Thursday, January 06, 2011

அரசியல் தலைமையும்--நிவாகத்தலைமையும்

அரசியல் தலைமையும் -- நிர்வாகத் தலைமையும்.


ஆட்சி அதிகாரத்தை மக்களின் சம்மதத்தோடு நடத்துவது அரசியல் தலைமைக்கு .அழகு.நிர்வகத்தில் அரசியல் தலயீடு இல்லாமல் பாரபட்சமற்ற முறையில் கொண்டுசெல்ல வேண்டியது நிவாகத்தலைமையின் பொறுப்பு.ஜனநாயகம் தழைக்க இது அவசியம்.

1949ம் ஆண்டு பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மூத்த ராணுவ தளபதிகளை அழத்து கூட்டம் நடத்தினார். புதிய இந்தியாவிற்கு முதன் முதலாக தலைமைத்தளபதியை நியமிக்க நடக்கும் ஆலோசனைக் கூட்டமாகும்.

அந்தக் கூட்டத்தில் " இந்திய தளபதிகளுக்கு அனுபவம் குறைவு.நாட்டின் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இந்தியாவின் முதல் தளபதியாக ஒரு பிரிடிஷ் காரரை நியமிக்க அரசு யோசிக்கிறது.தளபதிகளே உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்" என்று நேரு கெட்டுக்கொண்டார்.

பாரதப் பிரதமரின் யோசனை. தள்பதிகள் சிலர்மண்டையை ஆட்டினர்.சிலர் மவுனம் சாதித்தனர். ஒரே ஒரு தளபதி மட்டும் மெதுவாக எழுந்தார். லெப்.ஜெனரல் நாது சிங் ராதோர் என்பது அவருடைய பெயர்."ஐயா! ஒரு தேசத்தை தலைமை தாங்கும் அனுபவமும் நமக்கில்லை தான்.அதற்காக ஒரு பிரிட்டிஷ்காரரை பிரதமராக்க லாமா? "என்று கெட்டுவிட்டு அமர்ந்தார்.

நேரு புன்னகைத் தார்."ரதோர் நீங்களே அந்தப்பொறுப்பை ஏற்றுக்கோள்ளுங்களென்" என்ற போது" எனக்கும் மூத்தவர் ஜெனரல் கரியப்ப இருக்கிறார். அவரை நியமியுங்கள் " என்றார் ராதோர்.நேரு அதனை ஏற்றார்.( கொஞ்ச நேரமாவது ஆதர்ஸ் சொசைட்டியை மறப்போமே)

1971ம் ஆண்டு.கிழக்கு பாகிஸ்தான் கொந்தளித்துக்கொண்டிருந்த நேரம்.அதன விடுவிக்க இந்தியா ராணுவ நடவடிக்கைக்கு போக விரும்பியது. பிரதமர் இந்திரா அம்மையார் அமைச்சரவையைக் கூட்டினார்.எப்போது. எப்படி தாக்குவது என்பதை முடிவு செய்யவேண்டியதால் தலைமை ராணுவத்தளபதியும் அழைக்கப்பட்டிருந்தார்.பிரதமர்"உடனடியாகத் தாக்குதலுக்கு தயராகும்படி உத்திரவிட்டார்

மண்டையாட்டி அமைச்சர்கள் மவுனமாயிருந்தனர். ஜெனரல் மானக் ஷா மெதுவாக எழுந்தார். "அம்மையார் அவர்களே! துருப்புகளை பல்வெறு தளங்களுக்கு அனுப்ப வெண்டும்.ரகசியமாக சில பணிகளை முடிக்கவேண்டும். எல்லாவற்றிர்க்கும் மேலாக என் வீரர்களின் உயி ரை தேவையில்லாமல் சேதமாக்க விரும்பவில்லை . எனக்கு மூன்று மாதம் கொடுங்கள்.கச்சிதமாக முடிக்கிறேன் " என்றார்.

