Friday, June 06, 2014

"சங்கமித்ரா  " என்ற

என் ஆப்த நண்பன் !!!


"சங்கமித்ரா " என் ஆப்த நண்பன். பெரியார் தொண்டர்களுக்கு  அவனைத் தெரிந்திருக்கும் ! தி.க வின் தீவிர மான தொண்டன் ! சமூக நீதிக்காகவும், மூட நம்பிக்கையை எதிர்த்தும் சமரசமற்று நின்றவன் ! "விடுதலை " பத்திரிகையில் எழுதி மக்கள் மனதில் இடம் பிடித்தவன் !"பெரியாரின் " அணுக்கத் தொண்டனாக ,அவருடைய இறுதிக் காலத்தில் ஆலோசகனாக இருந்தவன் !
------------------------------------------------------------------------------------------------------------
 1957-58  ம்    ஆண்டு ! அப்போது ஹைதிராபாத்தில் இருந்தேன் ! ப்ஃதெ மைதானத்திற்கு எதிரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஒருவீட்டைப்பிடித்து தங்கி இருந்தார்கள் ! "பஷீர் பாக் " அலுவலகத்தில் வேலை பார்த்த அவர்களில் "பாவாடை ராமமூர்த்தியும் ஒருவன் ! தஞ்சையின் நாகப்பட்டினம் அருகில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவன் ! மகா கெட்டிக்காரன் 1 மாலை நேரக்கல்லூரியில் பி காம் படித்தான். பின்னர் எம்.காம் படித்தான் ! பலகலைகழகத்திலேயெ முதல்மாணவனாக வந்தான் ! ஸ்டேட்  வங்கியில் அதிகாரியானான்  ! என் நணபன் பாவாடை மாற்றலாகிப் போனான் ! நானும் மாற்றலாகி மதுரை சென்றேன் ! தொடர்பு அறுந்தது !
------------------------------------------------------------------------------------------------------------

மதுரை என்னை புரட்டிப் போட்டது ! கலை இலக்கியத்துறையில் செயல்பட ஆரம்பித்தேன் ! எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டது ! சிறுகதைகள் எழுதினேன்! தொகுப்புகள் வந்தன ! அப்படி வந்த தொகுப்பு ஒன்றுக்கு லில்லி தேவசகாயம் அறக்கட்டளை விருதும் பணமுடிப்பும் தந்தது! அதன வாங்க கோயம்புத்தூர் சென்றேன் ! எண்ணப் போலவே வேறு பல எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் ! மேடையில் எங்களோடு நரைத்த தாடி மீசையோடு ஒருவர் அமர்ந்திருந்தார் ! "சங்கமித்ரா " என்று அழைத்ததும் விருதினை பெற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்றிவிட்டு அவர் அமர்ந்தார் !  "காஸ்யபன் " என்று அழைத்ததும் நான் சென்று ஏற்புரை ஆற்றிவிட்டு வந்தேன் !

------------------------------------------------------------------------------------------------------------
மதுரை வந்து நான்கு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு கடிதம்  வந்தது !
" அடேய் சாமா ! நீதான் காஸ்யபன் என்பது எனக்கு தெரியாது ! உன் பாவடை தான் "சங்கமித்ரா " என்பது உனக்குத்தெரியாது ! என் தாடி மீசை 28 ஆண்டு பிறிவு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியாமல் போயிற்று !"என்று எழுதியிருந்தான் ! தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது !

===================================================================
நாங்கள் இருவரும் ஆதி நாட்களிலேயே தீவிரமாக விவாதித்திருக்கிறோம் ! பெஇயாரிஸ்ட்களும், அம்பெத்கரிச்டுகளும், மார்க்சிச்டுகளொடு இணந்து தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் அ வன் விருப்பம் ! நான் அதனை ஏற்பதில்லை ! அவன் என்வீட்டிர்கு வந்து நாட்கணக்கில் தங்கி விவாதிதிருக்கிறான் ! நான் சென்னை சென்று விவாதித்திருக்கிறேன் !                And at last we agreed to disagree !                  
------------------------------------------------------------------------------------------------------------  "கோரா"     என்ற நாத்திவாவதியின் சீடன் அவன் ! அவருடைய கருத்துக்களை அவன் விளக்கும் போது ஒரு ஆவேசம் அவனுக்குள் வரும் !அவன் எங்கிருந்து வருகிறான் எங்கு செல்கிறான் என்பதை அனுமாநிக்கமுடியாது ! 1994லிருந்து 2000ரை தொடர்பில் இருந்தான் ! திடிரென்று தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டான்  !       
--------------------------------------------------------------------------------------------------------
முகநூலில்  கர் னால் கணேசன் என்பார் "சங்கமித்ரா"  என்று -குறிப்பிட்டிருந்தார் ! அவருக்கு கடிதம் எழுதி தொடர்பு கிடக்குமா என்று கேட்டேன் "-சங்கமித்ரா "
2012ம் ஆண்டு புற்றுநோயால் இறந்து விட்டார் என்றும் ,கர்னல் கணேசனராம 
மூர்த்தியின் இளைய சகோதரர் என்றும் அறிந்தேன் !
------------------------------------------------------------------------------------------------------------பாவாடை ராமமூர்த்திக்கு என் அறிவார்ந்த நண்பன் சங்கமித்ராவுக்கு  என் ஆழ்ந்த அஞ்சலி யை காணிக்கை யாக்குகிறேன் !!
!
 

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் நண்பர் சங்கமித்ரா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

தி.தமிழ் இளங்கோ said...

அய்யா அவர்களுக்கு வணக்கம்!
நான் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்த சமயம் எனக்கு அக்கவுண்டண்ட் ஆக இருந்த காரைக்காலைச் சேர்ந்த அப்துல்ஹமீத் என்பவர் இந்த பா.இராமமூர்த்தி (பாவாடை ராமமூர்த்தி) அவர்களைப் பற்றி சொல்லியதோடு அவர் எழுதிய ” ஒரு எருதும் சில ஓநாய்களும் “ என்ற புத்தகத்தையும் எனக்கு படிக்கக் கொடுத்தார். இந்த நூலில் ராமமூர்த்தி அவர்கள் தனக்கு வங்கியில் நேர்ந்த அவலங்களை எடுத்துச் சொல்லியுள்ளார்.

இந்த பதிவையும், கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எழுதிய கோரா என்ற பதிவினுக்கு தாங்கள் இட்ட பின்னூட்டத்தினையும் படித்தவுடன் மேலே சொன்ன நினைவுகள் எனக்கு வந்தன. நீங்கள் சொல்வதுபோல எழுத்தாளர் சங்கமித்திரா என்பது இவர்தான் என்பது உங்கள் பதிவைப் படித்த பின்னர்தான் தெரிந்து கொண்டேன். திருச்சியில் இருந்தபோது அண்மையில் இறந்தார் என்று இண்டர்நெட் மூலம் தெரிந்து கொண்டேன். திருச்சியில் இருந்தும் எனக்கு அவரை யார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்பது வருத்தமான விஷயம்.

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.