Thursday, July 26, 2012

"வால்  மார்ட்டும் அமெரிக்கரின் அனுபவமும் -!


                        அமேரிக்கா வாழ்  நண்பர்  ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பல விஷயங்களைப் பற்றி பேசினோம். அவரிடம் கேட்டேன்." திருமதி ஹிலாரி கிளிண்டன் வால்மார்ட்டின் இயக்குனராகைருந்தாராமே?"

"ஆம்மாம்! அதனால் என்ன? இப்போது இல்லையே!"

"அடிக்கடி இந்தியா வருகிறார்!"

"வரட்டுமே "

"இங்க சில்லரை வர்த்தகத்தை கொண்டுவர முயற்சிக்கிறாரே!"

"அப்படியா?"

"அது சரி! உங்க ஊர்லவால்மார்ட் பத்தி என்ன  நினைக்காங்க?"

"வால்மார்ட் எல்லாமிப்ப ஒரு ஏழு எட்டு வரூசம் தான்!"

"எப்படி போகுது?

"நீங்க சொல்ற மாதிரிவிலை எல்லாம் ஒன்னும் விலையைஏத்தலை  "

"அப்புறம்?"'

"ஒருவிஷயம் உறுத்துது!"

"ஒரு இருபதுமுப்பதுமைல் சுத்துவட்டாரத்துல இருந்தகடை  எல்லாம் போயிட்டுது "

"அவங்களால எதித்து நிக்க முடியல " 

"சாமான்லாம் எப்படி?"

"எது வேணும்னாலும் கிடைக்குது"

 "சந்தோசம் தான"

"அப்படி ஒரேயடியா சொல்ல முடியாது"

ஏன்?"

"சரக்கு தரமில்லாம இருக்கு!விலையை எத்தாம தரத்தை குறைச்சுடுதான் !"

 "அடப்பாவிங்களா! அப்பா என்ன செய்யறிங்க?"

"என்ன செய்ய முடியும் ? வேற ஏது கடை?"

"நுகர்வோர் அமைப்பு எதுவும் இல்லையா?"

"திருமதி கிளிண்டன் உங்குருக்கு வந்து  போறாங்க !  எங்க ஊர்ல தான்  வசிக்கிறாங்க !"    

அமெரிக்க நண்பர் முகத்தில் கோபம் தெரிந்தது ! தொளைக்குலுக்கிக் கொண்டார்.!    கை  குலுக்கி விடை பெற்றார்! 















































"கிடைக்காத சாமான் இல்ல"

2 comments:

சிவகுமாரன் said...

"திருமதி கிளிண்டன் உங்குருக்கு வந்து போறாங்க ! எங்க ஊர்ல தான் வசிக்கிறாங்க !"///

நெத்தியடி

அப்பாதுரை said...

வால்மார்ட் இல்லாவிட்டால் அம்பானிமார்ட் வரும். that is all.