் பத்திரிகைகள் சிறு திணைஅளவினில் ஆரம்பித்தாலும் பெரிய பிரபஞ்ச அளவினில் பிரமிக்கத்தக்க வகையினில் முன்னேற்றம் காணும் அதுபோல செம்மலரும் அதில் எழுதிய எழுத்தாளர்களையெல்லாம் மக்கள் படைப்புக்களை வெளிக்கொணர்ந்து தனக்கென ஒரு பெரிய வாசகர்வட்டத்தை தன்னகத்தே கொண்டு வீறு நடைபோட்டு வருகின்றது அது தனது மகத்தான சமூகப்பணிதனை அயராது செய்துவருகின்றது அதற்கு எஸ்.ஏ.பி போன்ற ஆசாண்களின் உழைப்பு என்றென்றும் போற்றத்தக்க ஒன்றாகும்
செம்மலரின் பணி என்றென்றைக்கும் உழைப்பாளரின் உரிமைக்கு குரல்கொடுக்கும் தன் வீரஞ்செறிந்த போராட்டத்தைத் தொடர தோழமையுடன் வாழ்த்துக்கள் அன்புடன் -தமிழ்பாலா-”