Friday, November 25, 2011

போராளிகள் யார்?.......

போராளிகள் யார் ?...

இந்த நாட்டிற்கு சதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்கள் யார்?பகவதிசரண் வோரா,சந்திர செகர ஆஜாத்,பகவத் சிங்க் ,ராஜ குரு ,சுகதேவ் ஆகியொர் என்ன செய்தார்கள்?ஆட்டுப் பாலைகுடித்து , அரைநிர்வாண காந்தி மட்டும் தான் போராடினாரா? மற்றவர்கள் போரடவில்லையா?

காந்தியைத்தவிர மற்ற போராளிகளைப் பற்றி நமக்கோ நம் சந்ததிகளுக்கோ எவ்வளவு தெரியும்? இடுப்பில் கத்தியையும், கையில் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலையும் தீவிரவாதியாகத்தானே பகத்சிங்கும் ,,மற்ற போராளிகளும் அறிமுகப்படுத்தபட்டிருக்கிறார்கள்.அவர்களுடைய தியாகம்.பட்டறிவு,ஜனநாயக மாண்புகள் ஆகியவை பற்றி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறதா?

சாவடி நெல்லையப்ப பிள்ளையும்,நீலகண்ட பிரும்மச்சாரியும்,வாஞ்சியும் ,மாடசாமியும் நம்மில் எத்துணை பெருக்குத்தெரியும்? இவர்கள் போராளிகள் இல்லையா?சிவராசனும், பொட்டுஅம்மானும்,திலீபனும் மட்டும்தான் போரளிகள் என்று சொல்லிக்கொடுப்பது ஏன்?

எல்.டி.டியை,பொடொவை,ஈரோசை தெரிந்த அளவுக்கு நவஜீவன் சபாவை,அனுசீலன் சமிதியை, நமக்கு தெரியப்படுத்தவில்லையே ஏன்? சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி,மக்கள் மனதிலிருந்து துடைத்தெரிய செய்யும் செயலன்றி வெறு என்ன?

தொழிசங்கத்தைக் கட்டுப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க பிரிட்டிஷார் சட்டம் கொண்டுவந்தனர்.இந்திய இளைஞர்கள் ஒரு குழுவாக கூடி இதனை எதிர்க்கத்தீர்மானித்தனர்.இதற்கான இயக்கத்தை ஆரம்பிதவர் பகத் சிங். இந்த இயக்கம் வெரும் தலவர்களின் ஆணைப்படி நடக்கும் ஒரு அராஜக அமைப்பாக இருக்கக்கூடாது என்று அவர்கள் தீர்மானித்தனர். அதற்காக இயக்கத்தின் செயல் பாடுகளை தீர்மானிக்க மத்திய குழு ஒன்றை உருவாக்கினர்.சட்டத்த நிறைவேற்ற பராளுமன்றம்கூடியது.பாராளுமன்றத்தில்,ஆட்களே இல்லாத பகுதியில் சத்தத்தை மட்டும் எழுப்பும் குண்டு ஒன்றை வீச வேண்டும் என்ற யோசனையை பகத்சிங் கூறினார். குண்டை வீசினால் நிச்சயம் மரண தண்டனை என்பது அவர்களுக்குத்தெரியும்.இந்த குண்டை தானே வீசுவதாகவும் அதற்கு அமைப்பின் அனுமதி கோரியும் பகத்சிங் தீர்மனம் கொண்டுவந்தார்.

மத்தியகுழு கூடியது.விவாதித்தது.ஒரு சில மாற்றங்களோடு .அதில் முக்கியமானது குண்ட வீசுபவர் பகத் சிங்காக இருக்கக்கூடாது. அவர் இயக்கத்திற்கு முக்கியமானவர் .குண்டுவீச்சு நடந்தபிறகும் இயக்கத்தை முன் கொண்டு செல்ல அவர் அவசியம். ஆகவே வேரு இரண்டு பேர் செல்ல வேண்டும் என்று முடிவாகியது. இது நடக்கும் போது பகத் சிங்கிற்கு 21 வயது இருக்கும்.அவருடைய கூட்டாளிகளும் கிட்டத்தட்ட சமவயதினரே.

