Friday, April 01, 2011

ஜோட்டால (செருப்பால) அடியுங்களேன்............

ஜோட்டால (செருப்பால) அடியுங்களேன்............
1967ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்ததுமே இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் பிடி நெகிழ ஆரம்பித்துவிட்டது. 1969ல் கட்சியில் பிளவு எற்பட்டு காங்கிரஸ்(இந்திரா) ,காங்கிரஸ் (ஓ) என்றும் உருவாகிவிட்டது. இந்திரா அம்மையார் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள,1971ம் ஆண்டு தெர்தலை நடத்தினார். இந்தத் தேர்தலில் உ.பீ யில் அவரை எதிர்த்து ராஜ்நா ராயணன் என்பவர் நின்றார்.இந்திரா அம்மையார் வெற்றி பெற்றார். ராஜ் நாராயணன் வழக்குப் பொட்டார். தெர்தலில் தில்லுமுல்லு செய்ததாக வழக்கு. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்தது.
அலகாபாத் நீதிமன்றம் 1975ம் ஆண்டு இந்திரா அம்மையாரின் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளித்தது. திகைத்துப் போனார்.என்ன செய்வது என்று தெரியாமல்திக்குமுக்கடினார். தன்னைக்காப்பாற்றிக் கொள்ள பல முயற்சிகளை எடுத்தார். "ராணுவ ஆட்சியைக் கொண்டுவருவதுஎன்று திட்டம் போடப்பட்டது பின்னர் தேர்தல் நடத்தி ஆட்சிக்கு வருவது.ஆனால் அப்பொது தளபதியாக .இருந்தவர் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. என்று கூறி மறுத்துவிட்டதாக ஒரு செய்தியும் உண்டு. அம்மையர் தளர்ந்து விட வில்லை. அவசர நிலையை அறிவித்து மக்களின்சகல உரிமைகளையும் பறித்தார். தலைவர்கள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சித்திரவதை செய்யப்பட்டனர். யாரும் கெள்வி கெட்க முடியாது. "ஒரு அதிகாரி விரும்பினால் துப்பாகியால் ஒருவனை சுட்டுக் கொல்லலாம் யாரும் கெட்க முடியாது" என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு வக்கீல் கொக்கரிக்கும் அளவுக்கு நிலமை பொய்விட்டாது. கருணாநிதியின் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அவர் செய்த ஊழலை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் போடப்பட்டது.
இந்த அக்கிரமம் ,அவசர நிலை 1977ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தேர்தல் நடந்தது. இந்திரா அம்மையார் தேர்தலில் நின்றார்.அவரை எதிர்த்து பிரசாரம் செய்தார் ராஜ் நாராயணன்." இந்தியமக்களே! மிகுந்த துயரத்தையும், துன்பத்தையும் அனுபவித்து விட்டீர்கள் இதற்குக் காரணம் நான் தான்.இந்திரா அம்மயாரை எதிர்த்து போட்டியிட்டேன். அவர் வென்றார். நான் விடவில்லை. வழக்குப் போட்டேன். அவர் வென்றது செல்லாது என்று தீர்ப்பு வந்தது. அதனால் தானே அவசர நிலை வந்தது. நீங்கள் சித்திரவதை செய்யப்பட்டீர்கள். உங்கள் துண்பத்திற்குக் காரணம் நாந்தனே! என்னை உங்கள் ஜோட்டால்( செருப்பால்) அடியுங்கள். இல்லையென்றால் உங்கள் வோட்டால் அடியுங்கள் என்றார்.
மக்கள் அவரை வோட்டால் அடித்து வெற்றி பெறசெய்தனர். இந்திரா அம்மையார் தோற்றார்.

5 comments:

பொன் மாலை பொழுது said...

தற்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாத செய்திகள். ஆனால் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.
இப்போது இருப்பது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே அல்ல என்ற மகா உண்மையை இந்தியர்கள் பெரும்பாலும் மறந்துவிட்டனர் அல்லது மறக்க அடிக்க பட்டுவிட்டனர் என்ற சதியும் வெளிவருகிறது.
பகிர்வுக்கு நன்றி.

hariharan said...

இந்திரா அம்மையார் 55,000 வோட்டு வித்தியாசத்தில் தோற்றார், அவருடைய மகன சஞ்சய்காந்தி அமேதி தொகுதியில் படுதோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் ஏகபோகம் சிறந்த கூட்டணியால் முடிவுக்கு வந்தது. அதே 1977ம் ஆண்டில் மேற்குவங்கத்தில் புதிய திருப்பம் நடந்தது. ஜனதாக் கட்சியுடன் பொதுத்தேர்தலில் போட்டியிட்டதால் மார்க்சிஸ்டுகள் அந்த கூட்டணி தொடரவேண்டும் என நினைத்தார்கள், ஆனால் ஜனதாவின் பேராசை பெரிய அண்ணனாக ஆசைப்பட்டது 80-90 தொகுதிகளைமட்டும் இடதுசாரிகளுக்கு தரமுடியும் என்றது. முடிவில் சிபிஎம்,பார்வர்ட்பிளாக்,ஆரெஸ்பி கூட்டணி அமைந்தது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றியடைந்தது. அந்தக் கூட்டணி தான் இன்றுவரை மேற்குவங்கத்தில் தொடர்கிறது. ஜனதாக்கட்சி காணாமலேயே போய்விட்டது.

Pranavam Ravikumar said...

நல்ல பகிர்வு!

மோகன்ஜி said...

நல்ல நினைவாற்றல் உங்களுக்கு காச்யபன் சார்!

சிவகுமாரன் said...

அது அந்தக் காலம். இப்போது அவர்கள் நோட்டால் அடிக்கிறாங்க சார்.