Wednesday, February 15, 2012

பெத்தானியாபுரம் முருகானந்தம் அவர்களே!.....

பெத்தானியாபுரம் முருகானந்தம் அவர்களே!

மதுரை அரசரடிவழியாக திண்டுக்கல்செல்லும் சாலையில் 60ம் ஆண்டுகளில் வைகை ஆற்றில் காமரஜர் பாலம் கட்டும்போது பெத்தானியாபுரம் வெறும் தென்னந்தொப்பாக இருந்தது. அந்தத் தோப்பின் நிழலில் தங்கி படித்தவன் நான்.

திருப்பரம் குன்றம் பதினாறூகால் மண்டபத்தின் வழியாக தமிழ்கூத்தனின் கைகளைப் பற்றிக்கொண்டு வெங்கடெசன் இலக்கிய நடை பயிலும்போதே அவரை அறிந்தவன் நான்.

" காவல் கோட்டம்" நாவல் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று உங்கள் இடுகைக்கு வந்த எனக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் தான் மிஞ்சியது.படைப்பைவிட படைப்பாளியை விமரிசித்த்ருக்கிறீர்கள்.அவர் சார்ந்த கட்சியை விமரிசித்திருக்கிறீர்கள்.அதன் காரணமாக திசை மாறி வசை மாரி பொழிந்திருக்கிறீர்கள்.

"செங்கல் பூசை" செய்தது தெரிந்ததுதானே.அதனால் என்ன ? இ.எம் எஸ் , பி.ஆர் ஆகியோர் A.I..CC உறுப்பினராக இருந்தவர்கள் .உலகம்போற்றும் மர்க்ஸீய தத்துவஞானிகள் ஐந்து பெரில் ஒருவர் இ.எம்.எஸ். மார்க்ஸிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவர் பி.ஆர். மத்திய பிரதெசத்தில் தீவிரமான மார்க்சிஸ்ட் உறுப்பினராக இருந்த சுரெந்திரகுல்கர்ணி பா.ஜ.கவுக்கு போனார்.அத்வானியின் அரசியல் அலோசகராக இருக்கிறார்."காவல் கோட்ட"த்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் ஐயா!

நூல் வெளிவந்த புதிதில் எஸ்.ராமகிருஷ்ணன் விமரிசித்திருந்தார்."நம் கண் முன்னால் வளர்ந்த சின்ன பையன்(ர்).முதலில் நல்ல கவிஞன். இப்பொது நாவல். வளாரட்டுமே." என்று அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்."இன்றும் சு.வே . என் நண்பன் தான்" என்று பதில் எழுதினார்.இது விருது பெறுவதற்கு முன்பு.இன்று "காவல் கோட்டம்" விருது பெற்றபிறகு அந்த நூலுக்கு அச்சுக்கோத்தவரிலிருந்து பசைதடவி பைண்டு செய்தவரிலிருந்து மொழிபெயர்த்தவரிலிருந்து "நான் தான் நான் தான் " என்றால்சுவே என்ன செய்யவேண்டும் என்று நினைகிறீர்கள்." ஒன்றோ இரண்டோ பக்கங்களை கொடுத்து மொழிபெயர்த்துத் தரும்படி என்னிடம் கேட்டார்.செய்து கோடுத்தேன்." அவருக்கு விருதாக கொடுக்கப்படும் லச்சம் ரூ யில் எனக்கு ஆயிரம் ருயை நிச்சயம்கெட்கமாட்டேன். மாறாக பெருமைப்படுவேன்.

விருது கிடைத்தால் பங்குவேண்டும்.இல்லையென்றால் மேல்,கீழ் மூடி படுத்துவிடுவீர்களா?

"கந்தசாமி" எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்தான்.உள்ளே இருந்து போராடாமல் வெளியேறினார். என்ன செய்ய முடியும்.?

எம்.பி ஆக ஆசைப்படுகிறார்---நாயக்கர் கல்லுரி---இலக்கியம்பேசுங்கள் ஐயா!

"சு.வே"என் த .மு.எ.க சாவின் செயலாளர். அதற்க்கும் மெல் என் கட்சிக்காரன். அவருக்குக் கிடைத்தது எங்களுக்குக் கிடைத்ததாகும்.

"பஞ்ச மந்திரம்" என்ற சமஸ்கிருத வார்த்தயின் தமிழ் வடிவத்தை பெயராகக் கொண்டவர் நீங்களோ என்று அஞ்சுகிறேன். "மார்க்சிஸம் மகத்தானது". அதனைச்சிறுமைப்படுத்தாதீர்கள். திரைப்படத்துறையிலேயே சாவுங்கள். அதுதான் உங்களுக்கு தோதானது.

7 comments:

சீனி மோகன் said...

"செங்கல் பூசை" செய்தது தெரிந்ததுதானே.அதனால் என்ன ? இ.எம் எஸ் , பி.ஆர் ஆகியோர் A.I..CC உறுப்பினராக இருந்தவர்கள் .உலகம்போற்றும் மர்க்ஸீய தத்துவஞானிகள் ஐந்து பெரில் ஒருவர் இ.எம்.எஸ். மார்க்ஸிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவர் பி.ஆர். மத்திய பிரதெசத்தில் தீவிரமான மார்க்சிஸ்ட் உறுப்பினராக இருந்த சுரெந்திரகுல்கர்ணி பா.ஜ.கவுக்கு போனார்.அத்வானியின் அரசியல் அலோசகராக இருக்கிறார்”. மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றிய நற்சான்றிதழ் இது தான் போலும்.

