Friday, April 08, 2011

செம்மொழியான தமிழ் மொழி......

செம்மொழியான தமிழ் மொழி........
தமிழ் செம்மொழியாவதற்கான முயற்சிகள் 19ம் நூற்றாண்டுகளீன் இறுதியில் துவங்கிவிட்டான. மதுரையில் வசித்த புலவர் சூரியநாராயண சாஸ்திரியார் செம்மொமொழியாக தமிழை அறிவிக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ் மொழியின் தொன்மை,இலக்கியவளம்,இலக்கணம் என்பதை பகுத்தாய்ந்து விளக்கினார்.தமிழ் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக சூரிய நாராயண சாஸ்திரி என்ற தன் பெயரை பரிதி மால் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இன்றும் மதுரை குட் ஷெட் தெருவில் அவர்பெயரில் ஆரம்பப் பள்ளி நடந்து வருகிறது.ஆனலும் செம்மொழி என்று தமிழை அங்கீகரிக்க அரசு தயங்கியே வந்துள்ளது.
அவ்வப்போது இது பற்றி கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் தொடர்ச்சியான இயக்கம் என்று எதுவும் நடைபெறவில்லை.
1975ம் ஆண்டு அவசரநிலைகாலத்தின் போது இடதுசாரி எழுத்தாளர்கள் கலைஞர்கள் சேர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஒருஅமைப்பை உருவாக்கினர்.இந்த அமைப்பு எழுத்தாளர்களின் உரிமைகாக்கவும், தமிழ் மொழியின் உயர்வுக்காகவும் குறிப்பாக கோரிக்கை வைத்து பொராடியது. அந்த கோரிக்கைகளில் ஒன்று தான்" தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிப்பது" என்பதாகும்.
மாவட்டம்தோறும் மாநாடுகள் நடத்தி அங்கு இந்தக்கோரிக்கயை வலியுறித்தினார்கள் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலும்,சிற்றூர்களிலும், சிறுநகரங்களிலும் ,பெருநகரங்களிலும் கருத்தரங்குகள நடத்தி மக்களைத்திரட்டினார்கள்.பண்டிதர்களின்,படித்தவர்களின் கோரிக்கையாக இருந்ததை மக்களின் நலம்சார்ந்த கொரிக்கையாக உருவாக்கினார்கள்.இதற்காக இவர்களை ஏளனம் செய்தவர்கள்,ஏகடியம் சொல்லியவர்கள் உண்டு.
இறுதியாக டெல்லி சென்று நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாடம் நடத்துவது என்று முடிவு செய்தார்கள். சாயப்பட்டரையில் வெளை செய்யும் கவிஞன், கைத்தறியில் நேய்யும் நாடகக் கலைஞன், பொக்குவரத்துதுறையில் பாட்டுப்பாடும்மக்கள் இசைஞன், மத்திய மாந்ல அரசு ஊழியன், வங்கி,இன்சூரன்சு,ஊழியன், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று ஒருபட்டாளம் புறப்பட்டது.அவரவர்கள் அவரவர்கள் செலவை அவர்களே எற்றுக்கொள்வது என்று முடிவானது. இவர்களை ரயிலில் பத்திரமாக கூட்டிக்கொண்டு திரும்பி வருவது என்பது சாதாரண காரியமல்ல. மாநிலத்தில், தி.மு.க. மத்தியில் ப..ஜ க
எந்த உதவியையும் .எதிர்பார்க்க முடியாது.
இந்த படைக்கு உதவியாக இருந்தவர்கள்,மதுரை எம்.பி காலம் சென்ற பி.மோகன்,
வை.கோ,சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர்.டெல்லி வருபவர்கள் தங்குவது உணவு ஆகியவற்றிர்க்கு தோழர் மோகன் ஏற்பாடு செய்தார் .பிரதமரைச்சந்திப்பது,தமிழக எம்.பிகளின் ஆதரவை திரட்டுவது ஆகியவற்றை மோகனும் வை.கோவும் கவனித்துக்கொண்டார்கள்.
2001ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையிலிருந்து புறப்பட்டோம். டில்லி ஜந்தார் மந்தாரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. நாடளுமன்றம்வரை செல்லவிடாமல் டெல்லி போலீஸார் தடுத்துவிட்டார்கள்.ஊர்வலத்தில், தொழர் மோகன், மதுரை கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொழர் நன்மாறன்,வை.கோ,சுதர்சன நாச்சியப்பன், இந்தி உருது எழுத்தாளர் சங்கதலைவர் சஞ்சல் சௌஹான், எழுத்தாளர் சங்கத்தலைவர் அருணன், குசிபா,மெலாண்மை, காஸ்யபன், டாக்டர்.ரவிகுமார்(ஸ்ரீரசா) என்ரு ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர்,வாஜ்பயை , சந்தித்து மனு கொடுத்தோம்.அப்பொது,நன்மாறன், மோகன், காஸ்யபன்,சுதர்சன நாச்சியப்பன்,வை.கோ, அருணன் ஆகியோர் இருந்தனர். அ.தி.மு.க எம்பி மலைச்சாமி அவர்கள் வருவதாக இருந்தார். திடீரென்று சென்னை செல்ல வேண்டியதிருந்த்தால் கலந்து கொள்ளவில்லை
ப.ம.க எம்பிகள் ஒரு சிலர் மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்
மனுவை படித்து அருணன் பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தார். பிரதமர் பதிலாக We are working on it. என்று கூறினார்.
தமிழ் செம்மொழியாக பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் சாயப்பட்டறைத்தொழிலாளிக்கும், செல்லூர் கைத்தரித் தொழிலாளிக்கும் இதில் பங்கிருந்தது என்பதை பதிவு செய்வதே என் நோக்கம்.
என்ன செய்ய! ஆயிரம் எறும்புகள் மழை வெய்யில் என்று பாதிக்கப்படாமல் இருக்க கரையனால் புற்றெடுக்க மட்டுமே முடியும்!

