Monday, April 04, 2011

ப.நெடுமாறனும் குமரி அனந்தனும் ....

ப.நெடுமாறனும் குமரி அனந்தனும்........
பதிவர் ஹரிஹரன் அவர்கள் ஜனதாகட்சி எப்படி பெரிய்யண்ணன் பார்வையால் சீரழிந்தது என்பதைச்சுட்டிட்டிக்காட்டி யிருந்தார். அவர் குறிப்பிட்டது மே.வங்கம் பற்றியது. தமிழகத்திலும் அது நடந்தெறியது.
1975ம் ஆண்டு காமராஜர் மறைந்தார். ப.நெடுமாறன் "காமராஜ் கம்கிரஸ் கட்சியின் தலைவரானார். குமரி அனந்தனோ "காந்தி காமராஜ் 'கட்சியின் தலைவரானார். மற்ற கட்சி தலைவர்களிடையெ நெடுமாறனுக்கு நல்ல செல்வாக்கும் மரியாதையும் இருந்தது. குமரி அனந்தன் ஜனதாவொடு இணைந்தார். எம்.பி ஆனார். தமிழக ஜனதா தலைவர்களில் ஒருவரானர். டெல்லி தலைமைக்கு மிகவும் நெருக்கமானார். அவருடைய ஆட்டம் ஆரம்பித்தது.
1978ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியொடு சேர்ந்து செயல் பட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்தது.. அப்போது மார்க்ஸிஸ்ட்கட்சியின் செயலாளராக முதுபெரும் தோழர் எம்.ஆர்.வெங்கடராமன் இருந்தார். 30ம் ஆண்டுகளில் ஒரு "ஈரங்கிக்கு" 1000 ரூ வாஙகும் வக்கீலாக இருந்தார். வருவாயைத் துச்சமென கருதி சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்தார் காங்கிரஸ் சொசலிஸ்ட், கம்யுனிஸ்ட் என்று வளர்ந்தார் ஜனதா கட்சியின் பெச்சுவார்த்தை அனந்தனோடு நடக்க வேண்டும்.
ஏம்.ஆர்.வி அவர் வீட்டிற்கு போனால் ஹோட்டல் ரூமில் இருக்கிறார் என்பார்கள். ரூமுக்கு சென்றால் தூங்ககு கிறார் என்பார்கள்." கண்ணாமூச்சி. "ஆடினார்.
அப்பொது நான் மதுரையில் இருந்தேன்.மூத்த தொழர் ஆர்.ராமராஜ் அவர்களை எனக்கு பழக்கமுண்டு. தேர்தல் பற்றி பெசிக்கொண்டிருந்தேன்."என்னப்பாசெய்ய! ஜனதாகாரன் கண்ணாமூச்சி ஆடறான்.ஓண்ணும் இப்ப சொல்லமுடியாது" என்றார்."தோழர்!எது.எப்படியானாலும் சரி. இந்த தனியா நிக்கணும்கிற பரிசோதனையை மட்டும் செய்யாதீர்கள்" என்றேன். நான் கிளம்பினேன்."டேய் கண்ண! எண்டா பேசாம ஏம்.ஜி.ஆர். கூட சேர்ந்தா என்ன? " என்றார்.என் மூளைக்குள் எதோ நெளிவது போல் தோன்றியது.நான் கிளம்பிவிட்டேன்
வீட்டிற்கு போனதும் நான்கு நட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி நினவு தட்டியது. நான் அலுவலகத்திலிலிருந்து என் ஸ்கூட்டரில் வந்து கோண்டிருந்தேன். அப்போது "தீக்கதிர் " பத்திரிகையின் நிருபர் தோழர் நாராயணன் என்னை நிறுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் அவர்களை சந்திக்க வேண்டும் .என்னை அழைத்துச்செல்லுங்கள்" என்று கெட்டுக்கொண்டார்.நானும் சரி யென்றேன். வழியில் தேநீர் அருந்த நீன்றோம். ."என்னப்பா! திடீர்னு எ.பி யை பாக்கப்போற! "என்று நான் கெட்டேன். "இல்லைஜி! நெடுமாறன் ஏ.பி.ஐ பாக்கணும் அவருக்கு சௌகரியப்படுமா! " என்று பாக்கச்சொன்னார்" என்று நாராயணன் கூறினார். இது எனக்கு முக்கியமான தகவலாகத் தோன்றியது. எங்கள் தொழர் நாராயண சிங் அவர்களிடம் தெரிவிக்க புறப்ப்ட்டேன்.
அவர் வீட்டிற்கு போகும் திருப்பத்தில் மெயின் ரோட்டிலேயே அவரைப் பார்த்துவிட்டேன்." முடிஞ்ச்சுடுத்துப்பா! என்றார்." ஜனதாவுடனா? எத்தனை" என்று கேட்டேன். "இல்லைப்பா! எம்.ஜி.ஆரொடு"
மறு நாள் பத்திரிகையில் செய்தி."ஏம்.ஜி.ஆரோடு மார்க்சிஸ்ட் தொகுதிஉடன்பாடு.. என்றுவந்தது."இடதுசாரி-ஜனநாயக கட்சிகளின் கூட்டுக்குழு தலைவர் நெடுமாறன்", என்றும் வந்திருந்தது.
முதன் முதலாக அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்டது.
முதன் முதலாக எம்.ஜி. ஆர். முதலமைச்சரானார்.