சீனி மோகன் said...

சரி, மற்ற கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நம்பிக் கொண்டு இருக்கும் எண்ணற்ற காம்ரேடுகளுக்கு நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை இது தானா ?

kashyapan said...

நண்பர் சீனிமோகன் அவர்களே!மார்க்சிஸ்ட் இயக்கம் என்பது ஒரு பேரியக்கம்.அது என் சான்றிதழாலோ,உங்கள் அங்கீகாரத்தாலோ வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. செல்வராஜ்,கு.சி.பா,கவிஞர்கள் கந்தர்வன்,ஆகியோரை பார்த்தாவது (படைப்புகளை) இருக்கிறீர்களா? இலக்கியம் பேசுவொமே! காவல் கோட்டம் பற்றி பேசுவொமே!நீங்கள் ப்பேசமாட்டீர்கள். உங்கள் " இலக்கும் " அது வல்லவே !---காஸ்யபன்

சீனி மோகன் said...

என்னை உங்களுக்குத் தெரியாது. தோழர் பாலசுப்ரமணியனோ, தோழர் முத்தையாவோ இருந்திருந்தால் நான் யார் என்ற அடையாளத்தை உங்களுக்குச் சொல்லி இருப்பார்கள். 15 ஆண்டுகளுக்கு மேல் நானும் கட்சியில் இருந்தவன் தான். 70 - களின் இறுதியிலேயே தீக்கதிரில் என்னுடைய பல கட்டுரைகள் வந்திருக்கின்றன். தேடிப்பாருங்கள்.
நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். உங்கள் கதைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஆனால் என்னுடைய ஒரு கதையைக் கூட நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். கட்சியில் இருக்கும் பெரும்பாலானோர் கட்சி மேல் கமிட்டி அறிக்கை தவிர வேறு எதையும் படிப்பதில்லை என்பதும் எனக்குத் தெரியும். கட்சி மேல் வைக்கப்படும் விமர்சனத்தைக் கண்டு கொள்வதே இல்லை என்பதையும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இ.எம்.எஸ்-ஐயும், பி.ஆரை - யும் செங்கல் பூஜை செய்தவருடன் இணைத்து அவர்களை இழிவு படுத்தாதீர்கள். கட்சி கார்ப்பொரேட்டாக மாறிப் போனதால் யாரை வேண்டுமானாலும் எவரோடு வேண்டுமானாலும் ஒப்பிடத் துணிந்து விட்டீர்கள். செல்வராஜையும், சின்னப்பபாரதியையும், கந்தர்வனையும் தனிப்பட்ட முறையிலேயே எனக்குத் தெரியும். தனித்தனியாக மூவரையுமே அழைத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிதம்பரம் நகரில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன். கட்சி பற்றி ஒன்றும் அறியாதவனிடம் பேசுவது போல் உங்கள் பதில் அமைந்ததால் இவ்வளவு விரிவாக எழுதினேன். கட்சியில் இப்போதும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் கட்சிக்கு வெளியே இருப்பது கொள்கை வேறுபாடு காரணமாகத் தான்.

Unknown said...

செங்கல் பூஜை செய்தது இல்லை பிரச்சனை, செங்கல் பூஜை செய்வதவர் அதே செங்கல் பூஜையின் தமிழக ஏஜண்டும் இடதுசாரிகளை கொச்சைபடுத்தி 1000 பக்க நாவல் எழுதியவருமான ஜெயமோகனிடம் சரணடைந்தது தான் பிரச்சனை, உறவு தொடர்கிறதா என தோழர்கள் அஞ்சுகிறார்கள். ஒரு இடதுசாரிக்கு உங்கள் கட்சியில் பிரதிகளை சரி பார்ர்க ஒரு இடதுசாரி கூட இல்லையா தோழா

அப்பாதுரை said...

'ஆயிரம் பக்க அபத்தம்' என்று எஸ். ராமகிருஷ்ணன் விமரிசித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் மேலிருந்த லேசான மதிப்பும் காணாமல் போனது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்திய விருது கிடைத்ததா தெரியாது, இருப்பினும் இன்னொரு எழுத்தாளருக்குப் பரிசு கிடைத்தது என்ற காழ்ப்புணர்ச்சியே மேலோங்கியிருப்பதாக தோன்றியது.

அழகிய நாட்கள் said...

பிராமண வேளாள இலக்கியங்கள் தவிர்த்து தலித்/பெண்ணியம் சம்பந்தமான இலக்கியப்படைப்புகளுக்கு சாகித்திய அகாடமியின் விருது இது வரை வழங்கப்பட்டிருக்கிறதா தோழர் காஸ்யபன். செங்கல் பூசை மன்னிக்கப்படலாம் இடது சாரியாக மாறிய பிறகு... ஆனாலும் நாயக்கர் கள்ளர் தவிர்த்து மதுரை வீரன் போன்ற வர்களைத்தொடாத்து மதுரை தழுவிய இன வரைவியலில் தீண்டாமை என்ற்தான் நான் பார்க்கிறேன். பாம்பு சட்டையைக்கழற்றுவது போல் இன்று புதிதாகப்பிறந்து வாருங்கள் தோழர்களே... பிறகென்ன வானம் வசப்படும் தலித்துகள் நமது தோழர்கள் ஆவார்கள் .. அப்புறம் வெற்றி மட்டும்தானே.. நமது இலக்கு... எவ்வளவு காலம்தான் இந்த சாதிச்சனியனைதூக்கிச்சுமக்க முடியும்...
பேரன்புடன்
திலிப் சுகதேவ்.