Wednesday, January 09, 2013

சாதியை மட்டுமல்ல !

சாமியையும் மறுத்த காதல் !!


சரியாக 40 வருடங்களுக்கு முன்னால்   நடநதது !  அந்த இளைஞர் பெரியகுளம் எல்.ஐ .சி அலுவலகத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தார்.! அவர் கிறிஸ்துவர் !  அலுவலகத்துக்கு அருகில் வசித்துவந்த பிராமணர் குடும்பத்து பெண்ணை காதலித்தார். ! . இருவரும் திருமணம் செய்து
கொள்ள முடிவெடுத்தனர். ! சங்க நிர்வாகிகளிடம் உதவும்படி
கேட்டுக்கொண்டார்.!

தலைமை நிர்வாகிகள் மதுரையிலிருந்ததால் அவர்களை அணுகினார் ! தலைமை திருமணத்தை நடத்த உதவ சம்மதித்தது.!சங்கத்தை பாதிக்காமல், உள்ளுரில் சிக்கல்வராமல் காதும் காதும் வைத்தபடி காரியமாற்ற முடிவாகியது !

மூத்த தோழர்கள் நாராயணசிங்,கிருஷ்ணன் தண்டபாணி,தனபால்பாண்டியன்
 ஆகியோர்  முன்னின்று பணிகளை செய்தனர். ! ரகசியமாக மணமகளையும், மணமகனையும் கொண்டுவருவதிலிருந்து சகலமும் திட்ட மிடப்பட்டது ! பொருக்கி எடுக்கப்பட்ட தோழர்களுக்கு என்னன்னா செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது!. அவர்களுக்கு எதற்காக இதனச் செய்கிறோம் என்பது சொல்லப்படவில்லை.! ராணுவத்தில் logistic என்பார்களே  அதுமாதிரி காரியங்களை செய்வதி வல்லவரான நாரயண்சிங்  முழுப் பொறுப்பையும் செய்தார் ! திருமணம்  செய்விக்கும்  பூசாரியை கொண்டுவரும் பொறுப்பு  எனக்கு அளிக்கப் பட்டது.

1972ம் ஆண்டு .ஜனவர் மாதம் 10ம் தேதி !  பெரியகுளம் அக்கிரகாரத்தில் வக்கீல் வீட்டு முன் இருந்த டாக்சி புறப்பட்டது ! அதில் மணப்பெண்  அமர்ந்திருந்தார். ! நகரத்திற்கு வெளியில் இருந்த பெட்றோல் பங்கில்காத்திருந்த மணமகனோடு  எல்.ஐ.சி தோழர் காசி அவர்களும்

 காரில்  ஏறி கொண்டார் !  மதுரை  நோக்கி கார் புறப்பட்டது ! காருக்கு முன்னாள் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி ஒருவர் பைலட் ஆக பாதுகாப்பிற்கு வந்தார்!  .

மதுரை ரயிவே காலனியில் உள்ள தோழர் தியாகராஜன் அவர்கள் வீட்டில் மணமகளை இறக்கிவிட்டு ,மணமகனை மதுரை அரசமரம் சந்திலுள்ள பொதுத்தொழிலாளர் சங்கத்தில் அந்த மணமகனை தங்கவைத்தார்கள் ! மறுநாள் காலை 10 மணிக்கு திருமணம் !(11-1-72)

எனக்கு இதெல்லாம் தெரியாது !  எனக்கு சொன்னதெல்லாம்,காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் தொழார் எ .பாலசுப்பிரமணியம் அவர்களை (அவர்தான் திருமணத்தை நடத்தும் பூசாரி)பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கு  அழைத்துவரவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது!

நான் எ.பி அவர்களொடு சங்கத்திற்குள் நுழைந்தேன் !மணக் கோலத்தில் . அங்கு இருந்தார்கள். ! திருமணம்முடிந்து மீண்டும்     எ.பி யை கட்சி அலுவலகத்திறகுஅழைத்துச்  சென்றேன் ! திருமண சடங்கு  நடக்கும்  போது  மணப்பெண்ணிடம்   விசாரித்திருக்கிறார் ! அவருக்கு வயது 19 என்று தெரிந்துள்ளது !

"ஏண்டா ! மாநில செயலாளரை ஜெயிலுக்கு அனுப்ப தீர்மானிச்சுட்டீகளாடா ? மைனர் பொண்ணை கட்டத்தின பழி ஒண்ணுதான் பாக்கி? என்றார் .
 "இல்லை! எ.பி " என்று இழுத்தேன் !
"வாயை மூடு ! "
"எவ்வளவு சீக்கிரம் ரிஜிஸ்டர் பண்ணனுமோ அவ்வளவு சிக்கிரம் பண்ணிடுங்க "
என்றார் !

அந்த இளைஞர்  தான் இன்று ஓய்வு பெற்ற பிறகும  தீக்கதிர்  அலுவலகத்தில் துணை  ஆசிரியராகப்  பணியாற்றும்  தோழர்  எம்.எஸ்.அருள் தாஸ் ! 

தோழரே ! நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சாதியை மட்டுமல்லாமல் தன்  
சாமியையும் மறுத்து    தங்கள்கைப்பிடித்து நடந்த நாகலட்சுமி அம்மையாருக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் !


























1 comments:

hariharan said...

Oh, fourty years back! It is revolutionary marriage.