Friday, December 02, 2011

மூலதனம் என்ற வனவிலங்குகளால் குத்திக் கிழிக்கப்படுகிறதே....

வன விலங்குகளால் குத்திக் கிழிக்கப்பட்டுவிட்டதே........

இரண்டாம் உலகப் போருக்குப்பின் கிட்டத்தட்ட நாற்பத்தியைந்து ஆண்டுகள் அமைதியாக இருந்த உலகம் தற்பொது முலதனம் என்ற வனவிலங்க்கால் குத்திக் கிழிக்கப்பட்டு கெட்பாரற்று பொய்விட்டதே!

1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சோவியத் நாட்டின் அதிபர் கோர்பசோவ் தன் ராஜினாமாவை அறிவித்தார். சொவியத் நாட்டின் கொடி கிரம்ளின் மாளிகையில் இறக்கப்பட்டு ரஷ்யாவின் கொடி ஏற்றப்பட்டதும் அதே டிசம்பரில் தான். கோர்பசோவ் இந்தியா வந்தார் .அவர் வந்ததைக் கொண்டாடும் விதமாக மதுரையில் புலவர் புத்தூரான் தலைமையில் மதுரை நேரு வினாயகர் கோவில் முன்பு த.மு.எ.ச. சார்பில் பிரும்மாண்டமான் கவியரங்கம் நடத்தினோம்.கோர்பசோவின் நேற்றியில் இடது பக்கம் மச்சம் உண்டு வழுக்கைத்தலையில் பளிச்சென்று தெரியும் .ஆனந்தவிகடன் அந்த மச்சத்தை இந்தியாவாக வரைந்து சொவியத்தின் மனதில் எப்பொதுமே இந்தியாதான் இருப்பதாக கார்டூன் போட்டு கவுரவித்தது.

என் அலுவலக நண்பர் காலம் சென்ற எஸ்.கே மூர்த்தி மாஸ்கோ வாணொலி யில் பேச சென்றிருந்தார்.அவர் வாங்கி வந்த "ப்ரஸ்தொய்கா" புத்தகத்தை படித்து விட்டு "கிளாஸ்நாட் "பற்றி விவாதிப்பேன். சுபிட்சத்தின் பாதிப்புதான் சோவியத்தின் பிரச்சிசினை என்று கொண்டேன். பேருந்து கட்டணம் 5 கோபக் 1935ம் ஆண்டிலிருந்து அப்படியே இருக்கிறது. தொழிலாளியின் ஊதியம் உயர்ந்து கொண்டெவருகிறது.அவன் கையில் சேமிப்பு அதிகமாகிறது.அவனுக்கு நுகர்வு பொருள் தேவை. அதனை வாங்க அவன் விரும்புகிறான் ஆனால் கிடைக்கவில்லை அதுதான் பிர்ச்சினை என்று நாங்கள் கருதினோம். ஆனால் அவனோ முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி அரை குறையாக கேள்விப்பட்டு எல்ஸ்டினின் தலைமையில் அதனைக் கேட்டான் . .

லெனின் ,ஸ்டாலின்,என்று பிரஸ்னோவ் எல்லாருமே சர்வாதிகாரிகள் என்று ஒருவிமரிசன்ம் உண்டு.ஆம்.உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் (dictatorship of proletariat) .அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதம் தான். மூலதனம் அதனை பயன் படுத்தலாம் என்றால் உழைக்கும் வர்க்கம் பயன்படுத்த்க்கூடாதா? இளம் சோவியத் நாட்டை அழிக்க வெள்ளை ராணுவம் (white army) அனுப்பப்பட்டபோது செஞ்சேனை அதனை நோறுக்கித்தள்ளியதற்கு அந்த சர்வாதிகாரம் தான் உதவியது. இரண்டாம் உலக யுத்தத்தில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் மிக அதிக அளவில் சந்தித்தது சொவியத்தநாடுதான் அமெரிக்காஅல்ல .இருந்தும் கிழக்கு ஐரோப்பிய, வளரும் நாடுகளை தன் நாடுபோல் பதுகாத்து வளர்த்தது சோவியத் நாடுதான் தன்மக்களுக்கு இலவச மருத்துவம்,இலவச கல்வி,உணவு,உறைவிடம் அளித்த அரசும் அதுதான்.ஜனநாயகம் வேண்டும் என்று கோரியபோது அதனை சரியாக கையாள முடியாமல் கோர்பசோவ் திணறினார். சோவியத் ஒன்றியத்தை காக்க முடியாமல் ஓடினார் என்பது உண்மைதான்.ஆனால் சோவியத் நாட்டில் சத்தான உணவில்லத குழந்தையைப் பார்திருக்கமுடியாதே...

மூலதன ஜனநாயகமென்ற பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்துவிட்டோமே. அதனை எதிர்த்து நின்ற சொவியத் தகர்ந்து போனபின் இன்று கேட்பார் இல்லாமல் நிதி மூலதனம் ஆட்டம் போடுகிறதே! அமைதியான உலகம் மூலதனமென்ற வனவிலங்கால் குத்திக் கிழிகப்படுகிறதே!

மீளும் வழி எது? ஏது?...சிந்திப்போம் !

6 comments:

அப்பாதுரை said...

முதலாளித்துவத்தில் இருக்கும் சீர்மையைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் சார்.

kashyapan said...

அப்பதுரை அவர்களே1 சீர்மையா!!!......இருக்கா?---காஸ்யபன்

hariharan said...

எனக்கு ஏன் சோஷலிசம் வெண்டுமென்றால்..

இந்தப் புவி பேராசைக்காக அழிக்கப்படாது.
திட்டமிட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.
பட்டினியோடு யாரும் இருக்கமாட்டார்கள்.
உடலுழைப்பை செலவிடப்பதற்கு பதிலாக கொழுப்பை குறைக்க பெல்ட் விற்காது.
கம்யூனிசம் எல்லோரையும் ஏழையாக்கிவிடும் என்று சொல்பவர்களுக்குள் ஒரு குரூரம் இருக்கிறது. அதாவது தனக்கு கீழே யாரும் ஏவலுக்கு இருக்கமாட்டாஎகளே என்ற அச்சம் கலந்த சுயநலம்.

சிவகுமாரன் said...

நான் இட்ட பின்னூட்டம் என்னாச்சு?

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! பின்னூட்டம் எதுவும் வரவில்லையே!---காஸ்யபன்

Gurumurthy said...

I have just now read with interest all your posts (5 posts of Dec 2011). Short writings (and focused & sharp too) always create interest in the reader. I liked them.
- J.Gurumurthy