Thursday, May 01, 2014

நீயா ? நானா ? எழுப்பிய கேள்வி :

ஆண்டு தோறும் " இன்கிரிமென்ட் "

எதற்கு ...?


சென்ற ஞாயிறு  நீயா ? நானா? நிகழ்ச்சியில் IT கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள் பற்றிய விவாதம் நடந்தது !

அந்த ஊழியர்கள் பணி ,வேலைபளு , வேலை நேரம் , ஒழுக்கம், மேலதிகாரிகள், பணி நிரந்திர மற்ற நிலை என்று விவாதித்தார்கள் !

பங்கு பெற்ற ஒருவர் ஆண்டுதோறும் appraisal என்ற பெயரில் ஊழியர்களின் வேலை பளுவை அதிகரிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார் !!

ஒவ்வொரு ஆண்டும் increment கெட்கிறீர்களே ? அது மட்டும் நியாயமா ? என்று கோபி நாத் கேட்டார் !

இதற்கான பதில் நிகழ்ச்சியில் சொல்லப்படவில்ல 

மேலை நாடுகளில் ஊதிய ஒப்பந்தங்கள் போடுவதற்கும் நம் நாட்டிற்கும் வித்தியாசம் உண்டு ! தற்போது வாங்கும் ஊதியத்திலிருந்து 10% அல்லது 15% கூடுதலாக தரப்படும் என்று முடிவு செய்வார்கள் ! ஒட்டுமொத்த ஊதியத்திலிருந்து கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்படும் !

நம் நாட்டில் இது கொஞ்சம் மாற்றி அமைக்கப்படுகிறது !

 மொத்த ஊதியத்தில் ஒப்பந்தகாலம் முடியும் வரை எந்த மாற்றமும் இருக்காது ! அடுத்த பேச்சு வார்த்தையில் தான் அது மாற்றப்படும்!

புதிதாக பணியில் சேருபவர் 1000/- ரூ வாங்குகிறார் ! அடுத்த ஆண்டும் அதே ஊதியம் என்பது நியாய மில்லை ! 

அவருடைய திறமை ஓராண்டு அனுபவத்தில் கூடியிருக்கும் ! இரண்டாவது ஆண்டிலவர் செய்யும் பணி அதே தான் என்றாலும் அவருடைய செயல் திறன் கூடியிருக்கும் ! அதையும் கணக்கில் கொண்டு அவருக்கு ஆண்டு வருமானத்தில் கூடுதலாக கொடுக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதாகும் !

இது  தவிர அவருடைய வளர்ச்சி ,பொறுப்பு ஆகியவையும் கூடுதலாகும் ! அவருக்கு திருமனமாகலாம் ! குழந்தைகள் பிறக்கலாம்  ! சமுக அந்த்ஸ்தும்பொறுப்பும் கூடுதலாகும் ! அவருடைய ஊதியத்தில் அதற்கும் இடம் கொடுக்க வேண்டும் ! இது ஆண்டுதோறும் மாறும் ! 

ஆண்டு increment என்பது இதனை இட்டு நிரப்ப உருவானது !

இதில் ஒரு சில ஆண்டுகளுக்கு இடையே   அவருடைய செயல்திறனும் பரிசீலிக்கப்படும் ! அதற்காக Eficiency Bar என்ற தடையையும் வைத்திருக்கிறார்கள் ! அதன் படி குறிப்பிட்ட  ஆண்டுகளுக்கு இடையே அவருடைய திறமையும் பரிசீலிக்க வாய்ப்பும் உள்ளது !

Annual increment is the right of the employee based on his ever increasing efficiency and also his increasing social responsibilities !












1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்க்ரிமெண்ட் இல்லாவிட்டால், தொழிலாளியின் வாழ்வு என்னாவது ஐயா.
அவசியம் தேவைதான்