Wednesday, July 21, 2010

Theatre.....2

கல்லோல்(துரோகம்)
மும்பையில் கடற்படை மாலுமிகளின் எழுச்சி என்பது இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும்.இரண்டாம் உலகப்போரில் நொருங்கியிருந்த பிரிட்டிஷ் அரசு கடற்படையோடு,ராணுவ,விமானப்படைகளும் இணைந்தால் என்னவாகும் என்று கதிகலங்கிய நேரம் பிரிட்டிஷ் வர்த்தகனநலனைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கலானார்கள். மாலுமிகள் தங்கள் போரட்டத்தை விரிந்த அளவில் கொண்டு சென்றார்கள்.முக்கிய தேசீய கட்சிகளான கம்யூனிஸ்டு,கங்கிரஸ், முஸ்லீல் லீக் ஆதரவோடு போராடினார்கள்.

அகில இந்திய தொழிற்சங்க கங்கிரஸ் மாலுமிகளுக்கு ஆதரவாக ஹர்த்தாலுக்கு அறைகூவல் விட்டது.மும்பை நகரம் உறைந்தது.பிரிட்டிஷ் அரசு ராநு வத்தை அழைத்தது.ராணு .வம் துறைமுகத்திற்குள் நுழையாமல் மக்கள் உதவியோடு தொழிலாளர்கள் தடுத்தனர்.மும்பை மாலுமிகளுக்கு ஆதரவாக கல்கத்தா,சென்னை,தொழிலாளர்களும் மக்களும் வீறுகொண்டு எழுந்தனர்.அப்போது மெட்றாஸ் எப்படியிருந்தது என்பதை முதுபெரும் சுதந்திரபோராட்டவிரரும்"தீக்கதிர்" துணை அசிரியராகப்பணியாற்றியவருமான ஐ.மாயாண்டிபாரதி

(வயது 93)" மூன்று நாளாக பி அண்ட் சி மில் ஓடவில்லை.டிராம் ஓடவில்லை.மவுண்ட் ரொடில் மக்கள்வெள்ளம்.தடுக்கவந்த போலீசரை மக்களே விரட்டியடித்தனர்.ஏ.ஐ.டி.யு.சி தோழர்கள் தான் போக்குவரத்தை நெறிப்படுதினர்.அந்த மூன்றுநாட்களும் மதறாஸ பட்டினம் மக்கள்கையில் தொழிலாளர்கள் தலைமயில் செயல்பட்டது" என்று கூறுவார்.

பிரிட்டிஷரசு தன் வேலையை ஆரம்பித்தது.இந்தியமுதலாளிகளை அழைத்துப்பேசியது.

திருகாணி முறுக்கப்பட முஸ்லீம் லிக் தன் ஆதரவை வாபஸ் பெற்றது.வன்முறை,அஹிம்சை என்று காந்தி அறிக்கைவிட கங்கிரசும் ஆதரவை விலக்கிக்கொண்டது.கம்யூனிஸ்டுகள் மட்டுமே களத்தில் நின்றார்கள்.கட்சிக்குள் இருந்த வலதுசாரிகள் மாலுமிகள் சரணடைய ஆலொசனை கூறினார்கள். மறைந்த மோகன் குமாரமங்கலம் மும்பை சென்று ஏ.ஐ.டி.யு.சி தலவர்களோடு பேசினார்.நாடெங்கும் அடக்குமுறையை பிரிட்டிஷ் அரசு ஏவிவிட்டது."பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் சரணடைய மாட்டோம்.இந்தியமக்களுக்காக இந்தியமக்களிடம் சரணடைகிறொம் "என்று மாலுமிகள் அறிவித்தனர்.

கல்லொல்(துரோகம்)என்ற இந்தநாடகத்தை உத்பல் தத் மேடை ஏற்றினார்.இறுதிக்காட்சியில்' மேடையில் கொடிக்டகம்பம் இருக்கும்.நடுவில் பச்சை பிறைக்கொடி ஒரு பக்கமும்,மறுபக்கமம்கங்கிரஸின் ராட்டைகொடியும் ஒளிமங்கி இருட்டில் மறைய கம்பத்தின் உச்சியில் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்கும்.

இந்த நாடகம் பற்றி Peoples Democracy சரியான விமரிசனத்தை எழுதியது.New Age பத்திரிகை எதிர் விமரிசனத்தை எழுதியது.இந்த சர்ச்சை ஆறு மாதம் தொடர்ந்தது.

8 comments:

charliecharlie2007 said...