6 comments:

அப்பாதுரை said...

மறைபொருள்?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! எனக்கு எதுவும் தெரியவில்லையே! உமக்குத்தெரிகிறதா? சொல்லுமே!---காஸ்யபன்

அப்பாதுரை said...

போட்டீங்களே கொக்கி!
இந்திய அரசியலிலிருந்து விலகி வெகு காலமாகிவிட்டதால் என் கருத்து வெறும் academic interest தான். இன்றைக்கு மார்க்சிஸ்ட் யாருடன் தேர்தல் கூட்டணி வைத்திருக்கிறார்கள்? பனம்பழம் கதையாக கூட்டணி வென்று முதலமைச்சர் ஆனால் சரிதான், என்ன சொல்றீங்க?

குமரி அனந்தனை ஒரு முறை சந்தித்திருக்கிறேன், எங்கள் உயர்நிலைப் பள்ளியில். அண்ணாதுரை, கருணாநிதி போல் பேச்சில் பொறி பறக்கும், தமிழும் இனிக்கும். தன் பேச்சுத்திறனைப் பயன்படுத்தி அரசியல் செல்வாக்கு பெறத் தெரியவில்லை அனந்தனுக்கு.

hariharan said...

குமரிஅனந்தன் நல்ல் பேச்சாளர் தான், ஆனால் 1996ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசுகிறார். கேட்பதற்கு ஒரு ஆள் கூட இல்லை என்பதை தினமணி படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.

சு.சுவாமி எப்படி இன்னும் அந்த ஜனதா கட்சியை காப்பாற்றிவருகிறார் அதன் ரகசியம் என்ன? தொண்டரே இல்லாத தலைவருக்கு மத்தியரசின் xyz பிரிவு பாதுகாப்பு வேறு!

சிவகுமாரன் said...

அடுத்து அம்மாவையும் முதலவர் ஆக்கிடுங்க. எம். ஜி. ஆரையே ஆக்கினவங்க ஆச்சே ( யாரப்பா அது "நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குது."ங்கறது )

அப்பாதுரை said...

குமரி அனந்தன் பேச்சைக் கேட்க ஆளில்லையா.. ஆச்சரியம்! அவர் சார்ந்த கட்சி காரணமா? காந்தி-காமராஜ் கட்சிப் பெயர் கேள்விப்பட்டது கூட இல்லை.
தகவலுக்கு நன்றி ஹரிஹரன்.