சாவு நிச்சயம்.இயக்கத்திற்கு தலைவன் அவசியம் அவனுக்குப் பதிலாக போக மற்றவர்கள் தயார். உலகை ருசிக்காத இளம் தீரர்கள். நெஞ்சு விம்முகிறது நண்பர்களே! தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சுகதேவ். அவர் பஞ்சாபிலிருந்து இரண்டுநாள் கழித்துவந்தார்.அவரிடம் தோழர்கள் தகவலைக் கூறினார்கள்.அவர் கோபப் பட்டார். இரண்டு தோழர்கள் உயிரிழப்பது நிச்சயம்.அதனால் என்னபயன் இயக்கத்திற்கு.உலகறிந்த பகத்சிங் இதனச்செய்தால் இந்தியா முழுவதும் மின்சாரம் பாய்ச்சியது போல் துடித்து எழும் என்று அவர் கூறினார்..

மீண்டும் மத்திய குழு கூடியது.தன் தலைவன் உயிரப் பாதுகாக்க தீமானித்த குழு மறுபடியும் விவாதித்தது. தான் முதலில் கொண்டுவந்த யொசனை நிறைவேறப் போகிறது என்று பகத்சிங் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .தீர்மானம் நிறை வேறியது. பகத்சிங் கூண்டுவீச தயாரானார்.
தியாகம் ,தீரம் , ஜனநாயகம் ஆகியவற்றை அன்ன ஹசாரே, கெசரிவால், அந்த அப்பாவிப்பெண்மணி கிரண் பேடி ஆகியோர் இந்த போராளிகளிடம் கற்றுக்கொள்வார்களா?

18 comments:

சிவகுமாரன் said...

ஆமாம் நெஞ்சு விம்முகிறது,

இராஜராஜேஸ்வரி said...

. உலகை ருசிக்காத இளம் தீரர்கள். நெஞ்சு விம்முகிறது
தியாகம் ,தீரம் , ஜனநாயகம் ஆகியவற்றை அன்ன ஹசாரே, கெசரிவால், அந்த அப்பாவிப்பெண்மணி கிரண் பேடி ஆகியோர் இந்த போராளிகளிடம் கற்றுக்கொள்வார்களா?

கேள்விக்க்குறிதான்...!!!!!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வரலாறைத் தெரிந்து கொள்வதில் நமக்கு ஆர்வமில்லை.அன்றன்றையப் பொழுதை ஓட்டினால் போதும் என்கிற சுயநலம்.

முந்தைய தலைமுறைகளின் தியாகத்தை மறந்துவிட்டோம் என்று சொல்லும் இந்த இடுகையின் ஒவ்வொரு சொல்லிலும் உங்களின் சுடும் கோபமும் கொந்தளிப்பான உணர்வும் தெறிக்கிறது.அது என்னையும் தொட்டது நெருப்பாய்.

சுழியம் said...

//தெரிந்த அளவுக்கு நவஜீவன் சபாவை,அனுசீலன் சமிதியை, நமக்கு தெரியப்படுத்தவில்லையே ஏன்? //

இந்தியாவின் பாடத்திட்டக் குழு கம்யூனிஸ்டுகள் கையில் இருப்பதால்.

.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

kashyapan said...

