Monday, July 09, 2012

சுப்பையா என்ற பெயர் எனக்கு பிடிக்கும்.............




                                           சுப்பையா என்ற பெயர் எனக்குப் பிடிக்கும்..தமிகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் பெயர் அதிகம் உண்டு.. முருகனின் பெயர்களில் ஒன்று சுப்பிரமணியன். செல்லமாக சுப்பிரமணியனை சுப்பை யா   என்று அழைப்பார்கள்.."அப்பனைப் பாடும் வாயால் , ஆண்டி சுப்பனை பாடுவேனோ "  என்று சிவகவி படத்தில்  தியாகராஜா பாகவதர் பாடியது நினைவுக்கு வரலாம்..நெல்லை மாவட்டத்தில் தெருவுக்கு நான்கு சுப்பையா இருப்பார்கள்..

                                 எனக்கு இந்தப் பெயர் பிடித்ததற்கு தனி காரணங்கள் உண்டு..எனக்கு  முத்த சகோதரை "சுப்பையா " என்றுதான் அழைப்போம்..பாசத்தோடு அழைக்கும் பொது "ஸ்சுப்பையா" என்பேன் கோபம்வந்தால் "சப்பையா" என்பேன்..நாங்கள் பெரியவர்களாகி குடும்பஸ்தர்களான பின்  எங்களுக்குள் மனஸ்தாபம் வந்ததே இல்லை.எங்கள் தாயார் எங்களை வளர்த்த விதம் அப்படி!!
.அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.. சுப்பையா எனும் பொது என் நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது..


                                        எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்ததற்குக் காரணம் உண்டு.."காடெல்லாம் விறகாகிப் போச்சே " என்ற அந்த எட்டைய புறத்தானை அவன் வீட்டில் தாய்,,தந்தை,,உற்றார் உறவினர்
நண்பர்கள் சுப்பையா என்று தான் அழைப்பார்களாம் "கப்பலோட்டிய தமிழன்" என்ற படத்தில் ஒரு காட்சிவரும் பாரதியின் படத்தின் முன் வ..உ..சி நிற்பார்..பாரதிமறைந்த செய்திகேட்டு "பாரதி  எப்பா!!சுப்பையா  "என்று
கதறும் காட்சி சித்தரிக்கப் பட்டிருக்கும்..அந்த மஹா கவிஞன் பெயரும்
சுப்பையா தான் என்பதால் பிடிக்கும்


                                              எல்லாவற்றிர்க்கும் மேல் ஒரு காரணம் உண்டு ..1946ம ஆண்டு இந்தியாசுதந்திரம் வாங்குவதற்கு ஓராண்டிற்கு
முன்பே தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி  போராடி விடுதலை
பெற்றார்கள்..முன்று ஆண்டுகள் செங்கொடியின் கீழ் அவர்கள் 1949 வரைஆண்டார்கள்..பல தலைவர்கள் தலைமைவகித்து அவர்களை வழி
நடத்தினார்கள் அவர்களில் ஒருவர் சுந்தரய்யா ஆவார்.. பிரிட்டிஷ் இந்தியாவான மதராஸ்  மாகாணத்திலிருந்து துப்பாக்கி ,துப்பகிக் கான ரவை , தளவாடங்கள்,மற்றும் புரட்சிவிரர்களுக்கு உணவு என்று சகலத்தையும் வரவழைத்து
 கொடுக்கும் பொறுப்பு  சுந்தரய்யவிற்கு  இருந்ததது .தலை மறைவாக இருந்து கொண்டு அதனை செய்தார்.. அப்போது அவாது தலைமறைவு
வாழ்க்கையின் பொது அவரது பெயர் "சுப்பையா"தான் .

என் அண்ணன் பெயர் சுப்பையா .என் நெஞ்சு நெகிழ்கிறது..
என் மகாகவி பெயர் சுப்பையா..என்மனம் மகிழ்கிறது
எங்கள் சுந்தரய்யாவின் பெயர் சுப்பையா .என் மனம் பரவசமடைகிறது    ,



4 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காலத்தால் அழிக்கமுடியாத சுப்பையாவைக்கொண்டு மேலும் இரு சுப்பையாக்களையும் அறிமுகப்படுத்திய காஷ்யபன் ஐயாவுக்கு நெகிழ்வுடன் நன்றி.

vimalanperali said...

எங்கும் வாழ்ந்து கொண்டிருந்த,வாழ்ந்து கொண்டிருக்கிற சுப்பையாக்கள் மனம் நெருங்கி உள்ளவர்களாகவே/

இராஜராஜேஸ்வரி said...

சுப்பையா என்றால்
சுந்தர நினைவுகள் தங்களுக்கு !!

kashyapan said...

ஆமாம் ராஜேஸ்வரி அவர்களே! புரட்சியில் பங்கு கொண்ட அந்த வீரன் சுந்தரய்யா தன் காதலி லைலாவிடம் திருமணத்திற்கு முன் நாம் மக்களுக்கு ஆற்றும் பணி தோய்வில்லாமல் நடக்க வேண்டும் என்றால் நமக்கு குழந்தைகளிருக்கக் கூடாது. என்று கூறி ஆபரேஷன் செய்துகொண்டார். மதுரைமாநாட்டின்போது அவருடன் கைகுலுக்கும் பேறு பெற்றேன். "கிருஷ்ணாநதிக்கரையிலிருந்து" என்ற என்னுடைய குறு நாவலில் அவரும் ஒரு பாத்திரமாகவருவார்.அவர்களேல்லாம்மகா புருஷர்கள் அம்மா!-----காஸ்யபன்