அந்த நிதி அமைச்சர்.....
மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் டாகடர் அஷொக் மித்ரா அவர்கள். மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்.
டாக்கா பல்கலைகழகத்தில் அவர் பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றபொது இந்தியா விடுதலை பெற்று இந்திய-பாகிஸ்தான் என்று பிரிந்தது. கல்கத்தா பல்கலைகழகத்தில் பட்டமேற்படிபுக்காக விண்ணாப்பம் கொடுத்தார். அந்தக்கலவரச்சூழலில் அவருடைய விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் செர்ந்து முதுகலைப்பட்டம் பெற்றார். லண்டன் சென்று முனவர் பட்டம் வாங்கினார். ஐ.நா.சபையின் பொருளாதார வளர்ச்சித் துறையில் பணியாற்றினார்
அவருடைய திறமையைக் கேள்விப்பட்ட நடுவண் அரசு இந்திய அரசின் பொருளாதார அலோசகராக. அழைத்துக்கொண்டது.அப்பொது அவர் அளித்த திட்டம்தான் மன்னர் மான்ய ஒழிப்பு திட்டமாகும். பின்னர் வங்கி தெச உடமையாக்க திட்டம் போட்டார்.
அப்பொது நான் மதுரையில் இருந்தேன். இந்திய சமூக விஞானக் கழகம்(Indian School of Social Sciences) என்ற அமைபு இருந்தது. அதில் செயல்பட்டுக்கோண்டிருந்தேன். அதன் சார்பில் மத்திய மாநில உரிமைகள் பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். அதில் அ.தி.மு.க சார்பில் வக்கீல்சங்கர பாண்டியன் கலந்து கொண்டார்.அது ஒரு சர்வகட்சி கருத்தரங்காக அமைந்தது. டாக்டர் அஷொக் மித்ரா சிறப்புரையாற்றினார். அவரைக் கவனிக்கும் பொறுப்பு எனக்கும் தீக்கதிர் பத்திரிகையின் நிருபர் தோழர் நாராயணனுக்கும் அளிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் அஷொக் மித்ரா நாங்கள் விமான நிலயத்திற்கு வரவேண்டாம் என்றும் வட்டாட்சியர்(வரவேற்பு) உதவியுடன் அரசு விருந்தினர் மாளிகைகு வந்த பிறகு சந்திக்கலாம் என்றும் அறிவுருத்தியிருந்த்தார். நாங்கள் விருந்தினர் மாளிகையை அடைந்தபோதுஅவர் மதிய உணவு அருந்திகொண்டிருந்தார். அறைக்கு வெளியே வட்டாட்சியர் பரபரப்பாக நின்று கொண்டிருந்தார்.அடுத்த பிளாக்கில் மாநில அமைச்சர் வ்ந்திருந்தார். கூட்டமாக இருந்தது. ஒரே சத்தமாக இருந்தது மாநில. அமைச்சருக்கும் வட்டாட்சியர் தான் உணவு எற்பாடு செய்திருந்தார். "ஏன் சத்தமாக இருக்கு" என்று கேட்டேன். அவர் மென்மையாக சிரித்தார். அதொடு கவலையோடு "எல்லாருக்கும் காண வெண்டுமே சார்?" என்றார்." அமைசர் ஒருவருக்குத்தானே சாப்பாடு? " என்றேன். "இங்கு இல்லை ஐயா!" எனு பக்கத்து பிளாக்கை காட்டினார்.
மாநில அமைச்சரைப் பார்க்க மாவட்டம் வந்திருந்தார். "விருதுநகரிலிருந்து புறாக்கறியும் வான் கோழி பிரியாணியும் 15 பெருக்கு சொன்னாங்க சார்! ஏற்பாடு பண்ணிட்டேன். இங்க கூட்டத பாத்தா பயமா இருக்கு சார்" என்றார் வட்டாட்சியர்.கதவு திறந்தது. நாங்கள் எழுந்தொம். "உட்காருங்கள். oh! It is hot.உள்ளே வாருங்கள். "என்றார் மித்ரா.. நாங்கள் நுழைதொம். வட்டாட்சியர் வரவில்லை அமைச்சர் அவர் அருகில் சென்று அவர் தொளில்கை போட்டு உள்ளே கூட்டிச் சென்றார்.. வட்டாட்சியர் என் காதைக் கடித்தார்." ஐயா! இரவு உணவு என்ன வேண்டும் என்றும் எத்தனை பெருக்கு என்றும்கேட்டுச் சொல்லும்படிகேட்டார். நான் அமைச்சரைப் பார்த்துக் கேட்டேன்.