அன்பு சுழியம் அவர்களே! சைவ அடைக்கலத்திட்டத்தை வடக்கு இலங்கைபகுதியில் போயும் போயும் காஞ்சி சமியாரின் உதவியொடு ஆரம்பிதிருக்கிறீர்களே! ம்.ம். என்ன செய்ய? வெல்லூர்க்குப்பக்கத்தில் வள்ளிமலை தெரீயுமா? அது சமணர் கோவில் !அவர்களை அடித்து விரட்டிவிட்டு வள்ளி மலையாக்கியது யார்? சமனத்துறவி தர்ம சேனரை அடித்தே,வதைத்தே சமணக் குரவராக்கியது யார்? சமணக் கொவிலை திருப்பரம் குன்றமாக்கியது யார்? சமணம் தழைத்த அண்ணாமலையையும் ,காஞ்சியையும் சைவ தலமாக மாற்றியது யார்? இந்து கடவுள் ஐயப்ப சாமிக்கு "சரணம் "பொடுவது ஏன் ? இவை மாதிரி கேள்விகள் தான். நீங்கள் பொத்திகொண்டு இருந்தாலே பொதும்! இலங்கை தமிழர்கள் அவர்கள் பிரச்சினயை பார்த்துக்கொள்வார்கள்.உங்கள் காஞ்சி சாமியார் வந்து ஒன்றும் .........வேண்டாம் ---காஸ்யபன்

சுழியம் said...

வழக்கம்போல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், கேள்வி கேட்டவரைப் பற்றி ஆபாசமாகவும், தொடர்பின்றியும் பேசுவது கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பு என்பதை நிரூபிக்கிறீர்கள் காஷ்யபன்.

காஞ்சி சாமியாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இலங்கையில் சைவத்துக்கு ஏதோ செய்தார் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

என்னவோ நான் அவருக்கு டிக்கட் எடுத்து அனுப்பி வைததது போல நீங்கள் பேசுகிறீர்கள்.

சமணர் கோவிலை இந்துக்கள் ஆக்கிரமிப்புச் செய்து பிடித்துக்கொண்டார்கள் என்பதற்குக் கம்யூனிஸ்ட் புத்தகங்களைத் தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லை.

கம்யூனிஸ்ட் புத்தகங்களைத் தாண்டிப் படிக்க உங்களுக்கு நேரமும் இல்லை.

நீங்கள் நினைக்கின்ற குழுவைச் சேர்ந்தவன் நான் இல்லை. ஆனால், நீங்கள் எல்லாம் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் என்னைப் போன்ற பொதுவான மனிதர்கள் எல்லாம் உங்களின் கம்யூனிசத்தை வெறுக்கவே செய்வார்கள்.

மார்க்ஸ் எனும் அந்த மாபெரும் பொருளாதார நிபுணரின் கருத்தை நீங்கள் கொண்டு செல்லும் விதம் சரியா என்பதை உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.

.

kashyapan said...

சுழியம் அவர்களே! வள்ளிமலைகு பொயிருகிறீகளா? போய்ப்பாருங்கள். அருகில் குகையில்சாமியார்-சமணச்சாமியர் இருக்கிறார். மத்திய தொல்பொருள் துறை சங்கிலி போட்டு தடுத்திருகிறது. சூரிய ஒளி பாடாத சுனையிலிருந்து நீரெடுத்து தருவார். அருந்திவிட்டு வாருங்கள்.காஸ்யபன்

அப்பாதுரை said...

உங்கள் தயவால் சுழியம் பதிவை படிக்க முடிந்தது. பாரம்பரியம் என்ற பெயரில் மதங்களைப் பிடித்துக் கொண்டு திரியும் வரை உருப்படவே மாட்டோம்; சைவமானலும் சமணமானாலும் வேறு எந்த மதமானாலும் - இது என் கருத்து.

சுழியம் கருத்தில் சில உண்மைகள் இருப்பதாக நினைக்கிறேன். சிந்தனையற்ற வன்முறையைக் கடைபிடித்தவர்களைக் கொண்டாடச் சொன்னால் எப்படி? பக்த்சிங் போன்றவர்கள் தீவிரவாதிகள் தான் - தேசப்பற்று இருந்தால் தீவிரவாதம் சரியாகி விடுமா?

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்களில் பலவற்றை இப்போது தான் கேள்விப்படுகிறேன். உங்கள் கேள்வியிலும் ஒரு நல்வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன். இந்தப் பெயர்களையும் இவர்களின் சரித்திரத்தையும் பாடங்களில் படிக்க வேண்டும். ஒருவேளை அப்படியாவது காந்தியின் தியாகம் புரிய வரும்.

