Monday, September 08, 2014

தலைமை நீதிபதியும் 

கவர்னரும் ........!!!

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து சிலமாதங்களுக்கு மூன் ஒய்வு பெற்றவர் நீதிபதி ப . சதாசிவம் ! 

தமிழகத்தைச் சேர்ந்த இவரை கேரள மாநில கவர்னராக நியமித்திருக்கிறார்கள் !

இந்த நியமனம் சரியில்லை என்று காங்கிரஸ்  கட்சி எதிர்க்கிறது ! வழ்க்குரைஞர்கள்  சங்கமும் எதிர்க்கின்றது !

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் சில முக்கியமான பதவிகள் உறுதி செய்யப்பட்டவைகளாகும் !

இந்தியாவின் தலைமை நிதிபதி , கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் தலைமை தணிக்கையாளர் , தேர்தல் தலைமை அதிகாரி இந்த மூன்றும் அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் உருவானதாகும் !

அப்பழுக்கற்றவர்களை இந்த பதவிகளில் அமர்த்துவத்தின் மூலம் சார்பற்ற நிர்வாகத்தை இந்திய மக்களுக்கு கொடுப்பது தான் இதன் நோக்கம் ! குடியரசுத்தலவர் கூட இவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது !

இப்படிப்பட்டவர்களை ஒய்வு பெற்றபிறகு அரசியல் ரீதியான பதவி களில் அமர்த்தாமலி ருப்பது மரபு !

!950 ஆண்டு உச்ச மன்ற நீதிபதியாக இருந்த சையது ப்ஃசல் அலி அவர்களை பண்டித ஜவர்கர்லால் நேரு அசாம் மாநில கவர்னராக நியமித்தார் !

நேருவின் சர்வதேச பிம்பம், ப்ஃசல் அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கை காரணமாக எந்த எதிர்ப்பும் எழுப்பப் படவில்லை ! ப்ஃசல் உச்ச நீதிமனற தலைமை நீதிபதியாக இருக்கவில்ல ! அப்போதும் சிலர் "பிரதமர் இதனைத் தவிர்த்திருக்கலாம் " என்ற மெலிதான குரலில் விமரிசித்தனர் !

தலமைதணிக்கை அதிகாரியாக இருந்தவர் டி .என் .சதுர்வேதி ! அவரை அடல் பிஹாரி வாஜ்பாய் கேரளாவின் கவர்னராக நியமித்தார் ! "போப்ஃர்ஸ் " ஊழலை உன்னிப்பாக கையாண்டார் என்று அவருக்கு சான்று அளித்தனர் ! ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தணிக்கை அதிகாரி என்றமுறையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் காரர்கள் கலகம் செய்தனர் ! அரசியல் சாசன பதவி  என்பதால் காங்கிரஸ் காரர்கள் அடக்கி வாசித்தனர் ! அவரை நீக்க முடியவில்லை  !   

தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் எம். எஸ்.கில் . ஒய்வு பெற்றதும் அவரை மேலவை உறுப்பினராக ஆகினார்கள் காங்கிரஸ் காரார்கள் ! அது மட்டுமல்ல ! அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தனர் காங்கிரஸ் காராரகள் !

1967 ம் ஆண்டு ஜாகிர் ஹுசைன் குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் ! அப்போது உச்ச  நீதி மன் ற  தலைமை நீதிபதியாக இருந்தவர் கே. சுப்பாராவ். அவர் தன பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடியரசுத்தலவர் பதவிக்கு போட்டியிட்டார் ! எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ! தோற்றார் என்பது வேறு சங்கதி !

ஆகப்பெரிய டி .என் சேஷன்  சிவசேனை கட்சியின் சார்பாக குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மண்ணைகவ்விய கதை அனைவரும் அறிந்ததே !

இது சரி என்றால் அத்தனை கட்சிகளும் சரியே !

தவறு என்றால் எல்லாரும் தவறு செய்துள்ளனர் !

எல்லாரும் அமர்ந்து விவாதியுங்கள் !

கோட்பாடு ரீதியான முடிவினை எடுங்கள் !

மீறாமல் இருங்கள் !