1) மாபெரும் கப்பற்படைப் புரட்சி என்ற சொல்லைக் கேட்டாலே புல்லரிக்கும், நரம்புகள் புடைக்கும்... கூடவே காந்தியாரின் காங்கிரசின் துரோகத்தனங்களும் அம்பலமாகும். 'நாளை எனது (காங்கிரஸ்) ஆட்சி ஸ்தாபிதம் ஆகும் போதும் கூட இராணுவத்தினராகிய நீங்கள் இதேபோல் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வீர்கள்தானே? உங்கள் போராட்டத்தை என்னால் ஒத்துகொள்ள முடியாது' இதுதான் காந்தியாரின் ஸ்டேட்மென்ட். சூப்பர் ஸ்டேட்மென்ட்! 'எனது (காங்கிரஸ்) ஆட்சி ஸ்தாபிதம் ஆகும் போதும் ...' அதாவது நாளை அமையப்போகும் முதலாளித்துவ காங்கிரஸ் ஆட்சி என்பது இதன் பொருள்! காந்தியும் காங்கிரசும் எத்தனை உஷாரான ஆளுங்கபா! வாரன் ஆண்டர்சன்னு ஒருத்தன் இந்திய மக்களை சாகடிப்பான் என்பதை காந்தி எப்படி தீர்க்கதரிசனமா உணர்ந்திருக்காரு! புல்லரிக்குது!
2) 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப்பிறகு காங்கிரசும் காந்தியாரும் சும்மாதான் இருந்தார்கள். 'இனிமேலும் நாம் இந்தியாவில் இருக்க முடியாது' என்று பிரிட்டிஷ் பிரதமர் அட்லியை புலம்பவைத்த புரட்சி கப்பற்படை புரட்சிதான், அதுதான் இருநூறு ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சிக்கு மரண அடி கொடுத்த இறுதிப்போராட்டம். இந்திய மக்களை சுரண்டித் தின்ற சொறி நாய்களை பற்றியெல்லாம் நம் பள்ளிகளில் பாடங்கள் உண்டு.... நமது பாடப்புத்தகங்களில் இது பற்றி எங்கேயாவது ஒரு வார்த்தை உண்டா?
3) தோழர், ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா? 1905 ரஷ்யப்புரட்சியின் தொடக்கத்தை குண்டு வீசி முழங்கி அறிவித்தது பொடேம்கின் என்னும் கப்பல், 1917 புரட்சி தொடங்கியதை குண்டு வீசி முழங்கி அறிவித்தது அரோரா என்னும் கப்பல். பிற்பாடு சோவியத்தில் இக்கப்பல்கள் எல்லாம் அரும்பெரும் பொக்கிசங்களாக சோஷலிச அரசாங்கம் பாதுகாத்து பராமரித்தது. ஆனால் தல்வார் என்ற அந்த கப்பல், கப்பல் அல்ல தண்ணீரில் மிதக்கும் தீப்பந்து, எங்கே போனது? காங்கிரஸ் அரசு என்ன செய்தது அதை?
(1905 ரஷ்யப்புரட்சியின் பொடேம்கின் கப்பல் பற்றிய செர்ஜி ஐசன்ஸ்டைனின் 'battleship Potemkin' என்ற படம் இன்றும் என்றும் உலகப்புகழ் பெற்ற காவியம்)
இக்பால்

Prem said...

Thanks for sharing info. about Battleship Potemkin movie. Saw that in Google videos. Very inspiring movie and unbelievable stuff in 1925.

kashyapan said...

இக்பால் அவர்களே, வெட்டி வா என்றால் கட்டிவருபவர் நீங்கள்."கல்லொல்" பற்றி ஒரு அற்புதமான குறிப்பு அளித்துள்ளீர்கள்.இளைஞர்கள் பார்வைக்கு இவற்றை கொண்டுசெல்ல வேண்டுமே என்பது தான் என் கவலை....காஸ்யபன்.

ஹரிஹரன் said...

கப்பல்படை புரட்சி பற்றி “காம்ரேட்” நாவலில் செய்தி வருகிறது எந்த ஆண்டு நடைபெற்றது. சிப்பாய் புரட்சிக்கு யார் தலைமை தாங்கினார்கள்.

தோழர். இக்பால் வலைப்பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.

kashyapan said...

ஹரிஹரன் அவர்களுக்கு," காம்ரேட்' முழுக்க முழுக்க 1946ம் ஆண்டு நடந்த கப்பற்படை எழுச்சி பற்றியதுதான்.யஷ்பால் எழுதியது.வீரன் பகத் சிங்கின் தோழர்.மிகச்சிறந்த சிறுகதைகளை இந்தி மொழியில் எழுதியவர்.....காஸ்யபன்

ராசராசசோழன் said...

அறியாத விடயத்தை உணர்வு போங்க எழுதி இருக்குறீர்கள்...காங்கிரஸ் என்றுமே அப்படி தான் போல்...

vimalavidya said...

In this issue Gandhi's role was not at all now a days talked by the historians and left parties...His anti role must be exposed fully.

kashyapan said...

வர்க்கரீதியாக கந்திஜி நமக்கு எதிர்மறையாக இருந்தார்.வக்கீல்கள் மாஜிஸ்டிரேட் பதவிக்கு மனுப்போடும் அமைப்பாக இருந்தகாங்கிரசை ஒரு வெகுஜன நிறுவனமாக்கியவர் காந்தியடிகள்.சுதந்திரம் என் பிறப்புரிமை என்ற திலகர் சமூகப்பிரச்சினைகளில் பிற்போக்காளராக இருந்தார்.இப்போது சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய கோபாலகிருஷ்ண கோகிலே விதவைத்திருமணம்,பெண்கல்வி என்றுநின்றார்.சதியை,பால்யவிவாகத்தை எதிர்த்த ராஜாராம் மோகன் ராய் சாகும்போதும் முப்பிரிநூலை எடுக்கவில்லையே என்று நொந்து பாடினார் பாரதியார். குழப்பமும்,முரண்பாடுகளும் சுதந்திரப் போராட்டத்தின் எச்சங்கள் தோழர்.விமலா.....காஸ்யபன்