அப்பாதுரை said...

சமணர் கோவில்களை சைவர்கள் ஆக்கிரமித்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் தேவாரம் திருவாசகப் புத்தகங்களில் நிறையவே இருக்கின்றன சுழியம். தேடிப்பார்த்தால் தெரியும். சமணர் கோவில்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கெடுத்த சைவர்கள் உண்டு. (conversely, சைவர்களைக் கெடுத்த சமணர்களுக்கான ஆதாரங்களும் இருக்கின்றன).

இவையெல்லாம் செல்வாக்கு பெற்ற ஒரு சில குறிப்பிட்ட சைவ சமண தலைவர்களின் செயல்கள் - என்ன செய்ய.. தலைவர்களை வைத்துத் தொண்டர்களையும் வகைப்படுத்துவது இன்று நேற்றாகவா நடந்து வருகிறது? :)

சுழியம் said...

தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் உள்ள சமண மறுப்புக் கருத்துக்களைத் திரித்துத் தவறாகப் பொருள் கொடுப்பவர்களை நாம் நம்ப வேண்டாமே.

தமிழ் தெரிந்தவர்கள் இத்தகைய திரித்தல்களை மறுக்கிறார்கள்.

அறிவுப்பசி உடையோர்கள் கீழ்க்கண்ட தளங்கள் தரும் பார்வையைப் படிக்கலாம்:

http://www.jeyamohan.in/?p=4574

http://solvanam.com/?p=5628

.

அப்பாதுரை said...

யாரையும் நம்பாமல் தாமே பொருள் கொண்டு புரிந்து கொள்ளும் திறமை மனிதர்களுக்கு உண்டு என்ற கொள்கையுடையவன் நான். தேவார திருவாசகங்களில் ஆதாரம் இருப்பதை கொஞ்சம் படித்தாலே ஆணித்தரமாக விவாதிக்க முடியும். கருத்தை வளர்த்துக் கொள்ள ஜெயமோகனோ காஸ்யபனோ தேவையில்லை என்று நினைக்கிறேன்.

kashyapan said...

மன்னிக்க வேண்டும் சுழியம் அவர்களே! மத்திய அரசில் கம்யூனிஸ்டுகளுக்கு செல்வாக்கு இருப்பதாக நீங்கள் நினைப்பது ஒருவகை மூட நம்பிக்கை.கொஞ்சம் நிதானம் தவறிவிட்டேன்.வருத்தப்படுகிறேன். மதம் சாமி சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர் அப்பாதுரை அவர்கள் .இந்து மதத்தின் தத்துவ விசாரணையின் மையமாக இருக்கும் "கடோபனிஷத்தை" நசிகேத வெண்பா என்று தமிழில் எழுதியசாதனையாளரும் அவர்தான். பகத் சிங் என்ற தீவிரவாதியை சுதந்திரம் கேட்டார் என்பதற்காக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கிறார். அப்பாதுரை என்ற பெயரில் அவருடைய புகைபடத்தொடு கேட்கிறார். காஸ்யபனாகிய நான் என் புகைப்படத்தோடு எழுதுகிறேன் .சுழியம் இடுகைக்கு போனால் இந்து மத செய்திகள் என்று உள்ளது.இலங்கை-சைவ அடைக்கலம் என்ற இடுகை கண்ணில் படுகிறது.காஞ்சி சாமியாரின் உதவியோடு மத மாற்றத்தை உங்கள் குழு எதிர்ப்பதாக நான் புரிந்து கொண்டேன். நீங்கள் தான் ஹரி கிருஷ்ணன் என்றால் அந்தப் பெயரிலேயே பின்னூட்டமிடலாமே! ---காஸ்யபன்

சுழியம் said...

காஷ்யபன்,

நான் ஹரி கிருஷ்ணன் இல்லை ஐயா.

நேரடிப் பெயரில் உரையாடலாம் என்ற உங்கள் கருத்து நியாயமானதே.

இனி உங்களுடன் உரையாடினால், உண்மையான பெயருடன் உரையாட வருகிறேன்.