" Hallo! for the night you get me two palantain.And if possible you get me one cup of Rasam with Pepper""
வட்டாட்சியர் என்னைப் பார்த்தார். "சார்! ..." என்று இழுத்தார். "ஏன் உங்களால ஏற்பாடு பண்ண முடியாதா?" கேட்டேன்." ஒண்ணுமில்லைனா வீட்டுல பண்ணி கொண்டுவந்துருவென் சார்" என்றார்.
கருத்தரங்கம் முடிந்து வந்தோம். கைகூப்பி விடை கொடுத்தார்." I go by early morning flight.!need not stay! have a nice day" என்று அந்த மனிதர் எங்களை வழியனுப்பினார்.
13 comments:
லஞ்சம் இங்கே தான் ஆரம்பிக்கிறது. புறாக்கறிக்காகவும் வான்கோழி பிரியாணிக்காகவும் வட்டாட்சியர் அப்பாவி மக்களிடம் கை நீட்ட ஆரம்பிப்பார். அமைச்சர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்று சொல்லியே அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். இன்னொன்று.... எளிமையாய் இருக்கும் அரசியல்வாதிகளை நம் மக்கள் மதிப்பதில்லை.
இது பரவாயில்லை. மாநில மந்திரி வந்து சென்ற பின்பு தொண்டர்கள் சால்வைக்கு சண்டை போடுவதைப் பார்த்தால் மிக கேவலமாக இருக்கும்.
நல்ல பதிவு
நன்றி.
.
சிவகுமரன் அவர்களே!" எளிமையாக இருக்கும் அரசியல் வாதிகளை நம் மக்கள் மதிப்பதில்லை." நம் மக்கள் மட்டும்தானா?---காஸ்யபன்
எளிமைதான் எத்தனை உயர்வானது!நாம் இனி இப்படி மனிதர்களைப் பார்ப்போமா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது காஸ்யபன் சார்.
வாருங்கள் சுந்தர் ஜி! தம் குழந்தைகள் பத்தாம் வகுப்பில், பனிரெண்டாம் வகுப்பில் 98% சதம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்படாத பெற்றோர் இருக்க முடியாது. சீத்தாராம் என்ற சிறுவன் ஆந்திராவைச்சசேர்ந்தவன் டெல்லியில் படித்தான். நன்றாகப் படிப்பான். பத்தாம் வகுப்பில் சிற ப்பாக மதிப்பெண் வாங்கினான். பள்ளியின் முதல்மாணவனாக அல்ல. மாநிலத்தில்முதல்மாணவனாக அல்ல. தேசீய அளவில், ( National First) இந்தியாவில் முதல் மாணவனாக வந்தான். அவன் தான் சீத்தாராம் எச்சூரி என்ற மார்க்சிஸ்ட் அரசியல் த்லைமைக்குழு உறுப்பினர். தனக்குக் கிடைக்கும் 80000 ரூ கட்சியிடம் கோடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் படியில் வாழ்க்கையை நடத்துகிறார். ஏன்?நம் அருகில் கண் எதிரில் மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ நன்மாறன் இரண்டு முறை இருந்தாரே! 184 சதுர அடி குச்சு வீட்டில் தானே இன்றும் வசிக்கிறார். அவருடைய கட்சி கொள்கை பிடிக்கமல் போகலாம். நல்ல மனிதரை நமக்கு ஏன் பிடிக்காமல் போகிறது?---காஸ்யபன்
அசோக் மித்ராவிற்கு அந்த குணம் இயற்கையானதா? கட்சி வளர்த்ததா?
தனிமனிதர்களின் சிறப்பை மார்க்சியர்கள் அதிகமாக சொல்வதில்லை, ஆனால் பொதுவெளியில் தலைவர்களின் வாழ்க்கைமுறையை சொல்லத்தான் வேண்டும். நன்மாறன், மோகன் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பற்றி பொதுமக்கள் பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்திருப்பார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்தம்
மேற்கொண்டன. அதற்கு முன்பாக திருச்சியில் ஒரு மாநிலம்
தழுவிய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.
மாநாடு முடிந்து பேருந்து நிலையம் செல்ல டவுன் பஸ்ஸில்
அடித்து, பிடித்து ஏறி கிடைத்த இடத்தில் உட்கார்ந்ததும்
நிமிர்ந்து பார்த்தேன். ஒரு மூத்த தோழர் நின்றிருந்தார். நான்
மட்டுமல்ல, மற்ற தோழர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும்
அவர் எங்களது இடத்தில் உட்காரவே இல்லை. கடைசி வரை
நின்று கொண்டே வந்தார்.
