சென்ற இடுகையில் கற்பனை என்பது கிடையாது என்பதாக முடித்திருந்தேன்.ஆனாலும் பதிப்புரிமை என்று இருக்கிறது. காப்புரிமை என்றும் இருக்கிறது.கற்பனையே இல்லை என்றால் அதற்கான உரிமை என்பது முரணாகத் தெரியும்.
உதாரணமாக நானும் நண்பரும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறோம். வெளியே வருகிறோம்விடுதியின் வாயிலில் உள்ள கடையில் வெற்றிலை வாங்கி மெல்லுகிறோம். உணவு விடுதிக்காரர் முட்டுச்சந்தில் எச்சில் இலைகளைப்போட்டிருக்கிறார். பசியோடு இருக்கும் சிறுவர்கள் தொட்டியை நோண்டி,மிச்சம் மீதியை எடுதுத் திங்கிறார்கள். " நாம் சுவையான உணவை உண்டோம். அந்தச் சிறுவர்களைப் பாருங்கள்.பசியார உணவில்லை எச்சிலைத் திங்கவேண்டிய நிலை" என்ரு ஆதங்கத்தோடு என்னிடம் நண்பர் கூறுகிறர் நெடுமரமாய் நிற்கும் நான்"ஃபில்டர் வில்ஸ் வாங்குங்கள்." என்கிறேன் நண்பரின்முகம் வாடிபோய் விடுகிறது..வீடு வந்து சேர்கிறோம்.
நண்பர் இரவு முழுவதும் தூங்கவில்லை. நடந்ததை நயம்பட எழுதி பத்திரிக்கைகு அனுப்புகிறார். சிறுகதையாக வெளிவருகிறது.கதைச்சம்பவத்தை நானும் பார்த்தேன்.நன்பரும் பார்த்தார்..நான் நெட்டைமரமாய் நின்று ஃபில்டர் வில்ஸ் ஊதினேன்.நண்பர் மன உளைச்சலோடு தூங்காமல் அதனைப் படைபாக்கி சகமனிதர்களுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தனி மனித அனுபவத்தை உலக அனுபவமாக மாற்றுவது தானே இலக்கியம்.எனக்கும் அவருக்கும் வித்தியாசம் வேண்டாமா? அதனால் தான் அது கதையாகி அதன் உரிமை அவருக்கு என்றானது..
("புதிய புத்தகம் பெசுகிறது" என்ற இதழ் "பதிப்பு--காப்பு உரிமை" என்று சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது) பதிவுலக நண்பர்கள் பல சந்தேகங்களை,கேள்விகளை எழுப்பி உள்ளனர்.விமானத்தை பார்த்ததில்லை. படைக்கவில்லையா? பணம் காய்க்கும் மரத்தைப் பார்த்ததில்லை. கற்பனையில் தோன்றவில்லையா? நடிகையை அரை குறை ஆடையில் பார்த்தா இருக்கிறொம்.கற்பனை செய்யவில்லையா? என்று கேட்கிறார்கள்.பார்த்தல்,கேட்டல், முகர்தல், தொடல்,சுவைத்தல் ஆகிய ஐம்புலன்களின் மூலமாக மட்டுமே வெளி உலகம் மனிதனுக்கு புலப்படும். அது விஞ்ஞானம்.மற்றவை அஞ்ஞானம்.-----------(முடிந்தது.)
1 comments:
Good.You have many treasure with you I think. Share everything
Post a Comment