Monday, January 23, 2012

Dam 999........திரை விமரிசனம்

Dam 999
திரைவிமரிசனம்

சங்கரன் சனாதனமன வாழ்க்கையை நடத்துபவர்.ஒன்பது கோள்களின் இயக்கத்தை கவனித்து நடக்க இருப்பதை துல்லியமாக கணிக்கும் ஆற்றல் படைத்தவர்.ஆயுர் வேத வைத்தியத்திலும் கெட்டிக்காரர்.அவருடைய மகன் தான் வினய். சிறுவனாக இருக்கும்பொதே அவர்கள் வீட்டிற்கு மீரா என்ற அநாதைச்சிறுமி அடைக்கலமாக வருகிறாள் . மீராவும் வினயும் பால்ய சிநேகிதர்களாக வளருகிறார்கள்.வாலிப வயதில் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.வினயின் தந்தை சங்கரனும் இந்த திருமணத்தை விரும்புகிறார்.

இருவரின் ஜாதகத்தைப்பார்த்த சங்கரன் கோள்களின் இயக்கம் சரியாக இல்லாததால் திருமணம் செய்யக்கூடாது என்கிறார் .வினய் கப்பல் வேலைக்குச்சென்று விடுகிறான்,மீரா தன் உணர்வுகளுக்கு அணைகட்டி வாழ்கிறாள்.

வினயின் சக மாலுமி ஃப்ரடரிக். அவன் பாகிஸ்தானைச்செர்ந்த ரஜியாவை மணக்கிறான் அவர்களுக்கு குழந்தையில்லை என்ற ஏக்கமுள்ளதுஇருவரும் தங்கள் உணர்வை அணைகட்டி வாழ்கிறார்கள்.

சங்கரன் மீராவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண எற்பாடு செய்கிறார். வினய் மீராவிடம் பேசுகிறான்.கோபப் படுகிறான். இதனை வரவிருக்கும் மாப்பிள்ளை பார்த்துவிடுகிறான்.திருமணம் நின்றுவிடுகிறது. வினய் மீண்டும் கப்பல் வெலைக்குச் சென்றுவிடுகிறான் .தன் உணர்வுகளுக்கு அணைகட்டி காகசிய நாட்டு தொலைக்காட்சி நிருபராகப் பணியாற்றும் சாண்ற்றா என்ற பெண்ணைத்திருமணம் செய்து கொள்கிறான்.

துரை என்ற பொறுக்கி அரசியல் வாதி முன்னாள் மேயர் ராஜன் சாவுக்காக சந்தெகப்படப்பட்டவன்.ராஜனுக்குப்பிறகு மேயராகிறான். ராஜனின் மகள் மரியாவை வீட்டில் அடைத்து வைக்கிறான். மரியாவின் சகொதரன் தான் ஃபிரடரிக் .புதிய அணை ஒன்றை thurai. பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்து கட்டுவிக்கிறான்.

வினய்-சாண்ற்றா தம்பதியருக்கு சாமுவேல் என்ற மகன் பிறக்கிறான் குழந்தைக்கு சிறுவயதிலேயே சர்க்கரை வியாதி.வினய்க்கும் சாண்ற்றாவுக்கும்மனக்கசப்பு.அதனால் மகன் சாமை அழைத்துக்கொண்டு வைத்தியத்திற்காக தந்தைசங்கரனிடம் வருகிறான். வந்த இடத்தில் மீராவைப் பார்க்கிறான். மீண்டும் அவன் இதயத்தில் அன்பு துளிக்கிறது. மீராவுக்கும் அதே நிலைதான். இதனை அறிந்த சங்கரன்கொதிக்கிறார். மிகப்பெரிய நாசம் வரப்போகிறது என்று அறிவிக்கிறார்.

2009 ஆண்டு 9 ம்மாதமான செப்டம்பர் மாதம் 9 தேதி (9,9,9) அன்று அந்த நாசம் வரும் என்கிறார்.

அதே தினத்தன்று கடும் புயலும் மழையும் அடிக்கிறது. அணையில் நீரின் அளவு எறுகிறது.கசிவு அதிகமாகிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரி மதகைதிறக்க வருகிறார்.மேயர் தடுக்கிறார். தொலைக்காட்சி நிருபர் சாண்ட்றா செய்தி சேகரிக்க வந்தவர் அதிகாரிக்கு உதவுகிறார் மதகு திறக்கப்படுகிறது ஆனாலும்நேரம் கடந்துவிட்டது அணை உடைகிறது.

கதை மாந்தர்கள் 9 பேரின் தேக்கிவைக்கப்பட்ட உணர்வுகளும் உடைகிறது

Dam 999 .படத்தின் திரைக்கதை இதுதான். வினயன் வின்செண்டின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல இருக்கிறது. புயல்,மழை,அணை,காட்சிகளில் தொட்டதரணி மேலை நாடுகளுக்கு சவால் விடுகிறார்.

இந்தப்படத்தின் உச்சம் அதன் இசைதான். ஹரிஹரன்,ஸ்ரெயா கொசல் பாடும் "சோட்கே ",தலப்புஇசை இரண்டும் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.உலகத்தரமான பின்னணி இசை. அமைத்த ஊசுப்பாச்சனுக்கு விருது அளித்து ஆஸ்கார் குழு தன்னப் பெருமைபடுத்திக் கொள்ளவேண்டும்.

ஆங்கிலம்,இந்தி,மலையாளம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்இந்தபடத்தை சொகன் ராய் இயக்கி உள்ளார்.

தமிழ்நாட்டு அறிவு ஜீவிகள் வலைத்தளத்தில் பார்க்கின்றனர் .தமிழ்பத்திரிகைகள் இது பற்றி எழுதாமல் தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டுவிட்டன.

1 comments:

அப்பாதுரை said...

பார்க்கத்தூண்டும் விமரிசனம். நன்றி.
(கடைசி வரி அற்புதம். இவ்வளவு தானா தமிழ்ப் பத்திரிகைகள்?)