அவர்தான் அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர். சி.ஐ.டி.யு
சங்கத்தின் தமிழ் மாநிலத்தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின்
சட்டமன்றக்குழுத் தலைவர், திருவட்டாறு தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தோழர் ஜே.ஹேமச்சந்திரன்தான் அன்று டவுன் பஸ்ஸில்
நின்று கொண்டே வந்தவர்.
தற்போதைய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜி.லதா,
ஒரு முறை எங்கள் அலுவலகத்திற்கு வந்து என் சீட் எதிரில் அமர்ந்து
சர்வ சாதாரணமாக பேசி விட்டுச்சென்றதை எங்கள் டிபார்ட்மென்ட் தோழர்கள் நீண்ட நாட்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர் ஒரு எம்.எல்.ஏ என்பதை எங்கள் பிரிவின் அதிகாரி நம்பவே
தயாரில்லை.
பலருக்கும் இது போல பல அனுபவங்கள் இருக்கக்கூடும்.
ராமன் அவ்ர்களே! உங்கள் மீது எனக்கு கோபம்தான் வருகிறது. ஏன் ஹேமசந்திரன் பற்யும் லதா அவர்கபற்றியும் முன்னமெயே எழுதவில்லை.?---காஸ்யபன்.
ஹரிஹரன் அவர்களே! சென்னையில் சி.ஐ.டி.யு.மாநாடு நடந்தது. 5000 சார்பாளர்கள் வந்திருந்தார்கள்.50 பெருக்கு ஒரு counter வீதம் தெநீர் கொடுக்கப்பட்டது. வயது முதிர்ந்த மே.வங்க தோழர் வரிசையில் பின்னால் நின்றிருந்தார்..முன்னல் சென்று தேநீரை பெற்று அவரிடம் நீட்டினேன்."No! com.got two legs and two hands in tact" என்று கூறி மறுத்து விட்டார். அவர்மே.வங்க அமைச்சர்.அதுமட்டுமல்ல. பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கை தாக்கி சிட்டகாங்கைப் பிடித்து இந்திய சுதந்திரத்தை பிரகடனப் படுத்திய சூர்ய சென் பாதுகாப்புக்கு கலவரத்தின் பொது அருகில் நின்ற கணெஷ் கோஷ் தான் அவர்.---காஸ்யபன்
ஐயா ராமன், நீங்கள் மெய்சிலிர்த்து பாராட்டிய தோழர் லதாவிற்கு
உங்கள் கட்சி ஏன் இந்த முறை வாய்ப்பு கொடுக்கவில்லை.
குடியாத்தம் தொகுதியை கைகழுவியது ஏன் என்று தினகரன்,
தினமலர் செய்தி ெளியிட்டுள்ளதை படிக்கவில்லையா? உங்கள் கட்சியின் யோக்கியதை வேலூர் மாவட்டத்தில்
உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். வீண் பெருமை பேசுவதை
நிறுத்திக்கொள்
ஐயா!வெற்றி வெந்தரே! 54ம் ஆண்டுவாக்கில் குடியாத்தம் தொகுதியில் காமராஜர் (இடைத்தெர்தல்) நின்றார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் நின்றார்."குணாளா!வா! குலக்கொழுந்தே!வா!" என்று திராவிடக் குஞ்சுகள் காமராஜரை ஆதரித்த கதை தெரியுமா!---காஸ்யபன்
ஐயா, நான் உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவன்.
ராமன் எழுத்துக்களை பாராட்டி பின்னூட்டம் போட்டவன்.
ஆனால் குடியாத்தம் தொகுதியை இந்த முறை உங்கள்
கட்சி கண்டு கொள்ளாதது ஏன்? இந்தக் கேள்விக்கு நீங்கள்
பதில் சொல்லாதீர்கள். திரு ராமனைக் கூறட்டும். அல்லது
உங்கள் கட்சித்தலைவர்கள் சொல்லட்டும். மனசாட்சி
இருந்தால் உண்மை வெளி வரட்டும்.
அன்பு தோழர் காஷ்யபன் ,
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.சரியாக ஒரு வருஷம் கழித்து இப்போது தான் உங்கள் உங்கள்வலைப்பூவை பார்க்க தொடக்கி இருக்கிறேன்.பழைய நினைவுகளை அற்புதமாக பகிர்ந்துகொண்டு வருகிறீர்கள்.பின்னூட்டத்தில் நிறைய விவாதத்தை கிளப்பி இருக்கிறீர்கள் என்பதே மிக பெரிய வெற்றி தான் உங்களுக்கு.30 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியில் ஒரு சினிமா சம்பந்தமான கூட்டத்துக்கு நீங்கள் சியாமளம் என்ற பெயரில் பேச வந்தது நினைவுக்கு வருகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.
நாறும்பூநாதன்
Post a Comment