Thursday, May 23, 2013

அந்த போராளிக்குள் இருந்த 

கலைஞனை தரிசித்தேன் .......!!!

அப்போது நாங்கள் பிப்பிள்ஸ் தியேட்டர் என்ற் நாடகக் குழுவில் செயலாற் றிக்கொண்டிருந்தோம்! "நெஞ்சில் ஒரு கனல் " என்ற நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்திக் கொண்டிருந்தோம்!

தஞ்சையில் உழைக்கும் பெண்களுக்கான மாநாட்டு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! அப்போது மாவட்டத்தலவர் கே..ஆர்  ஞானசம்பந்தம் எங்கள் நாடகத்தை போட விரும்பினார் ! விவசாயிகள் ,மாணவர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையை சித்தரிக்கும் நாடகம் ! எ. பாலசுப்பிரமணியம், ராமராஜ்,என்.சங்கரய்யா என்று மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் வருகிறார்கள் ! அவர்கள் முன்னால் நாடகம் என்பது எங்களை சிலிர்க்கச் 
செய்தது!
 நாடகத்தில் விவசாயிகள் தலைவராக வரும் இளைஞருக்கு  சந்திரன் என்று பெயர் வைத்தோம்! மற்றவர்கள் அவரை கூப்பிடும் போதெல்லாம் "சந்திரய்யா! சந்திரய்யா!" என்று கூப்பிடச்செய்தோம் ! அப்பொது சங்கரய்யா அவர்கள் விவசிகளிடையெ  செயலாற்றி வந்தார்! அந்தப் பெயரைச் சொல்லும் போதேல்லாம் கைதட்டல் விழும்!

ஒரு நடிகர் வேண்டு மென்றே " சந்திரய்யா"என்பதற்குப் பதிலாக "சங்கரய்யா "
என்பார்!" எப்பா! சங்கரய்ய இல்லை! சந்திரய்யா !" என்று திருத்துவார்! " அடுத்தவர் "ரெண்டுமொண்ணுதான்பா " என்பார்!(இயக்குனரின் சாமர்த்தியம்)

திருவாரூரா ,திருவையாரா பெயர் நினைவில் இல்லை ! நிகழ்ச்சிக்கு தெலுங்கானா போராட்ட வீராங்கனை சுயராஜ்யம் தலைமையில் பெண் போராளிகள் வந்திருந்தனர்!

இவர்கள் முன்னாள் நடிக்கும் வாய்ப்பு ! நடிகர்கள் உற்சாகமாக இருந்தனர்! நாடகம் முடிந்ததம் தலைவர்களின் விமரிசனத்தைக் கேட்க துடித்துக் கொண்டிருந்தோம்!

நாடகம் முடிந்தது ! என்.எஸ் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார் ! அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்! என்னை கவனித்த அவர் " தோழர் ! நாம பேசுவோம்! நாளைக்கு காலைல 8 மணிக்கு நாம ரெண்டு பேரும் ஒருத்தர பாககபோறோம்! தயாரா இருங்க! "என்றார்.  

நாடகத்தை பார்த்த விவசாய பெருங்குடி மக்கள் எங்கள் நடிகர்களை சூழ்ந்து கொண்டனர்! பண்ணையாராக நடித்த துரைராஜை சுற்றி " தோழர்கள் " புகழ்ந்துகோண்டிருந்தனர்! "டேய் ! சாதி ஒழிஞ்சு போச்சு ! சாதிஒழிஞ்சு போச்சு நு ! சினிமால ஸ்லைடு போடலாம்! அவனவன் அவன்சாதிய வைச்சு போழக்கிறான் " என்று கூறுவதை பெசிப்பேசி புகழ்ந்தனர்!  எல்.ஐ சி தோழர் சூரியபோஸ் சந்திரய்யவாக நடிப்பார்கள்! அவர ஆண்களும் பெண்களுமாக தோட்டுப்பார்த்து மகிழ்வார்கள்!

மாநாடும் நாடகமும் ராமநாதன் செட்டியார் தோட்டத்திஉள்ள பள்ளிக்கூடத்தில்நடந்தது!  
 இடம் கொடுத்து உதவிய ராமநாதன் அவர்களைச் சந்தித்து நன்றி சொல்ல என்னையும் அழைத்துச்சென்றார்! 

நாற்பது ஐம்பது வயதிருக்கும்! தும்ப்பைப்பு வெண்மையில் உயர்ரக கதர் துணியில் சட்டையும் வேட்டியுமணிந்திருந்தார்! ஒழுங்காக மழிக்கப்பட்ட முகம் மின்னியது! நல்ல ஆங்கிலமும் தமிழும் பேசினார்!  
அவர்கள் தோட்டத்தில் இரண்டு டிராக்டர்கள் இருந்தன! காகி கால்சட்டையும்  முண்டாபனியனுமணிந்த இரன்டு பேர் கொடுவாள் மீசையுடன் அதன் அருகில் துடைத்துக்கொண்டு இருந்தனர்! 
நாங்கள் திரும்பினோம்!    

"'காஸ்யபன்!நாம பார்த்தது தான் ராமநாதன்!பெரிய மிராசுதார்! எப்படீருக்கிறார் பார்த்தீர்களா ? உங்கள் நாடகப் பண்ணையார்,கொடுவாள் மிசையும்,உடம்பு பூரா சந்தானம் பூசி இருந்தார் ! பண்ணைக் கூலி ட்ராக்டர் ஓட்டறான்! டிக்டர்னால  அவன் பத்து பேர் கூலி போகுதேன்னு தெரியாதவன் அவன் ! சின்னப்புள்ளைங்க சிலேட்டுல ஒண்ணும் ஒண்ணுமிரண்டு எழுதி அழிக்கும்! அப்புரம்ரெண்டும்ரெண்டும் நாலுன்னு எழுதும்!அதுமாதிரி இல்ல இது! கூலி விவசாயின்ன அப்பாவி ங்கரதுமில்ல! பண்ணையார்னா முரடன்னும் இல்ல !  இரண்டு பேருக்கும் அனுபவம் கத்துக்கொடுக்குது!  யதார்த்தம் உருவத்தையும்மாத்துது ! பண்ணையார்  உள்ளம் மாறியிருக்கா ! தெரியாது! ஆனா    உருவம் மாறியிருக்கு! எல்லாமே  நவீனப்படுத்தப் படுகிறது !"
கொஞ்சம் இடை வெளி  விட்டார்! 
"நல்லாருந்தது! நாடகம் நல்லாருந்தது ! " என்று கூறி புறப்பட்டார்!

நான் அந்த போராளிக்குள் இருந்த கலைஞனை தரிசித்தேன்! 
  

  
3 comments:

சுந்தர்ஜி said...

எந்தக் காலத்துக்கும் பொருந்தும் அருமையான போதனை. ஜோர்.

சிவகுமாரன் said...

பகிர்வுக்கு நன்றி

மோகன்ஜி said...

பழைய நினைவுகளை கோர்வையாய் சொல்லும் உங்கள் எழுத்து. சங்கரைய்யா பற்றி கூட நீங்கள் ஒரு பதிவு இடலாம். இப்படியும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று இந்தத் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டாமா?