Thursday, January 16, 2014

"தானம் " நாடகமும் , 

பொள்ளாச்சி கவிஞர் வேலுச்சாமி  அவர்களும்...!! 


த .மு.எ.ச. ஆரம்பித்த 1975 ம் ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் கம்பராயனும் பொள்ளாச்சி கவிஞர்  வேலுச்சாமியும் முக்கியமானவர்கள்!

வேலுச்சாமி கவிஞர் மட்டுமல்ல! சிறு கதைகளும் எழுதியுள்ளார் ! சிறந்த ஓவியர் ! பிரும்மாண்டமான விளம்பரங்களை எழுதுவதை தொழிலாகக் கொண்டவர் ! நாடகங்கள எழுதி ,நடித்து இயக்கியும் உள்ளார் ! 

60 ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் "செம்மலர் "குழு என்ற நாடகக்குழுவையும் நடத்தி வந்தார் !

நிஜாம் ஆட்சியை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சியை விவசாயிகள் நடத்தினர்! ஜமிந்தார்களை விரட்டிவிட்டு நிலங்களை பகிர்ந்து விவசாயிகளுக்கு  அளித்து முன்று ஆண்டு  ஆ ட்சியை நடத்தினர் ! இதனைகண்டு கொள்ள முடியாத ராஜாஜியும், படேலும் நயவஞ்சகமாக இந்திய ராணுவத்தை அனுப்பி அந்த புரட்சியை அழித்து ஒழித்தனர் ! இதற்கு அந்த ஜனனாயககாவலன் நேருவும் உடந்தை!

எதிர் புரட்சி வெற்றியடைந்ததொடு நிறுத்தவில்லை ! அதன் தாக்கம் இந்தியாமுழுமையும் வரக்கூடாது என்பதற்காக பிரச்சாரத்திலும்,அரசியல் நடவடிக்கையிலும் டுபட்டனர் !

அதற்காக ஆரம்பித்த இயக்கம் தான் "பூதான இயக்கம் " !இதன் பிதாமகர்  அந்த பவுனார் ஆசிரமத்துச் சாமியார் ஆசார்ய வினோபா பாவே !

கிராமம் கிராமாக சென்று கிராமத்து பணக்கரர்களிடம் நிலத்தை தானமாக பெற்று அதை நிலமற்ற விவசாயிகளுக்கு அளிப்பது என்பது நோக்கம் ! இதற்கு பத்திரிகைகளும்,அரசும் ஆதரவு அளித்தன ! இந்த பூமி தான இயக்கத்தில்மிக அதிக மான கிரமங்களை -சு மார் 170 கிராமங்களில் தமிழ் நாட்டில்  மட்டும்பெ்ற்றார் கள்!  விவசாயி களின் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு தமிழகம் உதவியதும் ஒரு காரணாம் ! மற்றது  அதன் அருகாமை !
இந்த பிரச்சாரத்தை எதிர்த்து அன்றைய இடது சாரி எழுத்தாளர்களும் கலைஞர்களும் எழுந்தனர் ! கிஷன் சந்தர் "தானம் " என்ற கதையை எழுதினார் 

தமிழகத்தில் வினோபா சுற்றுப்பயணம் செய்கிறார் ! கிராமத்துப் பணக்காரர்களிடம் பூமி தானம் செய்யும் படி கேட்கிறார் ! இளகிய மனம் கொண்ட மிட்டா மிராசுகள்  தங்களிடம்  உள்ள நிலங்களைக் கொடுக்கிறார்கள் ! பயிர் செய்யமுடியாத கட்டாந்தரை,பாறைகள் நிரம்பிய நிலங்கள் ஆகியவை தானமாக வரு கின்றன ! இவை சூது வாது தெரியாத நிலமற்ற விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றன !

மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட விவசாயி ஒருவன் அந்த நிலத்தினை  திருத்தி பயிர்  செய்கிறான் ! கல்லும் மண்ணும்  பாறைகளும் இருந்த நிலத்தி திருத்த பாடு படுகிறான் ! அதற்காக செலவு பண்ண பணக்காரரிடம் கடன் வாங்குகிறான் ! வட்டிக்கு வட்டியாக கடன் ஏறுகிறது ! கிணறு வெட்டி பாசன வசதியையும் பெறுகிறான் ! அவனால்  வட்டி கொடுக்க முடியவில்லை ! எப்படியும் பயிர் விளைந்தால் சாகுபடி நடந்தால் சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறான் !

பயிர் விளைந்து அறுவடை ஆகும் நேரத்தில் கடன் கொடுத்தவர் வந்து கடனுக்காக நிலத்தை எடுத்துக் கொள்கிறார் ! அவன் கொவணாண்டியாய் கூலி  வேலை செய்கிறான் ! 

முன்று ஆண்டுகள் ஆகிவிட்டது !  கேரளாவில் சுற்றுப்பயனம் முடித்து ஆசார்ய வினோபா பாவே மிண்டும் அதே கிராமத்திற்கு வருகிறார் ! கிராமத்து மந்தையில் கூட்டம் நடக்கிறது ! அந்த அத்தக் கூலியும் ஒரு ஓரத்தில் நிற்கிறான் ! 
"பூதான இயக்கம் வெற்றி பெற்று வருகிறது ! நண்பர்களே நீங்கள் இன்னும் நிலங்களைத் தாருங்கள் "  என்று சாமியார் கேட்கிறார் !

கோவனாண்டியான அவன் சோர்வுடன் சாமியார் அருகில் வருகிறான் !
" உனக்கு தானம் தானே வேண்டும் ! இந்தா எடுத்துக் கொள் !" என்று கூறி
கோவணத்தை அவுழ்த்து சாமியாரின் முகத்தில் எறிகிறான் !!

கிஷன் சந்தர் எழுதிய இந்தக்கதயைத்தான் காலம் சென்ற கவிஞர் வேலுச்சாமி கோவை  மாவட்டம்   முழுவதும்  நா டகமாகப் போட்டார் !

எழுத்தாளர்களுக்கும் ,கலைஞர்களுக்கும் கவிஞர் வேலுச்சாமி மிகச்சிறந்த முனோடி ஆவார் !!! 

    

   


1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கவிஞர் வேலுசாமி போற்றப்பட வேண்டியவர் ஐயா
அறியத்தந்மைக்கு நன்றி