Monday, July 28, 2014


தோழர் சங்கரய்யாவும் ,

என் திரை உலக வாழ்க்கையும் ...!!!


1979 ஆண்டாக இருக்கலாம் ! சிகரம் செந்தில் நாதனிடமிருந்து கடிதம் வந்தது ! "யுக சந்தி "பிலிம்ஸ் "தாகம்" நாவலை திரைப்படமாக எடுக்கிறது ! முதல்  ஷெட்யுல் நாமக்கல்லில் தொடங்குகிறது ! உங்களுக்கு அதில் பங்கு இருப்பதால் உடனேயே சென்று கு.சின்னப்பா பாரதியை தொடர்பு கொள்ளவும் " என்று தகவல் !

" அன்னக்கிளி  " செல்வராஜ் இயக்கம் ! அன்னக்கிளி,பதினாறு வயதினிலே , கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள் என்று பாரதி ராஜா,இளையராஜா,செல்வராஜ்மூவரும்கோடம்பாக்கத்தபுரட்டிபோட்டுக்கொண்டிருந்த நேரம் !  தாகம்  நாவலை "புதிய அடிமைகள் " என்ற பெயரில் படமாக்க முடிவாகியது ! திரைகதையை இயக்குனர் அமைக்க சின்னப்பபாரதி வசனம்! இளையராஜா இசை ! தணிகை  செல்வன் பாடல்களை எழுது கிறார் ! அன்று இரவே புறப்பட்டு விட்டென் !

கதாநாயகனாக கன்னட நடிகர் குமார ராஜா ! கதாநாயகி மறந்த இ.ஆர்.சகாதேவன் மகள்விஜயலட்சுமி ! சிலோன் சின்னையா ! நிலஉடைமையாராக காஸ்யபன் ! அவரது மனைவியாக மதுரை ஜெயந்தி ! ! மற்றும் மாதுரை மில் தொழிலாளி துரைராஜ் ! 

முதல் ஷெட்யுலில் எனக்கு வேலை இல்லை ! பத்து நாளும் சின்னப்ப பாரதிக்கு உதவியாக  இருந்தேன் !

பாரதியால் முழுமையாக வசனத்தில்கவனம்செலுத்தமுடியவில்லை ! தயாரிப்பு,நிதி ஏற்பாடு என்று மூழ்கிவிட இயக்குனரே அதனையும் பார்த்துக் கொண்டார் ! "தாகம் : நாவலிலிருந்து திரைக்கதை திசை மாறி விட்டது !

நிலச்சுவான்தாராக நடிக்கும் எனக்கு கதைப்படி ஒருமகன்புத்தி சுவாதீனமில்லதவன் ! அவனுக்கு ஒரு ஏழைப்பெண்ணை ஏமாற்றி திருமணம் நடக்கிறது !மாமனாரே  அந்தப் பெண்ணை பெண்டாள்வதாக  கதை !மருமகளை சீண்டும் காட்சி ! மாமனாராக நான் !

பத்து வருடம் பதினைந்து வருடம் கோடம்பாக்கத்தில் நடிக்க  அலைந்தும்கிடக்காத வாய்ப்பு எந்த சிரமுமில்லாமல் எனக்கு கிடைத்தாலும் இப்படி ஒருகாட்சி முதன் முதலாகவருவதை எண்ணி நொந்து நூலகிப் போனேன் !

காமிரா வளையத்திற்குள் இயக்குனர் நிற்கச் சொன்னார் ! அந்த பெண்ணை பார்த்து நான் என் கண்களில் இச்சையைக் காட்டி நேருங்க வேண்டும் என்றார் ! முதலில் சுற்றிலும் பாருங்கள் ! பின்னர் நெருங்குங்கள் ! என்றார் !

ஒத்திகை ! நான் நின்றேன் ! வலது புறம் பார்த்தேன் ! ஜன்னல் வழியாக நிறையபேர் ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ! சங்கடமாக இருந்தது ! இடது புறம் பார்த்தேன் ! திடுக்கிட்டேன் ! அங்கு ஜன்னலருகில் ஒர்நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார் தோழர் சங்கரய்யா அவர்கள் ! நாடி நரம்புகள் தளர  "ஆத்தாடி நான் வரலை " என்று கூவிக்கொண்டே ஓடிவிட்டேன் !

செல்வராஜ் ஒடிவந்து என்ன என்ன என்று கேட்டார்!" தலைவர் முன்னால் இப்படி நடிக்க  முடியாது ! என்னய்யா அநியாயம் " என்றேன் ! சங்கரய்ய அவர்களின் அண்ணன் ராமானுஜம் ! அவருடைய மகன் தான் செல்வராஜ் ! "சின்னையா" என்று கூறி  கொண்டெ சென்று அவர் கதைக் கடித்தார் !

 தலைவர் எழுந்து சென்றார் ! 

"புதிய அடிமைகள் " படத்தோடு என் திரை  உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டேன் !4 comments:

அப்பாதுரை said...

ஆஹா.. இப்படி மெதுவா சொல்றீங்களே.. அந்தப் படம் கேள்விப்பட்டதில்லே.. இருந்தாலும் பாத்தாகணுமே.

kashyapan said...

அவசரப்படாதீர்கள் அப்பாதுரை அவர்களே! படம் சென்சார் ஆகி முதல் காப்பியோட 34 வருடங்களாக டப்பவுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது ! ஒரே ஒருமுறை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்களுக்காக போட்டுக் காட்டினார்கள் ! அதன் பிறகு லபரட்டறியில் இருக்கிறது ! படம் வெளிவரும் வாய்ப்பு இல்லை ! என்னிடம் ஒரே ஒரு (ஸ்டில் )துண்டு படம் இருக்கிறது ! அதுவும் லாபரட்டறியில் கெஞ்சி கேட்டு வாங்கியது ! நான் டப்பிங்க் சமயத்தில் பார்த்தது ! ---காஸ்யபன்.

அப்பாதுரை said...

ஏன்?
படம் எடுத்து முடிச்சுட்டாங்க இல்லெ?

கரந்தை ஜெயக்குமார் said...

எவ்வளவு பேரின் முயற்சி
வெளிப்படாமல் பெட்டியில்
முடங்கியது வருத்தம் அளிக்கிறது ஐயா