Friday, October 22, 2010

பாம்புப் பிடாரனும் எம்.பி எஸ் அவர்களின் இசையும்----1

"பாம்புப்பிடாரனும் இசையும்'


முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் த.மு.எ.ச சார்பில் மாநில அளவில் ஒரு இசைப்பயிற்சி பட்டறை நடத்த கே.எம் அவர்கள் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். மதுரையில் அப்போது விளாச்செரியில் இசைக்கல்லூரி முதல்வராக

திருப்பாம்பரம் சண்முகசுந்தரம் அவர்கள் பணியாற்றிவந்தார்கள். மிகுந்த இசைப்புலமைமிக்க நாதஸ்வர கலைஞர்.பலநாடுகளுக்கு சென்று வந்தவர்.அவர் வகுப்புகள் எடுத்து பயிற்சி தர ஏற்றுகொண்டார்கள். அடுத்து மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்(மறைந்த) எம்.ஆர்.வெங்கடராமனின் சகோதரர் மகன் எம்.பி.சீனிவாசன் பயிற்சி அளிக்க இசைந்தார்கள் பட்டறை கோவையில் நடந்தது.

தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்ததும் எம்.பி.எஸ் இசையின் தோற்றம் வளர்ச்சி பற்றி மார்க்சீய நோக்கில் விளக்கினார். மதியம் சேர்ந்திசை பயிற்சிக்கான பாடலை எழுதி போட்டார். மதிய உணவுக்காக கலைந்தோம்.பயிற்சி பெற வந்தவர்களுக்கு அந்தப்பாடலின் கருத்து பிடிக்க வில்லை.இந்திராஅம்மையாரின் புகழ் பாடுவதாக இருந்தது

கே.எம் அவர்களும்,எம்.பி.எஸ் அவர்களும் உணவிற்காக நகரத்திற்கு செல்ல காரில் ஏறினர்.அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த. நான் "ஐயா!முதல் பாடலாக "பாம்புப்பிடாரனை வைக்கலாமே"என்று எம்.பி.ஏஸ் அவர்களிடம் கூறினேன்..அவர் என்னைப் பார்த்தார். கார் நகர்ந்துவிட்டது..

தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்பிவிட்டோமோ என்று பயம் வந்துவிட்டது.நிகழ்ச்சி மூன்றூ நாளும் விலங்கமிலாமல் நடக்க வேண்டுமே! அவர்கோபித்துக்கொண்டால்...." நடுங்கிக் கொண்டே இருந்தேன்.

பாரதியின் வசனகவிதையில் ஒன்று "பாம்புப்பிடாரன்".இசைபற்றி ஆன்மீகமும், அறிவியலும் கலந்த கவிதை.பாம்புப்பிடாரனின் மகுடியிலிருந்து இசைவருகிறதா? அல்லது அவன் உதாட்டிலிருந்துவருகிறதா?.சம்பந்தமே இல்லாத இரண்டை இணைப்பது எது? இசையா? இசை என்றால் காற்றா?மதிய வெய்யிலில் 'ஜரிகை வாங்கலியோ ஜரிகை" என்கூவுகிறானே அவன் குரலுக்கும் குழலுக்கும் ஒரே சுருதியை லயத்தைக் கொடுத்தது யார்? என் சக்தி தானே?

என்று .வரும். வானொலியில் உள்ளம் உருகும் வகையில் எம்.பி.எஸ் இசை அமத்திருப்பார்.கேட்கக் கேடக பிரமிப்பாக

இருக்கும்.

மண்டப வாயிலில் கார் வந்தது.கே.ஏம் இறங்கினார்கள். அடுத்து எம்.பி.ஏஸ் பரபரப்பாக இற்ங்கினார்கள். வேகமாக உள்ளேவரும்போதே "யார் காஸ்யபன்? யார் காஸ்யபன்?" என்று கேட்டுக்கொண்டே வந்தார்" நான் தான்.ஐயா" என்று பலியாடு போல் அவர் முன் நின்றேன்

'பாம்புப்பிடாரனைக் கேட்டிருக்கிறீர்களா?".

"பல முறை"

"எங்கே"

"வானொலியில்"

"எப்படி இருக்கிறது"

"அற்புதம்"

"என் படைப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானது"

என் கைகளைப் பற்றிகொண்டார்.தன்னுடைய உதவியாளரை அழைத்து முதல் பாடலாக "ஆன்கொர் வாட்" என்று மாற்றி விட்டேன்.அதை எழுதிப்போடுங்கள் என்று கூறினார் "பாரதி சொன்னதைவிட கூடுதலாகச் சேர்த்திருக்கிறீர்கள்..இது எப்படி உங்கள் கவனத்திற்கு வந்தது? என்று கேட்டேன்."காஸ்யபன்! ஒருமுறை கட்சி வேலையாக கான்பூர் சன்றிருந்தேன்" என்று சொல்ல ஆரம்பித்தார்.(தொடரும்)

5 comments:

எஸ்.கே said...

சிறப்பாக உள்ளது!

காமராஜ் said...

இது புதுமையான தகவலாக இருக்கிறது.பாம்புப்பிடாரன் பாடலை எங்கே கேட்கமுடியும் ?

kashyapan said...

நன்றி எஸ்.கே.நன்றி காமராஜ்! அகில இந்திய வானோலிக்காக எம்.பி எஸ்.அமைத்தபாடல்.நூற்றுகணக்கான முறை ஒலி பரப்பியுள்ளார்கள்.அவர்களுடைய ஆவணக்காப்பகத்தில் இருக்கலாம்.அல்லது அவருடைய சீடரான ராஜேஸ்வரி என்ற அம்மையாரிடம் இருக்கலாம்.சரியான தகவல் என்னிடம் இல்லை தோழா!---காஸ்யபன்.

அப்பாதுரை said...

இந்தப் பாடலைக் கேட்டதில்லை. தகவலுக்கு நன்றி. தேடிப்பிடித்துக் கேட்கிறேன்.

எம்.பி.ஸ்ரீ என்ற இசையமைப்பாளரின் படைப்புகளை மட்டும் ஓரளவு அறிவேனே தவிர, இது போன்ற சுவையான பின்னணித் தகவல்கள் தெரியாது. மேலும் படிக்க ஆவலாக இருக்கிறது. அவருடைய 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' பாமரத் தமிழிசையில் ஒரு மைல்கல்.

அப்பாதுரை said...

உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் பொழுது சென்னை நாட்களின் கருத்துச்செறிவான மாலை வேளை உரையாடல்கள் நினைவுக்கு வருகின்றன. மார்க்சீயம் நூறு வருடங்கள் கூட நிலைக்காததன் காரணம் என்ன என்ற உங்கள் கண்ணோட்டத்தை அறிய விரும்புகிறேன்.