Thursday, January 24, 2013

"விஸ்வரூபமும் "

"பாதை தெரியுது பார் "

திரைப்படமும் .................!!!



"கமலஹாசனையும் ,விஸ்வரூபம் திரைப்படத்தையும் எவ்வளவு சவட்டி எடுக்க வேண்டுமோ அவ்வளவு சவட்டி விட்டார்கள் !  நல்ல நேரம் ! கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் (informed public ) அவருக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள்! படம் வெளிவரும் என்ற நம்பிக்கை இன்னும் அற்றுப் போகவில்லை  !

"சமத்தன் சந்தைக்கு போனான் பைத்தாரன் பல்லக்குல போனான்" என்று கிராமங்களில் கூறுவார்கள்! 53 வருடங்களுக்குமுன்னால்கம்யுனிஸ்டுகள் , ஆதரவாளர்கள்,அனுதாபிகள்  என்று  சிலர் கூடி திரைப்படம் எடுத்தார்கள் ! "பாதை தெரியுது பார் " என்ற அந்த படத்தை இயக்கியவர் நிமாய் கோஷ் என்ற வங்காளி ! கம்யூனிஸ்ட் ! பிரிவினையால்  எற்பட்ட  அகதிகள்  பிர்ச்சினயும்    அதனால்மே.வங்கம் பட்ட துன்பத்தையும் சித்தரித்த "சின்னமுல் "
என்ற படத்தை எடுத்து புகழ் பெற்றவர் ! 

"விடுதலை,புதிய அரசு, திட்டமிட்ட பொருளாதாரம்,முதலாளிகள், பங்கு
சந்தை , புரோக்கர்கள், கள்ளப்பணம், பதுக்கல் என்று சகலத்தையும் சித்தரிக்கும் கதை என்பதால் நாங்கள் சம்மதித்தோம் என்றார் ஜெயகாந்தன்

கேவிஜயன் ,எல்.விஜயலட்சுமி,சஹஸ்ரனாமம், எஸ்.வி.சுப்பையா  ,வி.கோபாலகிருஷ்ணன் ஆகியொர் நடித்தார்கள்! (பின்னர் விஜயன் சிவாஜி,எம்.ஜி.ஆர் ஆகியவர்களை வைத்து வெற்றிப்படங்களை இயக்கினார் ) இந்தப்படத்தில் தான் ஜானகி குமாரிஜானகியாக முதன்முதலாக பின்னணி பாடகியாக வந்தார் !" தென்னங்கீற்று ஊக்ன்சலிலே " சின்னச்சின்ன மூக்குத்தியாம் " போன்ற பாடலகளைத் தந்து இசை  அமைத்தவர் எம்.பி சீனிவாசன்.!

படப்பிடிப்புக்கு தேதி குறிப்பிட்டார்கள் ! கம்யுனிஸ்ட் கட்சியின் செய்லாளாக இருந்தஎம்.ஆர்.வெங்கடராமன் காமிராவை முடுக்கிவைத்தார் ! சிவப்பு துண்டு அணிந்த தொழர்களின் நடமாட்டம்  கோடம்பாக்கத்தில் கூடுதலாக அன்று இருந்தது !

பக்கத்து தளத்தில் இருந்த படப்பிடிப்புக்கு வந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரன் சிவப்பு துண்டுகளைப் பார்த்து விசாரித்துள்ளார்கள் ! கம்யுனிஸ்டுகள் படம் எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள் ! அந்த மேதை " "கொக்கிகள் வந்துட்டாங்களா ? விடப்படாதுப்பா ! எப்படியாவது தடுக்கணும் "என்று கூறியுள்ளார் !

படத்தை வினியோகிக்க மறுத்துவிட்டார்கள்  எவரும் வாங்கவில்லை ! இறுதியில்  ஈன கிரயத்திற்கு மெய்யப்ப செட்டியார் வாங்கினார் ! தோழர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை ! ஏ.வி.எம். பெரிய நிறுவனம் ! சுண்டக்காய் வினியோகஸ்தர்கள் வாங்காவிட்டால் என்ன! என்று  துள்ளிக்  குதித்தார்கள்!.
.
செங்கல்பட்டுக்கும் தாம்பரத்திற்கும்  நடுவில்  உள்ள  ஒரு  பாடாவதி  தியேட்டரில் இரண்டு நாள் படத்தை ஓட்டிவிட்டு டப்பாவை
மூடிவைத்தார் செட்டியார் 

கோர்ட், கேசு, தடை உத்திரவு, ஒருமண்ணும் இல்லை !

இது எப்படி !!!