5 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உண்மையான சரித்திரம் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது எல்லா மார் தட்டல்களின் பின்னாலும்.

உங்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பது பெருமைக்குரியது காஸ்யபன் சார்.

ஆனாலும் இந்த செம்மொழி அங்கீகாரம் இல்லாவிட்டாலும் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது என்று எண்ணுகிற ஜாதி என்னுடையது. பேச மனிதனற்றுப் போய் அழிந்த ஏராளமான மொழிகள் உண்டே?

hariharan said...

வெள்ளைக்காரர்களிடம் செம்மொழிக்கான கோரிக்கையா.. ஆச்சரியமான விவரம்.

செம்மொழிக்கான இந்த இயக்கங்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு கலைஞர் ‘செம்மொழி நாயகர்’ ஆகிவிட்டார். இந்த சமூக முன்னேற்றத்திற்க்காக பற்சக்கரத்தை சாதரண மனிதர்கள் சுற்றுகிறார்கள். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் சென்றுவிடுகிரார்கள், அதை வைத்து ஆதாயம் தேடுவதில்லை. தமுஎச ஒரு உதாரணம்.

தமிழ்ப்பற்று என்பது தமுஎச பின்பற்றுவது தமிழ்வெறியை திராவிட இயக்கங்கள் கிளப்புவது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் வெறி அடங்கிவிடும், பற்று என்றென்றும் நிலைத்திருக்கும்.

அப்பாதுரை said...

புல்லரிக்க வைக்கும் வரலாறு.. பெருமைப்படுகிறேன் ஐயா.

மோகன்ஜி said...

செம்மொழிக்கு வைக்கப் பட்ட கோரிக்கைப் பயணம் பற்றி உருக்கமாய் சொல்லியிருக்கிறீர்கள். எல்லா பாராட்டங்களிலுமே UNSUNG HEROES இருப்பது விதியாகி விட்டது.. பகிர்வுக்கு நன்றி!

சிவகுமாரன் said...

அப்போது நானும் த.எ.மு.ச. வில் இருந்தேன். கவிஞர் முத்துநிலவன் இது பற்றி கடிதம் எழுதி இருந்தார். பணியின் காரணமாக நான் அப்போது புனே சென்றிருந்தேன். பின்னர் நடந்தது எனக்கு தெரியாது. உங்களைப் போன்றோரின் முயற்ச்சிகளுக்கு தலை வணங்குகிறேன் அய்யா