Sunday, December 22, 2013

" பாரதி மணி அவர்களும் "கடவுள் வந்திருந்தார் நாடகமும் "


பாரதி மணிஅவர்களைவிட நான் ஒரு வயது மூத்தவன் ! வீட்டில் மகன் ,மகள் பேரன்  பேத்திகள் ஆகியவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள்பெயர் மறந்துவிடுகிறது ! பேசிக்கொண்டிருக்கும் போதே mind blank ஆகி விடுகிறது ! சமாளித்து வருகிறேன் ! மணி அவர்களின் பேச்சு நாடகம் முடிந்ததும் காதில் ரீங்காரம் செய்துகொண்டுதான் இருக்கிறது!

நாடக அரங்கில் நீள ம் அகலம் உயரம் மூன்றும்  உண்டு! நாடக வியலில் (dramatics ) நடிகன் இவற்றை முழுவதுமாக பயன் படுத்தவேண்டும் என்பார்கள் ! பாரதிமணி அவர்கள் பயன்படுத்துவது இருக்கட்டும் -மனுஷன் dominate பண்ணுகிறார் ! என்ன energy !!!

வாசன  உச்சரிப்பு ! என்ன delivery ! what a dexterous delivery of dialogue ! amazing !

இன்று காலையில் தொலை பேசி மூலம்பாராட்டி பேசினேன்! "இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? இந்த வயசுக்குமேல் "என்றும் கெட்டேன் !

"கேயில் ,குளம் நு போகலாம் ! யாரைப்பத்தியும் வம்பு பேசலாம் ! அது வேண்டாமேன்னு பார்க்கறேன் ! சின்னபசங்க வராங்க ! அவங்க கூட பேசி பழகறேன் !"

"உச்சரிப்பு அழகாயிருக்கே ! ' 

"அதுக்கு காரணம் உண்டு காஸ்யபன் ! ரண்டு வருஷம் லண்டன்ல இருந்தேன் ! அங்க 200 வருட பாரம்பரியம்கொண்ட நாடக் குழு இருந்தது ! அவாகூட சேர்ந்து voice culture  பழகின்டேன் ! இந்தக்காலத்து பசங்களுக்கு அத சொல்லி கொடுக்கறேன் "

நான் மதுரை வருமுன்  ஹைதிராபாத்தில் இருந்தேன் ! அப்போது மனோகரின் நேஷனல் தியேட்டர் தமிழகத்தில்   பிரபலம்! விசுவாமித்திரர் நாடகம் போட்டர் ! அதில் cinedrama என்ற புதுமையை செய்திருந்தார் ! அதனைப் பார்ப்பதற்காக சென்னை வந்தேன் ! ரயில் சென்றல் வரும் போது மாலை 5 மணியாகிவிட்டது ! அடித்துபிடித்து அரங்கத்தை அடையும் பொது டிக்கட் இல்லை ! நாடகத்தைப் பார்க்க ஹதிராபாத்திலிருந்து வருவதையும் உடனடியாக திரும்ப வேண்டி இருப்பதையும் வீளக்கைச் சொன்ன பிறகு மாடியில் நின்று கொண்டு பார்க்க அனுமதித்தார்கள் !

நேற்று "கடவுள்  வந்திருந்தார் " நாடகத்தை அது திநகரில் நடந்த போதும் நாகபுரியில், என்விட்டில் 8 c  குளிரில் என்படுக்கைஅறையில் சவுகரியமாக பார்த்தேன் ! கண்டிப்பாக பரிவாதினி அமைப்பினருக்கு நான் கடமைப்பட்டவன் ! அப்படிப் பார்த்தவர்கள் 253 பேர் (through internet) சாதாரண காரியமல்ல !

இன்னும் கொஞசம்  தொழில் நுணுக்கப்பயிற்சியும், முன் தயாரிப்புமிருந்தால்  ஒளிபரப்பு இன்னும் சிறப்பாக இருக்கும் !

casting  மற்றும் technical  details  இல்லாததால் விமரிசனமாக எழுதமுடிய வில்லை 

மனதை  நிறைவு செய்த நாடகம் என்பதில் ஐயமில்லை !

Hats off பாரதி மணி சார் !!!



  














2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பாரதி மணி அவர்களை வாழ்த்துவோம்

சே. குமார் said...

நல்ல பகிர்வு.
அவரை வாழ்த்துவோம்...