Wednesday, May 07, 2014

மகான் நரேந்திர மோடியும் ,

ஆதி சங்கரரும் .......!!!


தினமணி பத்திரிகையில் திருமண வாழ்க்கையைப் பற்றியும் மகான்களைப்பற்றியும் பேராசிரியர் ராசகோபாலன் அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார் !

அது பற்றி எதிர்வினையாக பலர் எழுதியுள்ளானர் ! 

மனித வாழ்க்கையில் மிக அத்தியாவசியமான தேவைகள் என்று சிலவற்றை சொல்வார்கள் ! 

மூச்சுவிடாமலிருக்கமுடியாது ! தூங்காமலிருக்கமுடியாது ! உண்ணாமலிருக்கமுடியாது ! மலஜலம் கழிக்காமளிருக்க முடியாது ! தன்னுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யாமலிருக்கமுடியாது !

அப்படி இருப்பதா சொன்னால்    அவன் மகா   "பொய்யன்" !

"சங்கர மடமே " இதற்கு உதாராணம் !

நான் "ஆதி சங்கரரை" குறிப்பிடுகிறேன் ! பாதியில்வந்தவர்களை அல்ல !!

சங்கரர் எட்டாம் நுற்றாண்டில் "அவதரித்தார் "என்பார்கள் ! 

அவர்  மண்டன் மிஸ்ரரோடு நடத்திய சம்வாதம்  மிக முக்கியமானதாக  சொல்லப்படுவது உண்டு !

இந்த சம்வாதத்தில் நடுவராக இருந்தது மண்டன்மிஸ்ரருடைய தர்மபத்தினி 
"உதய பாரதி "ஆவார் !

மண்டன் மிஸ்ரரர் தோற்றதாக அறிவிக்கப் பட வேண்டுமானால் அவருடைய தர்மபத்தினியான  என்னையும் தோற்கடிக்க  வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் ! சங்கரரும் ஏற்றுக்கொள்கிறார் !

விவாதம் ஆரம்பமாகிறது ! "ஆண் - பெண் உறவு " தாம்பத்திய சுகம்" 
"அதன் உச்சம் "  உதய பாரதி கேள்விகள் கேட்க நைஷ்டிக பிரும்மச்சாரியான சங்கரர் திணறுகிறார் !

பதினைந்து நாள் தவணை கேட்டு சங்கரர் இது பற்றி அறிய புறப்படுகிறார் ! 

இறந்து போன அரசனின் உடலுக்குள் பாய்ந்து அவனுடைய இரு ராணிகளோடு கூடி   களிக்கிறார் !

சம்வாதத்தில் வெற்றி பெருகிறார் !

உதய பாரதியின் அனுமதியோடு மண்டன மிஸ்ரர் சந்நியாசம் ஏற்கிறார் !

ஆதி சங்கரரே ஏற்றுக்கொண்ட நியதியை இந்த இருபத்திஒன்றாம் 
நூற்றாண்டு மகான்கள் .......!!!

நான் சந்தேகப்படவில்லை !!

தொலை பேசியை ஒட்டுக்கேட்ட விவகாரம் ஒருபக்கம் சூடாக இருக்கிறது !

பார்ப்போம் .....!!!






 







2 comments:

அப்பாதுரை said...

தெரியாத கதை. இது போல அப்பப்போ செய்யலாமா துறவிகள்?

ஒரு ஆண் பெண்ணுடன் தான் பாலுறவு தேவைகளை நிறைவேற்றிக்க கொள்ள் வேண்டுமென்பதில்லையே.. மோடிக்கு பெண்கள் மேல் விருப்பம் இல்லதிருந்திருக்கலாம்.. ஆனால் அது என்னவோ தகாத பாவச் செயல் என்று அந்த நாளில் பயமுறுத்தி இருக்கலாம்.. அவருடைய தனி விருப்பு வெறுப்புக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவரை அறியாத கதை ஐயா