Thursday, December 13, 2012

பட்டொளி வீசிப்

பறக்கும் செங்கொடி ......!!!


அறுபதாம் ஆண்டுகளின் முன்பகுதி ! கம்யுனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி" மதுரையிலிருந்து கொண்டு வர முயற்சி நடநதது. அதற்கான இடம் கட்டிடம்  மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்காக கம்பெனி பங்குகளை விற்க முடிவாகியது.  கட்டிட வேலயும் ஆரம்பிக்கப்பட்டது இந்த சமயத்தில்தான் கட்சிக்குள் வலது,இடது என்று ஆரம்பித்து கட்சி பிரிந்தது.

கட்டிட வேல நின்றுவிட்டது. பத்திரிகைக்காக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ரிசீவர் மூலம் நிர்வகிக்க வேண்டியதாயிற்று. பாதி வேலை முடிந்த கட்டிடம் புதர் மண்டி  போயிற்று. ஒருகட்டத்தில் கமபெனியின் இயக்குனர்களாக இருந்தவர்களில்  பெரும்பாலோர்  வலது கோஷ்டியை  சேர்ந்தவர்கள்  .அவர்கள்  அரைகுறை கட்டிடத்தை விற்றுவிட முடிவு செய்தார்கள். மதுரையில் தியாக ராசா செட்டியாரின் தமிழ் நாடு பத்திரிகைக்கு விற்க முயன்றார்கள். அதன் பிறகு தமிழ் முரசு என்ற பத்திரிகைக்கு விற்க பேரம் நடந்தது. 

நீதி மன்றம் நியமித்த "ரிசிவர் " ASR  . chary என்ற பிரபல வக்கீலாவார். இவர் முது பெரும் கம்யூனிஸ்டு தலைவர் ASK ஐயங்காரின் சகோதரர் ஆவார்.
ஏழை தொழிலாளர்களிடம் வசூல் செய்து வர்க்க அரசியலை பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டபத்திரிகை அதன் இடத்தை வர்க்க எதிரிகளுக்கு விற்பது அவர் மனதிற்கு உவப்ப இல்லை.விற்க,வாங்க சகல அதிகாரமும் அவருக்குமட்டுமே இருந்தது.

பி.ராமமூர்த்தி அவர்களைச் சந்தித்தார்."  உங்கள் கட்சி சமரசம் இல்லாமல் தொழிலாளர்களுக்காக பணி புரிகிறது.விற்பதற்கான முழு அதிகாரமும் .
எனக்கு இருக்கிறது .என்ன சொல்கிறீர்கள் " என்று கேட்டார்.சகல ஏற்பாடுகளையும் செய்து பத்திரம் பதிவாகும் வரை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று  கூறி  பரிமாற்றம் நடந்தது..

மறு நாள் காலை கொண்ணவாயன் சாலை தோழர்கள், பரவைமில்
தோழர்கள், ஆரப்பாளையம்,மங்ச மேடு தோழர்கள் மர்க்சிஸ்டு   கட்சி கோடியை ஏற்ற சென்றார்கள்.

அங்கு வலது கட்சி தொண்டர்கள், பறவை மில் மண்டை ராமன்.ஆட் டு ராமன்,கோனையன்,மதுர மில் கடப்பறை ஆகியொர் கம்பு கட்டைகளோடு  நின்றார்கள்.

போலீசார் வந்து கட்டிடம் கைமாறிவிட்டது என்று எடுத்த்ச் சொல்லி அவர்களை கலைந்து  போகச் சொன்னார்கள் '

விண்ணதிர கோஷமிட்டு தோழர்கள் செங்கொடியை ஏற்றினார்கள்.

மதுரை-தேனி சாலையில் அரசரடி சதுக்கத்திலிருந்து வடக்கே வைகை ஆற்றுப்பாலத்தைப்  பார்த்தால் மறுகரையில் கம்பிரமாக பட்டொளி வீசி செங்கொடி பறப்பதைப் பர்க்கலாம் .

அந்தச் செங்கொடியின் கீழே தான் "தீக்க்திர் "  அச்சடிக்கப்பட்டு, வெளி வருகிறது

அதன் ஐம்பதாம் ஆண்டு விழா!! தோழர்களே  வாழ்த்துவோம் 111 





3 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாருமாக சேர்ந்து வாழ்த்துவோம்...

நல்ல கட்டுரைப் பகிர்வு.

அப்பாதுரை said...

வாழ்த்துவோம்.

venu's pathivukal said...

தோழரே...


ஓர் இயக்கத்தின் ஒவ்வொரு காலடித் தடமும் தனித் தனி வரலாறுகளால் பதியப் படுவது என்பதை உங்களது வெவ்வேறு இடுகைகள் பெருமிதம் போங்க சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றன..
ஔர் நாளிதழ் என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எப்படிப் பட்ட ஆயுதம் என்பதை அது இல்லாத சூழலைக் கற்பனை செய்தால் மட்டும் உணரக் கூடியது..வாழ்த்துக்கள் தோழா....

எஸ் வி வேணுகோபாலன்