Thursday, September 04, 2014

(இது ஒரு மீள் பதிவு )


 

HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, May 03, 2010


my teacher......

இந்தியா சுதந்திரமடையும்போது எனக்கு பதினொரு வயது முடிவடையவில்லை.ப ள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளீ,நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி என்றுதானிருக்கும்.காலையில் இறைவணக்கம் உண்டு. "God save our king"என்று பாடிவிட்டுத்தான் "பொன்னார் மேனியனே" பாடவேண்டும் வாரத்தில் மூன்றுவகுப்புகள் ஓவியம்,கைவினை,நல்லொழுக்கம் என்று உண்டு. அழகேசன் சார் தான் மூன்று வகுப்புகளையும் நடத்துவார்.நீராவி,மேகம்,மழை பற்றி விளக்குவார் ஏழாம் வகுப்பில் பல நாவல்களை படித்துக்காட்டுவார்.".le miserable" என்ற பிரஞ்சு நவலின் மொழிபெயர்ப்பை ப்படித்துக்காட்டுவா.ர்.சிலசமையம் அவர் குரல் தழுதழுக்கும்.கண்ணீர்முட்டும்."uncle Toms cabin" ஐ கதையாகச்சொல்லும்போது எங்களுக்கு அழுகை வரும்.எட்டாவது படிக்கும் போது சிறு புத்தகங்களை கொடுத்து மவுனமாக படிக் கச்சொல்வார்..ஐரோப்பிய தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் அவை.அப்படித்தான் ரூ சோ,சமுதாய ஒப்பந்தம்,வால்டயர்,கரிபால்டி,மாஜினி,கிராம்வெல்.என்று படித்துதெரிந்தோம்." வீட்டிற்கு கொண்டுபொகாதே.வகுப்பிலேயே படி என்று கூறி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.கருநீல அட்டையில் தாடி வைத்த ஒரு படம் இருந்தது."காரல்மார்க்ஸ்" என்றும் எழுதியிருந்தது.அது 48-49ம் ஆண்டாக இருக்கலாம். .இன்றய என் புரிதலோடு பார்க்கும்போது அழகேசன் சார் பிரும்மாண்டமாகத்தெரிகிறார்.கதரில் ,,குட்டையாய்,கருப்பாய்,தங்கநிற மூக்குக்கண்ணாடியோடு,அந்த அழகேசன் சாரை இனி பார்க்க முடியாது. ஆனாலும் மார்க்ஸையும், அழகேசன் சாரையும் என்னால் மறக்க முடியாது.

    


1 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.