புத்தகக் கண்காட்சி ---2013 !
சிகாகோவில் வசிக்கும் நண்பர் அப்பாதுரை அவர்கள் ஒரு மாதம் சென்னை வருவதாகக்கூறினார்.! அவரிடம்சென்னை புத்தகக்கண்காட்சிபற்றி கூறி பயணத்தை திட்டமிடுங்களென்று சொல்லியிருந்தேன் ! அவரும் பயங்கரமான புத்தகப் பிரியர் ! வாங்க வேண்டிய புத்தகங்கள் பற்றி ஒரு பாட்டியலும் கேட்டிருந்தார் !
இன்று அவர் புத்தக கண்காட்சியில் கிடைத்த அனுபவத்தை பகர்ந்து கொண்டார் 1
காடுக்கடங்காத கூட்டம் ! எந்த ஒரு கடைக்குள்ளும் போய்வர முடியவில்லை ! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் புத்தகங்கள்தான் disply ஆகியுள்ளன! மற்றவை அடுக்கி வைக்கப் பட்டிருப்பதால் தேடி வாங்க முடியவில்லை ! வாசகனுக்கோ வருகையாளருக்கோ மரியாதை இல்லை! என்றார் !
பதிப்பகத்தார் மற்ற நாடுகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை பார்வையிட வேண்டும்! கடைகள் புத்தகங்களை அடுக்கிவைக்கவே போதாது ! சிறுகதைகள்,நாவல்கள்,அறிவியல் ,புராணம் என்று தலைப்பு வாரியாக இருந்தாலும் பரவாயில்லை !
வருபவர்கள் ஆற அமர உட்கார ,யோசிக்க,வழியில்லை ! கிட்டத்தட்ட
10 லட்சம் பேர் வருவார்களாம்.! ஒரு ஆளுக்கு 5ரூ வாங்குகிறார்கள் ! கடைகளுக்கு 10000 ரூ வாங்குகிறார்களாம் ! 500 கடைகள் உள்ளன ! இதுவே 1கோடி வசூலாகிறது ! என்றும் குறிப்பிட்டார்
புதிய பதிப்பு என்றால்,பாரதிபதிப்பகம், கிழக்கு பதிப்பகம் தவிர வேறெதிலுமில்லை நண்பர்கள் சொன்னார்கள் !
பதிப்பகங்கள் வெளிநாடுகளில் புத்தககண்காட்சிகள் எப்படி நடை பெருகின்றன என்பதை தெரிந்து கொள்வது மிகவும்முக்கியமான ஒன்று !
கண்காட்சியை நடத்துபவர்களைவிட பதிப்பகத்தாரின் கைகள் ஒங்கி
இ ருப்பதாகவே படுகிறது
பாவம் வாசகன் ! !
1 comments:
வரும் சனிக் கிழமை அப்பாஜியை சந்திக்க புத்தகக் கண்காட்சியைத்தான் தீர்மானித்திருக்கிறோம்.(அவரிடம் ஆலோசனை கேட்காமலேயே). சரி நடப்பது நடக்கட்டும். ஸ்டாலுக்கு 25000 ரூபாய் கட்டணம் எனக் கேள்விப்பட்டேன். முதன்முறையாக நகர்ந்திருக்கிறது 36வது கண்காட்சி. அப்பாஜி மார்கழி இசைவிழாவையும் இணத்திருப்பார் என்று எண்ணுகிறேன்.
Post a Comment