Tuesday, March 29, 2011

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரும் அவசரநிலைக்காலமும்....

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரும் அவசர நிலைக்காலமும்.....

1972ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்தது. அதில் நாடகம் பொடுவதற்காக பீப்பீள்ஸ் தியேட்டர் என்ற நாடகக்குழு உருவானது. தோழர் நாராயண்சிங், தலைவராகவும் காலம் செனற தோழர் உபெந்திரநாத் ஜோஷி செயலாளராகவும் செயல் பட்டனர்.மூத்த எழுத்தாளர் வையைச்செழியன் "நெஞ்சில் ஒரு கனல்" என்ற நடகத்தை எழுதிக் கொடுத்தார்.அதனை இயக்கி நாடகமாக்கும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது.
மாநாட்டில் நாடகம்போடப்பட்டது.இந்த நாடகத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் நன்மாறன் நடித்தார். காலம் சென்ற மதுரை டாக்டர் த.ச.ராசாமணியும் நடித்தார்.தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த நாடகம் கொண்டுசெல்லப்பட்டது.
நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலையில் 1976ம் ஆண்டு ஜனவர் மாதம் ஆண்டு விழாவில் இந்த நடகத்தை போட முடிவாகியது. சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.கோவிந்தராஜன் சங்கத்தின் தலைவராக இருந்தார். விழாவிற்கு பி.ஆர், வி.பி.சிந்தன் ஆகியொர் வருகிறார்கள். எங்களுக்கு தலைகால் புரியவில்ல.அவர்கள் முன்னால் நாடகம் பொடும் வாய்ப்பு சாதாரணமானதா என்ன?
ஜனவர் 30ம் தெதி நாடகம் .நாங்கள் நெல்லிகுப்பம் சென்று அரங்க எற்பாடுகளைச்செய்தோம். மதியம் சி,ஜி, அவர்களையும், வி.பீ.சி அவர்களையும் பார்த்து கண்டிபபாக நடகம் முழுவதையும் பார்த்து விமர்சிக்க வேண்டும் என்று கெட்டுக்கொண்டென்.நெல்லிக்குப்பம் ஆலை " பாரி"கம்பெனிக்குஸ் சொந்தமானது. அது பிடிட்டிஷ் காம்பெனியாக இருந்த ஒன்று. தோழிற்சங்க ஆண்டுவிழாவிற்கு கம்பெனியின் தலைவர், இயக்குனர்கள் வருவது அவர்கள் மரபு.மாலை 6மணியிலிருந்து 9மணிவரை விழா. அதன் பிறகு நாடகம் என்று ஏற்பாடாகியிருந்தது.
விழா மெடையில் பி.ஆர்., வி.பி.சி,சிஜீ ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்து கம்பெனியின் தலைவர்,இயக்குனர்கள் அமர்ந்து இருந்தனர்.நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 8 மனி சுமாருக்கு ஒரு தோழர் பி.ஆர் அவர்களிடம் ஒரு சீட்டைக் கொடுத்தார். அவர் விபிசி யிடம் அதைகாட்டினார். சி.கொவிந்தராஜன் மைக் முன் வந்து" பி.ஆர்.அவர்கள் அவசரமாக டெல்லி செல்ல இருப்பதால் அவர் இப்போது பெசுவார்" என்று அறிவித்தார்.
பின்னால் மேக்கப் செய்து கொண்டிருந்தவர்களிடையே சலசலப்பு .'நான் உங்களொடு பெசிக்கொண்டு இருக்கிறேன்.எவ்வளவு நேரம் பேச முடியும் என்பது எனக்குத்தெரியாது" என்ரு உணர்ச்சிகள் கொந்தளிக்க பி.ஆர் பேச ஆரம்பித்தார். வி.பி.சி மேக்கப் இடத்திற்கு வந்தார். தோழர்1 அவசரமாக செய்தி வந்திருக்கிறது.காலையில் லேபர் மினிஸடரை சென்னையில் சந்திக்க வேண்டும்.என்றார். எங்களுக்கு ஏமாற்றம். விஷயம் கசிந்து விட்டது. திமுக அரசு டிஸ்மிஸ். தமிழகத்தில் அவசர நிலை பிரகடனம் எங்கள் குழுவினரின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.நாடகம் அரசுக்கு எதிரானது. என்ன செய்ய? உயிரே பொனாலும் நாடகம்போடவேண்டும் என்பது பெரு பாலானவர்கள் அபிப்பிராயம்.
9மணிகு நாடகம் ஆரம்பமானது. முதல் காட்சியிலேயே எனக்கு பங்கு இருந்த்தது. எதிரே பி.ஆர், விபிசி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டது.ஒரே இருட்டு. "செட்டப்பு தான். வந்துரும் கவலைபடாதே" என்று நாராயணசிங் எங்காதருகில் சொன்னார். மின்சாரம் வந்து விளக்குகள் பொடப்பட்டன. எதிரே அமர்ந்திருந்த பி.ஆர்.வி பிசி, கொவிந்தராஜன் அமர்ந்திருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன. பட்சிகள் பறந்துவிட்டன.
நடகம் தொடர்ந்தது. காலம் சென்ற தோழர் மாணிக்கம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தார். சொசலிச சாமுண்டிஎன்றும், 21 அம்ச திட்டம் என்றும் சொந்த வசனத்தை அள்ளி வீசினார். இரவு ஒரு டாக்டரின் மருத்துவ மனையில் நாங்கள் தங்கினோம். மறுநாள் மாலை மதுரை ரயில் நிலயதில் இறங்கும் போது மூத்த எழுத்தாளர் வையைச்செழியன் கவலையோடு காத்திருந்தார்.மதுரை தோழர்கள் நாங்கள் கைது செய்யப்பட்டிருப்போம் என்று கவலை பட்டுக் கோண்டிருந்திருக்கிறார்கள்.
"சாமா! ஒண்ணும் ஆகலியே!" என் கைகளை பற்றிகொண்டு அந்த முதிய எழுத்தாளர் வையைச்செழியன் கேட்டார். அவர் கண்கள் கலங்கியிருந்த்தன..

5 comments:

S.Raman, Vellore said...

I heard about this accident from
comrades of Cuddalore long back.
Once in a meeting at Com C.G himself
narrated while speaking about Emergency. Your sharing in a different angle adds to the agony of Emergency

மோகன்ஜி said...

சம்பவத்தைக் கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். உங்களுக்கு கடலூர் புக்செண்டர் காம்ரேட் புருஷோத்தமனை பரிச்சயம் உண்டா சார்?

hariharan said...

//திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டது.ஒரே இருட்டு//

தலைவர்கள் தலைமறைவுக்கான ஏற்பாடா அது.

அப்பாதுரை said...

இவர்கள் தலைவர்களா?

சிவகுமாரன் said...

நான் பணி புரிவது பாரி கம்பெனியில் தான் அய்யா