பதினைந்தாவது நாடளுமன்றத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(ஐ.மு.கூ)யின் இரண்டாவதுஅவதாரம் கூடுதல் இடங்களைப் பெற்றது.543 இடங்களில் அது262 இடங்களில் வெற்றிவாகை சூடியது.இடதுசாரிகள் 24 இடங்களை மட்டுமே பெற்று சரிவினைச் சந்தித்தார்கள்
காங்கிரஸ் கட்சி மட்டும் சென்ற தெர்தலைவிட 61 இடங்களை அதிகமாக பெற்றது.இத்தனைக்கும் அதற்கு கூடுதலாக 2% வாக்குகளே கிடத்தன.மதவேறி சக்திகள் ஓரங்கட்டப்பட்டன என்பதுதான் ஒரே ஆறுதல்.இந்த வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் என்ன?
தேசீய ஊரக வேலை உத்திரவாத திட்டம் என்ற திட்டத்தை ஐ.மு.கூ அரசு நடைமுறப் படுத்தியது. இதன்படி 4கோடியே 50 லட்சம் கிரமப்புற ஏழைகள் 48 நாட்கள் வேலை பார்க்கமுடிந்தது.இந்தத் திட்டத்தை ஐ.மு கூட்டணியின் குறைந்த்பட்ச திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினர்.மனமோகனும்,சிதம் பரமும் கடுமையாக எதிர்த்தார்கள்.பின்னர் நாம்தானே நடைமுறைப் படுத்த வேண்டும் ,அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ஏற்றுக் கோண்டனர்.ஆனால் இடதுசாரிகள் மனமோகனின் தாடியையும், சிதம்பரத்தின் சட்டையை யும் பிடித்து உலுக்கிய உலுக்கில் அது நடைமுறைப் படுத்தப்பட்டது.
இதொடு நிற்கவில்லை.விவ்சாயிகளின் கடனை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பழங்குடி மக்களுக்கும் வனகுடிமக்களுக்கும் உள்ள உரிமைகளை உத்திரவாதப் படுத்த சட்டம் இயற்றவைத்தார்கள்.
இவை எல்லாம் இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் நடந்தது என்பது அந்தத்திட்டங்க்களால் பயனடைந்தவர்களுக்குக் கூட தெரியாதபடி ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டன.
என்ன செய்ய? சிற்றெரும்பு புற்றெடுக்க கருநாகம் குடி வந்தால் என்ன செய்ய முடியும்?
உலகம் பூராவும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது.அமெரிக்க வங்கிகள்,திவாலாகின.அதன் காரணமாக வேலைவாய்ப்பு, I.T தொழிலில் சிராய்ப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள்.வளர்ந்த நாடுகள் குலைநடுங்க என்ன ஆகுமோ என்று பதறினபோது,இந்தியா அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தது.அதற்கான முக்கிய காரணம் வங்கித் தொழிலும்,காப்பீட்டுத்தொழிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததாகும்.
எல்.ஐ.சி.யின் மூலதனம் 5கோடி. அதனை 100 கோடியாக்க பிரதமர் விரும்புகிறார்.பொட்டியாக பணத்தை கொட்டி பங்குகளை வாங்க அநிய கம்பெனிகள் தயராக இருக்கின்றன.அதேபோல் வங்கிகளின் மூலதனத்தை 26 சத்திலிருந்து 49 சதமாக்க மன்மொகன் ரெடி..ஆனால் இடதுசாரிகள் அருவாளைத்தூக்கி விடுவார்களே என்ற பயம் அவரத்தடுத்து வந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அவதாரத்திற்கு இன்று இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை மனமோகன சிங் தைரிய(திமிரொடு)மாகத்தான் பெசுவார்.
நாடாளுமன்றத்தில் அவர் தாடியைப் பற்றி உலுக்க ஆளில்லயே! மக்கா! என்ன செய்ய? .
8 comments:
கடிவாளமில்லாத குதிரையாக மன்மோகன்சிங்கும் அவரது சகாக்களும், எல்லோரையும் “மேய” விடுவதால் கூட்டாளிகளுக்குள் பங்கு போடுவதில் மோதல் இல்லை.
உண்மை தோழர்.உரக்கச்சொல்லப்படவேண்டிய தகவல்கள்.
தொழர் ஹரிஹரன்,தொழர் காமராஜ் எத்தனை நாட்களாகிவிட்டது உங்கள் பின்னூட்டனளைப் பார்த்து.அடிக்கடி தொடர்பில் இருங்கள் தொழர்களே.நன்றி---காஸ்யபன்.
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
(if u want to know how that button works see at end of any one of my posts here http://ramasamydemo.blogspot.com/)
காஸ்யபன்!
தொலைத்தொடர்பில் 74% அன்னிய மூலதனம் வந்து விட்டது. பா ஜ க தயவால் வந்து காங்கிரஸ் தயவால் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆன்லைன் வியாபாரம் நமது சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.
இலவசமாக சிம் கார்டும், வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டியும், கேஸ் சிலிண்டரும் கொடுக்கப்படும் நாட்டில்தான் 7 கோடி டன் தானியங்களை இலவசமாக வழங்க முடியாது. உச்ச நீதி மன்றம் அரசின் கொள்கை(!) முடிவுகளில் தலையிடக்கூடாது என்று முழங்குகிறார்கள் ம.சி.ப.சி வகையறாக்கள்.
பேய் ஆட்சி செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்
என்னும் பாரதி வரிகள் மெய்ப்பிக்கப்படுகின்றன.
நன்றி!திலீப்!---காஸ்யபன்.
காங்கிரஸ் இப்போது மிக சவுரியமாக ஆட்சி செய்கிறது...முதுகெலும்பு இல்லாத கூட்டணி கட்சிகள் இவர்களுக்கு அமைந்தது போல் யாருக்கு அமையும்...
நேற்று எனக்கும் என் மைத்துனருக்கும் பெரிய வாக்குவாதம்.இடதுசார்கள் ஐ.மு.கூ வை விட்டு வெளியெறியிருக்கக் கூடாதாம். உள்ளேயே இருந்து பல காரியத்தைச சாதிதிருக்க வேண்டுமாம். அவருடைய புரிதல் அவ்வளவுதான்! என்ன செய்ய! நன்றி ராஜ ராஜ சோழன்---காஸ்யபன்
Post a Comment