அப்பாத்துரை அவர்களைப் பற்றிய தகவலை உங்கள் மூலம் அறிந்து மகிழ்கிறேன். நான் விஷயங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உங்கள் இருவரிடம் உரையாடுவது உதவலாம்.

இன்னொன்று. நான் எந்தக் குழுவையும் சார்ந்தவன் இல்லை. என் இயல்பு அதற்கு உதவுவதில்லை.

.

அப்பாதுரை said...

அசல் கடோவை எழுதியவர்கள் தான் சாதனையாளர்கள் காஸ்யபன் சார். உங்கள் கருத்துக்கு நன்றி.

மதம் என்பது வன்முறையைத் தூண்டியதை வரலாற்றிலும் சமகாலத்திலும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம் என்பதே நான் சொல்ல வந்தது. இதற்கான ஆதாரங்கள் நிறைய உலக இலக்கியங்களில் நிறைய உள்ளன. (மதம் என்ற சொல்லின் பொருளுக்கேற்ப) மதத்தலைமை போல ஒரு தீவிரவாதம் வேறெதுவுமில்லை என்று நினைக்கிறேன். மதம் என்பது வன்முறை சாதனம் என்று சொலல்வில்லை. வன்முறைகளை மறைக்க மதப்போர்வை உதவியாக இருக்கிறது என்கிறேன். கடவுள் பெயரைச் சொல்லி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் பாருங்கள்!

அமைதியை தெய்வீகமாக எண்ணும் புத்தமத நாடுகளில் இல்லாத வன்முறையா? மீப நெபால் திபெத் அரசுகளின் வரலாற்றைப் படித்தால் சீரியல் கொலைகாரர்கள் கூட மேலென்று தோன்றுகிறதே?! :)

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று சொன்னவரைப் பின்பற்றும் கத்தோலிக்க மதத்தைப் பாருங்கள் - கொடுமையிலும் கொடுமை. காட்டுமிராண்டிகளை விட மோசம் (இன்றைக்கும்).

சமணர்களை அழிக்க (வீழ்த்த என்று சொல்வது தான் திரிப்பு) 'சிவனை வரவழைத்த' ஞானசம்பந்தர் தீவிரவாதியா? possibly.

'ஐயோ ஞானிகளைத் திட்டுகிறான் அரைவேக்காட்டு அறிவுக்காரன்' என்று உடனே கொடிபிடித்து சிந்தனைகளை அழித்து விடுகிறோம் பாருங்கள் - அதுதான் மதம் நமக்குக் கொடுத்த ஆயுதம். உயிர்க்கொலையை விட மோசமான செயலைச் செய்யும் ஆயுதம்.

தீவிரவாதிகளை மகான்கள் என்று மானுடம் எப்பொழுதுமே ஏற்பதில்லை. கிருஷ்ணனை விட ராமனை யோக்கியர் என்று நினைப்பதன் பின்னணியில் தீவிரவாத intolerance உண்டு என்றால் ஏற்பீர்களா? (ஒரு மழை நாளின் திண்ணை உரையாடலுக்கு இதை வைத்துக் கொள்வோம்). பகத்சிங்கின் காலக்கட்டம் எனக்குத் தெரியாது. இந்தியா மிகப்பெரிய நாடு. மிகப்பெரும் மனிதக்கூட்டம். அந்த நிலையில் பகத்சிங், காந்தியையோ காந்தியைப் போல ஒருவரையோ சந்திக்க முடியாமல் போயிருக்கலாம். 20 வயதில் அப்படி ஒரு முதிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. (என் 20 வயதில் எனக்கு இருந்த பற்றைப் பற்றிச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது - அதனால் பகத்சிங்கின் தேசப்பற்றைக் குறை சொல்ல எனக்கு ஒரு தகுதியும் கிடையாது). இருந்தாலும் சற்றே திசைமாறி பக்த்சிங், வன்முறையை விட்டு விலகி, காந்தி போல நடந்து கொண்டிருந்தால் இன்றைக்கு பகத்சிங்கை மறந்திருக்க சாத்தியம் குறைவு என்றே எண்ணுகிறேன்.

மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் அதே தொனியில் தீவிரவாத அடிப்படையையும் கம்யூனிசம் வளர்க்கிறது என்று நினைக்கிறேன். 'போராளிகள்' என்று முட்டாள்களைக் கொண்டாடி, முதிரும் மனங்களில் தவறான் 'hero'க்களைத் தோற்றுவிக்கிறது என்றும் நினைக்கிறேன். அடக்குமுறையை அரசுமுறையாகக் கொண்டிருக்கும் கட்சிக்கு இது பொருந்தும் என்றாலும் சாதாரண நிகழ்வுகளைத் திரிக்கும் விஷமமும் கம்யூனிசத்துக்கு இருப்பதை மக்கள் உணர வேண்டும் என்று நினைக்கிறேன். (அதுவும் அரசியல் தானே?)

80களில் இதைச் சொல்லி ஒரு முறை அசல் செருப்படி வாங்கியிருக்கிறேன். இருந்தாலும் சொல்கிறேன்: பிரபாகரன் வன்முறையை கைபிடிக்காமல், தலைமை என்ற vision உடன் செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இலங்கையில் தமிழினம் தழைத்திருக்கும் என்று நம்புகிறேன். தீவிரவாதம் என்ற image தெரிந்ததுமே உலக நாடுகள் உதவாமல் ஒதுங்கிவிடுகின்றன. தமிழர்களின் நிலையை விட பிரபாகரன் என்ற நபரின் தீவிரவாதம் பெரிதாகத் தெரிவதால் இன்னும் துயரம் விட்டபாடில்லை.

தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நினைக்கும் அளவுக்கு அந்தத் தாக்கம் இருந்தது. ('87லிருந்து கிட்டத்தட்ட '98வரை உலகில் எங்கே பயணம் போனாலும் பாஸ்போர்டில் என் பெயரைப் பார்த்துவிட்டு தனியாக ஒதுக்கி விசாரிப்பார்கள் :-)

தீவிரவாதத்தை வளர்க்கும் அமெரிகாவைப் பற்றி உடனே எழுத காஸ்யபன் துடிப்பதை உணர்கிறேன்; அங்கே இங்கே போவதை நிறுத்திக்கொள்கிறேன். அம்புட்டுதேன் :)

சிவகுமாரன் said...

பிரபாகரன் பற்றிய அப்பாத்துரையின் கண்ணோட்டம் முற்றிலும் சரியானதே. ஒரு இனத்துக்கே மாபெரும் தலைவனாக போற்றப்பட வேண்டியவனின் தவறான நிலைப்பாடுகளால் அந்த இனமே அழிக்கப்பட்டது நிகழ்கால வரலாறு. ( 1979 இல் பிறந்த என் தம்பிக்கு நானும் என் அண்ணனும் சேர்ந்து பிரபாகரன் என்று பெயர் வைத்தோம்.)

அப்பாதுரை said...

என்ன ஆச்சரியம் சிவகுமாரன்! நான் பிரபாகரனைப் பற்றியும் என் பயண அல்லல்களைப் பற்றியும் எழுதிய போது உங்கள் தம்பியைத் தான் நினைத்துக் கொண்டேன்! :)

ADMIN said...

ஆஹா... அருமையான கருத்துகள்..அழகுற சொல்லியிருக்கிறீர்கள்.! இந்த கால கட்டத்தில் எதைச் சொன்னாலும் இவர்கள் உள் வாங்குவதில்லை ஐயா!

அப்படி உள்வாங்கவேண்டுமென்றால் மீண்டும் நாம் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு அந்த சித்ரவதையை அனுபவித்தால் உண்டு. அந்த வேதனையும், வலியும் இவர்களுக்கு புரியும்.

இது எனது சொந்த கருத்து மட்டுமே.. கருத்தில் ஏதேனும் முரண்பாடு இருக்கிறதா?