Wednesday, May 13, 2015

"மனு தர்மம் " வருவதற்கு முன்பே சாதி இருந்ததா ?

சமிபத்தில் அருந்ததி ராய் அவர்கள் தமிழகம் வந்திருந்தார்கள் ! வழக்கம் போல கம்யூணீஸ்டுகளை குறிப்பாக மார்க்சிஸ்டுகளை விமரிசித்து விட்டு போனார் !

பொது வாக "கம்யூனிஸ்டுகளை கடி"ப்பவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் தங்கள் நிலையை மாற்றீக் கொள்வார்கள் !

தமிழகம் வந்த அருந்ததி ராய் அவர்கள் " வர்க்கத்தையும் சாதியையும் " பார்ப்பதில் கம்யூனிஸ்டுகள் தவறிழைத்து விட்டார்கள்" என்று என்று கூறிவிட்டு போயுள்ளார் ! 

"When arguments fails you abuse " என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு ! அதுதான் நடந்துள்ளது !

சாதிகளின் தோற்றம் என்று ஒரு  நூல் ! "குணா"என்பவர் எழுதியது ! பல ஆண்டுகளுக்கு முன் எழுதியது ! அதன் அடிப்படையான  வாதத்தை ஏற்கமுடியாவிட்டாலும் அந்த நூலில் அவர் சொல்லியிருக்கும் சில விவரங்கள் வெளிச்சம் தருபவை ! 

இர்ஃபன் ஹபீப் என்ற வரலாற்றூ பெராசிரியர் "ஜாதி " என்ற வார்த்தை முதன் முதலாக பௌத்த கிரந்தங்களில் குறிப்பிடப்படுவதாக கூறுகிறார் ! 

சமிபத்தில் கட்டுரையாளர் ஒருவர் " ஆண்டான் அடிமைச்சமுதாயத்திலயே சாதியப்பிரிவினை தோன்றி விட்டதாக கூறியுள்ளார் !

இது பற்றி என்னுடைய சந்தேகங்களை தீர்க்க மார்க்சீய அறிஞரும் களத்திலிரங்கி பாணீயாற்றுபவருமான  பெரியவர் ஒருவரை தொடர்புகொண்டேன் !

"உண்மைதான் ! ஆண்டான் அடிமை சமூகத்திலேயே  சாதி தோன்றிவிட்டது ! அது பின்னர் வந்த நிலபிரபுத்துவ சமூகத்தில் கெட்டிப்படுத்தப்பட்டது ! வளர்ச்சிப் போக்கீல் மனுதர்மமாக உறுதிப்படுத்தப்பட்டது !" என்று விளக்கினார் !

இது பற்றீ இ.எம்.எஸ் அவர்கள் ,வரலாற்றாளர் கோசாம்பி,தெவி பிரசாத் சட்டோபாத்யாயா ஆகியோரை படியுங்கள் என்று கூறீனார் ! 

"இந்தியாவில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளது !" என்று கொள்வது மிகவும் சரி !

இந்த சிக்கலை உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவார்த்தமாக அணுக வேண்டும் !

அணுகுவோம் !!!

  

2 comments:

www.eraaedwin.com said...

ரெண்டும்தான் கெட்டிப் பட்டுக் கிடக்கு

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா