ஒரு சிறிய இடைவேளி.
வங்க மொழி நாடகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருப் பதற்கு இடையி
ல் நேற்று(29-7-10) பாத்த நாடகம் பற்றி எழுதுகிறேன்."பெண் மனத்தின் பரவசம்" என்பது நாடகத்தின் பெயர்.
நீரஜா தன் தாயாருடன் வீட்டிற்குள் வருகிறாள்.அவளுக்கும் தாயாருக்கும் கடுமையான வாக்கு வாதம்.காலாகாலத்தில் திருமணம் செய்யவேண்டும் என்பது தயாரின் வாதம்.பார்த்த வரன் எதையும் அவள் ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிக்கிறாள்.தாயாரின் தோழி இருவரையும் சமாதானம் செய்கிறாள். நீரஜாவுக்கு ஆலொசனை கூறுகிறாள்.தாயாரும் தோழியும் வெளியேற ரயிலடியில் நீரஜா ரயிலுக்காகக்காத்திருக்கிறாள்.அவள் படித்தவள்.அற்புதமாகக் கவிதை எழுதுவாள்.தன் வருங்காலக் கணவன் பற்றி அவளுக்குள்ளே ஒரு படிமம் உள்ளது.அதனை நினைக்கிறாள்.
நடைமேடையில் ஒரு இளை ஞன்..இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.அவனுக்கும் கவிதை,இலக்கியம்,எல்லாம் பிடிக்கிறது.ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.திருமணம் முடிந்து.காதல்,கவிதை,இலக்கியம்.அன்பு,ஊடல் என்று வழ்க்கை மகிழ்ச்சியாக ஒடுகிறது."ரயில் வரப்போகுது,சீக்கிரம் வாங்க.என்று ஒரு பெண் குரல் கேட்கிறது.நீரஜா யார் என்று கேட்க, மனைவி என்கிறான் அவன். நினைவு வர கண்டது கனவு என்று உணர்கிறாள் நீரஜா.நினைவோடை யுக்த்தியில்(stream of conciousness) உருவான நாடகம் இது
"மலரும் மொட்டு" என்பது அடுத்த நாடகத்தின் பெயர்.கல்லூரியில் படிக்கும் பெண் அவள். அவளுடைய பாட்டியும் அவளும் ஒரே அறையில் தான் படிக்கவேண்டியதுள்ளது.இதேச்சையாக அவள் ஜன்னல் வழியே பார்க்கும் போது ஒரு பெண் கொலை செய்யப்படுவதைப் பர்க்கிறாள்.மயங்கி விழுகிறாள்.பேசும் சக்தியை இழக்கிறாள்.கொலையை போலீஸ் விசாரிக்கிறது.சாட்சி அந்தப்பெண் மட்டுமே.அவளுக்கு வைத்தியம் நடக்கிறது.பெண்ணின் தயாரும் பாட்டியும் அவள் சாட்சி சொல்வதை விரும்பவில்லை.அவளுக்கு தூக்க நிலையை உருவாக்கி பேசவைக்க முயற்சி நடக்கிறது.அவள் குணமடைகிறாள்.கொலை செய்யப்பட்ட பெண் தன் தோழி என்றும்,கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டாள் என்றும் கூறு கிறாள்.இது போன்ற நிலை வராமல் தடுக்க, குற்றவாளி தண்டனை பெற நாம் சட்சி சொல்லத்தான் வேண்டும் என்றும் சொல் கிறாள்
இந்த இரண்டு நாட்க்ங்களைப் பற்றியும் உங்கள் கருத்தை எழுதுங்கள்.இந்த இரண்டு நாடகங்களும் சமஸ்கிருதத்தில் எழுதி மேடையேற்றபட்ட வை என்பது கூடுதல் தகவலகும்.
0 comments:
Post a Comment