Wednesday, January 18, 2012

திரைப்பட விமரிசனம்..."நண்பன்"

திரைப்பட விமரிசனம்.

"நண்பன்"

வசதிமிக்க குடும்பத்தைச்ச்சார்ந்த ஒருவன்,நடுத்தரவர்க்கத்தைசசார்ந்த ஒருவன் , ஏழைக்குடும்பத்தைச்சார்ந்த ஒருவன் என்று சமூகத்தின் மூன்று தளங்களிலிருந்து வந்த மூன்று மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேருகிறார்கள். உயர்கல்வித்துறையின் போதாமையால் எற்படும் இன்னல்களும் அதனால் எற்படும் பரஸ்பர இறுக்கமும் அவர்களை நண்பர்களாக பரிணமிக்கவைக்கிறது..

இந்தப்படத்தை பார்த்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேரும்போது, இரண்டு படிமங்கள் மனத்தை நெருடுகின்றன.நான்காம் ஆண்டுபடிக்கும் மாணவனின் தந்தைக்கு முதல்வர் எழுதும் கடிதத்தால் அவன் தந்தை புலம்புவதும் , பின்னர் மகன் தற்கொலை செய்வதால் அவனுக்கு கொள்ளி வைப்பதும் மனதைக் கனக்கச்செய்கிறது . தண்ணீர் தொட்டியருகில் ஸ்ரீவத்சன் தோல்வியும்,ஆங்காரமும் கோபமும் அழுகையுமாக தன் நண்பர்களிடம் "நான் என்னடா உங்களுக்கு துரோகம் செய்தேன்" என்று சவால் விடும்காட்சியுமாகும். தந்தையாக நடிக்கும் "ராமு"வும் ஸ்ரீவத்சனாக நடிக்கும் சத்யனும் அற்புதமாகச்செய்திருக்கிறார்கள்.

மொழுகு பொம்மை போல வந்து கொண்டிருந்த ஸ்ரீகாந்த் மிகக் கவனமாக தன் பாத்திரத்தை செய்துள்ளார். மடிகணினியை மாற்றி நல்லகாமிரா வாங்க தந்தை சொல்லும் போது மிக நேர்த்தியாக ஸ்ரீகாந்த் செய்துள்ளார்.

எந்த சவாலையும் என்னால் ஏற்கமுடியும் என்று ஜீவா நிரூபித்துள்ளார். ஏழ்மை அதனால் எற்படும் அவமானம், அடிபட்டு தெளிந்தமனதின் உறுதி ஆகியவற்றை நிறைவாக செய்துள்ளார்.இளமையும் திறமையும் வாய்ப்பும் அவரை மெலும் உயர்த்தும்.

சத்யராஜ். ,இலியனா ஆகியொர் நிறைவாக நடித்துள்ளனர் .

கவிஞர் கார்க்கி அவர்கள் ஒரு பாட்டிற்கு பத்து மொழிகளில் கவிதை எழுதியுள்ளதாக குறிப்பிடார்கள். For what? and For whom? கொவையில் ஒரு இளைஞர் பட்டாணிகடலையை மூக்கால் நெட்டி தள்ளீக் கொண்டே மூன்று மைல் சென்றார் என்பர்கள். அதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

"த்ரீ இடியட்ஸ் " இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ராஜபாட்டையை போட்டுவிட்டதால் சங்கருக்கு அதிக வேலையில்லை. ஆனாலும் ....நண்பர்கள் ஊட்டிகுச்செல்லும் காட்சியில் ....மூன்றே விநாடிகள் வரும் "ஹெர்பின்" வளைவுகளுக்காக அவரும் மனோஜ் பரமஹம்சாவும் மெனக்கிட்டிருப்பது பாராட்டுக் குறியது.ரயிலுக்கு வர்ணம் பூசுவது ப்ரம்மாண்டமா? முத்துராஜ் கொஞ்சம் மாற்றி யொசியுங்கள்

செத்தன் பகத் எழுதியுள்ள ."Five points someone" என்ற நாவலை ஒரு லட்சம் ரூ க்கு வாங்கினார் தாரிப்பாளர் சோப்ரா." த்ரீ இடியட்ஸ்" பல கோடிகளை கண்டு விட்டது. ஆனால் செதன் பகத் தன்பெயரை போடவேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடவேண்டியதாயிற்று.எழுத்தாளன் நிலமை இது தான்.

விஜய் என்ற நட்சத்திரத்தை நடிகனாக மீட்டெடுத்ததுதான் சங்கரின் வெற்றி .

2 comments:

பாரதசாரி said...

நான் அமெரிக்காவுக்கு வந்ததும் பார்த்த முதல் படம் அது தான். தமிழில் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததாகவே அறிகிறேன். இன்னும் பார்க்க வில்லை.

kashyapan said...

வாருங்கள் பாரதசாரி அவர்களே! எப்படி இருக்கிறீர்கள்! எழுதுங்கள் ஐயா!---காஸ்யபன்