திலகருக்காக வாதாடிய
ஜனாப் முகமது அலி ஜின்னா .....!!
மகாகவி பாரதி சுதந்திரத்திற்காக படு பட்ட தலைவர்களில் வட இந்திய தலைவர்கள் பற்றி உணர்ச்சி மிக்க பாடல்களை எழுதியுள்ளார் ! நௌரோஜி ,திலகர்,கோகலே ,காந்தி என்று எழுதியுள்ளார்.! ஆனாலும் திலகர் அவருக்கு மிகவும் நெருக்கமான விருப்பமானவர் !
மாஜிஸ்டிரேட் ,ஜுட்ஜு பதவிக்கு மனு செய்து கொண்டிருந்த
காங்கிரஸ்கரர்கள் மத்தியில் "சுதந்திரம் என்பிறப்புரிமை "என்ற கோஷத்தை திலகர் வைத்தார்.! பிரிட்டிஷ் காரர்களுக்கு விசுவாசத்தை காட்ட விரும்பியவர்கள் அவரை
தீவிர வாதி என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தனர் ! அவரை ஆதரித்த பாரதி.,வ.உ.சி, சிவா ஆகியவர்களை மயிலாப்பூர் வக்கீல்களால் நடத்தப்பட்ட காங்கிரஸ் ஒதுக்கி, அவர்களை துன்புறுத்தியது !
சமயத்திற்காக காத்திருந்த பிரிட்டிஷ் அரசு திலகர் மீது ராஜதுரோக வழக்கை போட்டது.!
காங்கிரஸ் வக்கில்கள் ஏனோ வரவில்லை.!திலகர் தன்னுடைய சிஷ்யனு ம் ,இளம் வக்கீலுமான முகம்மது அலி ஜின்னாவை தனக்காக வாதடும்படிக் கேட்டுக் கொண்டார்.! திறமையாக வாதாடிய ஜின்னாவின் வாக்கு சாதுரியத்தை அன்று எல்லாரும்போற்றினர் !
பிரிட்டிஷ் நீதி மன்றமோ அவருக்கு பத்து ஆண்டு தண்டனை விதித்தது.!அதில் ஐந்து ஆண்டுகள், பர்மாவில் உள்ள மண்டலே சிறையில் நாடு கடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டது. !
சிறைவாசம் முடிந்து வந்த திலகர் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டார். 1916ல் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். சோவியத் புரட்சி அவருக்கு உத்வேகமளித்தது. தன்பத்திரிகையில் விளாடிமிர் லெனினை புகழ்ந்து கட்டுரைகள் எழுதினார் !
ஹோம் ரூல் இயக்கத்தில்தீவிரமாகப் பங்காற்றினார்.1920ம் ஆண்டு மறைந்தார்
ரஸ்
2 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா
பொதுவாக திலகர் குறித்த விவரங்கள் பெரும்பாலும் அவரை இந்து மதப் பற்றாளராகவும், தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்றும் அறிந்திருக்கிறேன்..
உங்களது பதிவு அவரது அடுத்த பரிமாணத்தைப் புரியவைத்தது...வாழ்த்துக்கள்...
எஸ் வி வி
Post a Comment