Saturday, May 16, 2015

தீரமிக்க அதிகாரிகளூம் ,

பா.ஜ.க.வின் இரட்டை நாக்கும்....!!

நம்ம டீ ஆத்துன பிரதமர் சீனா போயிருக்காரு ! அதுக்கு முன்னால சதீஸ்கர்  போயிருந்தாரு ! அங்கு "பஸ்தார் " மாவட்டம் தீவிர வாதிகள் கட்டுப்பாட்டுல உள்ளதாகும் ! அதுவும் "தந்தவாடே "  என்ற கிராமம் அவர்களின் கெந்திர மான ஊரு ! பலமுறை இங்கு போலிசாரொட மோதி இருக்காங்க ! நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ! 

பொதுவா இந்த ஊர்கள்ள அரசு ஊழியர்கள் கொஞ்சம் யோசித்து தான்   போவாங்க ! ஆனாலும் கலெக்டர்,பொளீஸ் அதிகார்கள்  செயல்படாமல் இருக்க முடியாது !

அரசியல் தலவர்கள் உலகம் பூரா சுத்து வாங்க ! இந்தபக்கம் தலை வச்சு படுக்க மாட்டாங்க ! இந்த ஊருக்கு போகணும்னு பிரதமர் மோடி விரும்பினார் ! பிரதமர் வந்தால் அந்த கூட்டத்திற்கு யாரும்பொகக்கூடாது நு தீவிரவாதிகள் சொன்னாங்க ! பக்கத்து கிராமத்துல உள்ளவங்க பொவோம்னாங்க ! அவங்களுக்கு கலெக்டர்கல் பாதுகாப்புகொடுப்போம் நு அறிவிச்சாங்க ! 

அந்த கிராமத்துல உள்ள 500 பேர துப்பாக்கிமுனைல பிடிச்சு தீவிரவாதியக:  பிணக்கைதிகளாக அறிவிச்சாங்க ! மறுநாள் பிரதமர் வரவிருக்கிறார் ! அந்த ஊர் மாவட்ட மாஜிஸ்ற்றெட் அமீத் கடாரியாவும், கலெக்டர் கே.சி  தேவ  சேனாபதியும்   தீவிர வாதிகளொடு பேச்சுசுவார்த்தை நடத்தி கிராமத்தினரை விடுவித்தார்கள் !  

மறுனால்பிரதமர அவர்களை இருவரும் விமான நிலையம் சென்று வரவேற்றனர் ! பிரதமருக்குமகிழ்ச்சி !அமித் கடாரியா கைகுலுக்கும் பொது அவர் நெஞ்சில் கைவத்து " தபாங்க் ஆபிசர் " (தீரமிக்க அதிகாரி) என்று பாராட்டினார் !

தெவ சேனாபதியும் கைகுலுக்கி பிரதமரை வரவேற்றார் !

அன்று மாலை இரண்டு அதிகாரிகளுக்கும் அரசிடமிருந்து நோட்டீஸ் வந்தது !" பிரதமர் வரும் போது அரை வர்வேற்ப்பதற்கான உடை அணியவில்லை ! கண்களில் கருப்புக்காண்ணடி அணிந்திருந்தீர்கள் ! இது மரியாதைக்குறைவான செயல் 1 விளக்கம் தருக " என்று அதில் கண்டிருந்தது !

ரெய்பூரை செர்ந்த தோழர் ஒருவரிடம் கேட்டேன் ! "பர்ஸார்" வெப்பக் காடுகள் கொண்ட பகுதி ! நீராவி பெட்டிக்குள் இருப்பது போன்ற சீதோஷ்ணா நிலைதான் எப்போதும் ! ஆகவே டிரெஸ் கோடூ  எல்லாம் பார்க்க முடியாது ! அது மட்டுமல்ல ! கலெக்டர் தேவ சேனாபதி kOட்டை கையில் வாத்திருந்தார் ! வெப்பம் தாங்காமல் போட்டுக் கொள்ளவில்லை !" என்று விளக்கினார் ! 

வழக்கில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்று ஒரு கோஷ்டி சொல்லும் !இன்னோரு கோஷ்டி வேண்டாமென்று சொல்லும்

பிரதமர் தீரமிக்க அதிகாரி என்பார் ! முதல்வர் அதே அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்புவார் !

இவர்களுக்கு வாயும் பேசும் ! 

--டி யும் பேசும் .....!!!


0 comments: