ஹே! ராம்!---2
கந்தியடிகளைப்பற்றி இந்துபத்திரிக்கையில் ஹர்ஷ் மந்தர் எழுதியிருக்கிறார். அதனைப் படித்த பாதிப்பில் இந்த இடுகையை எழுதுகிறேன்..பிரிவினையின் போது கல்கத்தாவில் கலவரம் மூண்டது.அப்போது வங்க மாகாணப் பிரதமராக இருந்த சுரவர்த்தியும் முஸ்லீம் லீக் தலைவர்களுகம் காந்தியிடம் வேண்டிகொண்டனர் நவகாளி பயணத்தை ஒத்திவைத்துவிட்டு.கல்கத்தா வந்தார் அடிகள்.முஸ்லீம் மக்கள் பகுதியில் இருந்த பாழடைந்த ஹைதாரி மாளைகையில் குப்பை கூளங்களோடு தங்கினார்.இந்துக்கள் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதமிருந்தார்.நாற்பது வயது இந்து ஒருவன் கடுமையாக காந்தியை எதிர்ப்பான்." காந்தி"திரப்படத்தில் இந்தக் காட்சியில் ஓம் பூரி இந்துவாக நடிப்பார். கலவரத்தின் போது அவனுடைய ஒருவயது மகன் கொல்லப்பட்டான். கலவரக்காரர்களில் ஒருவன் குழந்தையின் கால்களைபிடித்துத் தூக்கி சுவற்றில் அறைந்து கொன்று எரியும் நெருப்பில் போட்டதை கண்ணால் பார்த்தவன் அவன்'கலவரத்தை அவன் முன்னின்று தடுக்க வேண்டும் என்பார் காந்தி.அவன் மாண்டுபோன அவன் குழந்தயின் வயதை ஒத்த கலவரத்தில் அனாதையான முஸ்லீம் குழந்தையை வள்ர்க்கவேண்டும் ; அந்தக் குழந்தையை முஸ்லீமாகவே வளர்க்க வேண்டும் என்பதும் காந்தி அடிகளின் நிபந்தனை.அவன் ஏற்றுக் கொண்டு அடிகளுக்கு ரொட்டியைக் கொடுப்பான்.
காந்தியை மகாத்மா என்று ரவீந்திரநாத் தாகூர் அழைத்தார் இந்த தேசத்தின் தந்தை என்று நாம் அழைக்க பேறு பெற்றிருக்கிறோம்.
இருந்தாலும் காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.மிகவும்கறாரக இருப்பார். நெகிழ்ச்சியாகவும் இருப்பார்.சுத்த சைவம்.ஒருமுறை கான் அப்துல் காபர் கான் தன் குழந்தகளோடு காந்தியைப் பார்க்க வந்திருந்தார். அந்தக் குழந்தைகளுக்காக மாமிச உணவை வரவழைத்துக் கொடுதார் அடிகள் நகைச்சுவை உணர்வு உள்ளவர்.
பிரிடிஷ் அரசரைப்.பார்க்கச்சென்றபோதும் வேட்டி,மேல் துண்டோடுதான் போனார்.இதுபற்றி நிருபர் கேட்டபோது " எனக்கும் செர்த்துத்தான் அரசர் அணிந்திருக்கிறாரே" என்று கூறினார்.
அவர் சொன்னது செய்தது எல்லமே சரி என்று சொல்ல முடியாதுதான். தவறை சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்பவர் முதலில் அவராகத்தான் இருப்பார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக முன் நின்றவர் அவர்.தீண்டாமையை ஒழிக்க கடுமையாக போராடினார். அதேசமயம் சாதியை ஒழிக்க முன்வரவில்லயே!
இருந்தும் காந்தியை நாம் நேசிக்கிறோம்.அவர் ஒரே ஒரு குரலை மட்டுமே கேட்பார்.அது அவருடைய மனச்சாட்சியின் குரல்.
5 comments:
காந்தி ஒரு வர்ணாசிரமவாதியாக இருந்தாலும் மதநல்லினக்கத்தை காத்தவர். அவரின் அகிம்சை ஆயுதம் ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ளச்செய்தது மட்டுமல்லாமல் மதக்கலவரங்களை தடுப்பதற்காகவும் அவர் உண்ணா நோன்பு இருந்திருக்கிறார்.
அவரின் கடைசி உண்ணாவிரதம் இந்தியப்பிரிவினையில் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய 50கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என்பதற்காகத்தான். அது தான் கோட்சே கூட்டத்தை “வெறி” கொள்ளச்செய்துள்ளது.
அன்புத் தோழருக்கு
உங்களது இடுகைகள், விடுபட்டவற்றை அனைத்தையும் ஒரு மூச்சில் படித்து ஆனந்தம் கொண்டேன். உத்வேகம் பெற்றேன்.
ஹர்ஷ் மேந்தர் கட்டுரை, என்னையும் மிகவும் கவர்ந்தது.; அதுதான் ஒரு நூறு பேருக்கு அதை வாசிக்குமாறு அன்று காலையே மின்னஞ்சல் அனுப்பியது.
நீங்கள் அதன் உணர்சிகரப் பகுதிகளை அழகுத் தமிழில் அளித்திருப்பது அருமையானது.
ஹே ராம் ஒன்று பகுதியும் அழகு.
கண்ணதாசனை சிலாகித்தது அதனினும் அழகு...
கண்ணதாசனைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதும் அளவுக்கு அவனது கவித்திறனை ரசிப்பவன் நான்.
அன்புடன்
எஸ் வி வி
அன்பார்ந்த தோழரே,
உங்களுடைய பதிவுகள் எல்லாமே கடந்த காலத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சிகளுக்கு மத்தியில் உண்மைகளை சொல்லுவதற்கு வாழ்த்துக்கள்.
இன்று வண்ணக்கதிரில் வெளியாகியுள்ள உங்களது சிறுகதை மிகவும் அருமை. நேர்மையாக உள்ள அதிகாரிகள் என்பது அரிய வகையாக இன்று மாறி விட்ட சூழலில் உங்களது கதை மாந்தர்களை கனவில்தான் பார்க்க முடியும்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ராமன், வேலூர்
என்ன தோழரே, ஒரு தோழரின் பெயர் மறந்துவிட்டது
என்று கூறி தோழர் ஜோசப் உங்களிடம் வாங்கிக்
கட்டிக் கொண்டாராமே!
நேற்று மாலை ஜோசப்பிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது. இருபத்துஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பேற்றவரின் பெயரக் கேட்டார். எனக்குக் கோபம் வந்தது.அதை உங்களிடம் புகார் செய்வார் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை---காஸ்யபன்.
Post a Comment