பிரதமர் மூன்று மாதம் கொடுத்தார். Inandation (பெரு வெள்ளம்) என்ற யுக்தி.யைக் கையாண்டு உலகமே வியக்கும் வெற்றியை இந்திய ராணுவம் பெற்றுத்தந்தது

ராதோர்,கரியப்ப,மானக் ஷ ஆகியோர் மறைந்து விட்டனர்.

6 comments:

hariharan said...

//ஆட்சி அதிகாரத்தை மக்களின் சம்மதத்தோடு நடத்துவது அரசியல் தலைமைக்கு .அழகு.நிர்வகத்தில் அரசியல் தலயீடு இல்லாமல் பாரபட்சமற்ற முறையில் கொண்டுசெல்ல வேண்டியது நிவாகத்தலைமையின் பொறுப்பு.ஜனநாயகம் தழைக்க இது அவசியம்.//

நிச்சயமாக, அரசியல் தலையீடு இல்லாமல் எந்த நிர்வாகமும் நடைபெறவில்லை, அந்தக் காலத்தில் எல்லாம் அப்படியில்லை என்று சொல்லமுடியாது EMS அரசைக் கலைத்தது நேரு தான்.
அரசியல்வாதிகள் மாறிக்கொண்டே யிருக்கிறார்கள். ஆனால் மாறமல் இருக்கின்ற நிர்வாகிகள் தான் அமைச்சரிகளுக்கு புதிய வாய்ப்புகளை? சொல்லிக் கொடுக்கிறார்கள்.

kashyapan said...

ஹரிஹரன் தோழர் அவர்களுக்கு!இந்திய தோழிற்சங்க காங்கிரசை சிதைக்க இந்திய தேசீய தோழிற்சங்கத்தை பிர்லா வீட்டு வராண்டாவில் ஆரம்பித்தவர் அண்ணல் காந்தியடிகள். தீரமிக்கதெலுங்கானாவிவசாயிகள் பொறாட்டத்தை ராஜாஜியோடு இணைந்து நசுக்கியவர் நேரு இவையெல்லாம் வரலாறு.காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்த இந்திராகாந்தி அம்மையாரிடம் கொடிககணக்கில் அமெரிக்கா பணத்தைக் கொடுத்தது. பதிலுக்கு ஈ.எம்.எஸ் அமைச்சரவையை தூக்கி எறியச்சோன்னது.இந்திரா காங்கிரஸ் தலைவர் உத்திர்விட்டார். பிரதமர் நேரு செயல் படுத்தினார்...இவையெல்லாம் மூலதனத்தின் முரண்கள்.---காஸ்யபன்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பகிர்வு. இன்று இப்படி அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு அரசியல்வாதிகளிடம் மதிப்பிருக்கிறதா ?!

அப்பாதுரை said...

நேரு பிறர் சொல்லைக் கேட்டது ஆச்சரியம் தான். சுவையான செயதிகள் சார். கரியப்பா மேனக் ஷா போன்றவர்கள் தலையாட்டிகளாக இல்லாதது உதவியாக இருந்தது.

சிவகுமாரன் said...

///ராதோர்,கரியப்ப,மானக் ஷ ஆகியோர் மறைந்து விட்டனர்///
இந்த இறுதி வரிகளே பல செய்திகளை சொல்லாமல் சொல்லிவிட்டன.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ராதோர்கள்,கரியப்பாக்கள்,மானெக்ஷாக்கள் இருக்கிறார்கள்...

ஆனால் அவர்கள் தலைமைத்துவ நிலைக்கு அருகில் வருவதை அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை.

முதல்நிலைப் பணியிலேயே மேலதிகாரிக்குப் பிடிக்காத யோசனை சொன்னவர்,நொந்து பணியை விட்டு விலக வேண்டிய சூழலில்தான் தனியார் மற்றும் அரசுத்துறை இரண்டுமே இருக்கிறது...

ஒரு மாறுதலுக்கு ஜெ யிடம் அவருக்கு மாறுபாடான யோசனை சொல்லும் ஆள் இருக்கிறதா??